Sunday 5 August 2012

எண் கணிதத்தின் தொன்மை

    
அகரா முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள் 1)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392)
-திருவள்ளுவர்.

வள்ளுவரின் இவ்விரு குறள்கள் மட்டுமல்லாது
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும்.
- மூதாட்டி ஔவையார்.
எண்ணெழுத்திகழேல்
- பழமொழி.
 
திருவள்ளுவரின் திருக்குறளும், ஔவையாரின் பொன்மொழியும், பழமொழியும், எண் கணிதத்தின் தொன்மையை நினைவுக் கூறுகின்றது. எண் கணிதம் ஓர் அற்புதக்கலை. இக்கலையை உதாசீனப்படுத்தியும் அறியாமையாலும் அழிபவர்கள் பலகோடி பேர் அந்த அளவிற்கு எண் கணிதம் நம் வாழ்க்கையோடு ஒன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இக்கலை ஏதோ பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டதன்று. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் கணக்கிட்டு கூறும் வாழ்க்கை சூத்திரம். ஆம்! எப்படி கணிதத்தில்
(A+B) ² = a²+2ab+b² என்று கூறுகின்றோமோ, அதே போல் நம் வாழ்க்கையையும் ஒரு சூத்திரம் வடிவில் கொண்டு வந்து நம்மை ஒழுங்குப்படுத்தக்கூடிய அமைப்பாகும்.

உன் வாழ்க்கை உன் கையில் என்பது முற்றிலும் எண் கணிதத்திற்கே பொருந்தும் உன்னுடைய பெயரே உனது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது.
எண் கணிதம் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும். அதுவும் தமிழகத்தில் மட்டுமே தோன்றியிருக்க வேண்டும். எதை வைத்து கூறுகின்றோமென்றால் முன் கூறிய குறள் எழுதிய திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் அக்காலகட்டத்திலேயே எண்ணையும் எழுத்தையும் அறிந்து அதன் முக்கியதுவத்தை தனது குறளில் குறிப்பிட்டுள்ளார். எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களைப் போன்றது என குறிப்பிடுகின்றார். எண் என்பதை வள்ளுவர் பிறந்த தேதியினுடைய எண் என்றும், எழுத்து என்பதை தலையெழுத்து, பெயர் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது பிறந்த தேதியுடைய எண்ணும் தலையெழுத்தாகிய பெயரும் ஒன்றையொன்று சார்ந்து சிறப்பாக அமைந்தால் இரு கண்கள் எப்படி ஒளி பொருந்தியுள்ளதோ அதேபோல் நம் வாழ்க்கையும் ஒளி பொருந்தி இருக்கும் என்பதை குறிப்பிடுகின்றார். அதாவது எண்களாகிய பிறந்த தேதி எண்ணும், பெயரும் ஒன்றையொன்று சார்ந்து சிறப்பாக இல்லாவிடில் இரு கண்களும் ஒளியிழந்து பார்வை குறைவாக இருப்பதுபோல் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்ததாகவும் கஷ்டப்படுவதாகவும் துன்பத்தை தருவதாகவும் இருக்குமென குறிப்பிடுகிறார்.

இந்த ஒரு குறளை மட்டுமே வைத்து எண் கணிதத்தின் தொன்மையை கூறவில்லை அவர் தனது பெயரிலும் திருவள்ளுவர் என்ற பெயருக்கு 46 எண்ணை அமைத்துக் கொண்டுள்ளார்.

THIRUVALLUVAR
4512661336612=46
அதன்படி இவருக்கு நிகரான புலவர் இன்னும் கூட தோன்றவில்லை எனலாம். ஏன் என்றால் அத்தகைய சிறப்பு வாய்ந்த 46 எண்ணை தனக்கு சூட்டி கொண்டுள்ளார். இந்த 46 எண்ணின் உடைய பலன் யாதெனில் எத்துறையில் இவர் நுழைந்தாலும் அத்துறையில் மன்னராக விளங்கக் கூடியது. உயர்ந்த புகழையும் தரக்கூடியது. ஆகவே திருவள்ளுவர் தனது பெயருக்கு 46 எண்ணை அமைத்துக் கொண்டுள்ளார்.

அதே போல் திருவள்ளுவர் தனது நூலிற்கு திருக்குறள் என்ற பெயரும் எண் கணித முறைப்படியே 34 எண்ணை அமைத்துள்ளார்.

THIRUKKURAL
45126226212=34
அதாவது 34 எண்ணினுடைய பலன்படி எக்காலமும் தன் தனித்தன்மையை வெளிப்படித்திக் கொண்டே இருக்கும் என்பதாகும். அதே போல் திருக்குறள் இன்றய காலம் வரை அதனுடைய தனித்தன்மை வெளிப்படுத்தி கொண்டே உள்ளது. காலத்தால் பழையது இக்காலத்திற்கு ஏற்ற ஏதாவது நாகரீக காலத்தில் இன்னும் விஞ்ஞான அதிவேக வளர்ச்சிக் காலத்திலும் அது விலக்கப்படாத நிலையில் தனித்தன்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இதிலிறிந்து திருவள்ளுவரின் குறள் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது உண்மையானால் எண் கணித தோற்றமும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் ஐயமில்லை. மேலும் பெயரை நம் முன்னோர்கள் நட்சத்திரத்தில் வலியாக "இவ்வகை எழுத்தில் ஆரம்பிக்கும்படி பெயர் வை" என்னும் அளவிற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றம் கூற இயலாத அளவிற்கு முந்தயது. மேலும் வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை கிரகங்களின் வாயிலாக பிரித்து வைத்துக் கொண்டதும் நம் தமிழகத்தில் தான். இங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. தமிழ்மொழியின் தோமையை குறிப்பிடும்பொழுது கல்தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் தமிழ்மக்களின் தொன்மையை உணரலாம்.

தொலைநோக்கு கருவிகள் பல வந்தும் விஞ்ஞான பூர்வமாக இன்னும் கிரகங்கள் அனைத்தையும் முழுவதுமாக காணமுடியாத நிலையில் அன்று நம் ஞானிகளும். சித்தர்களும், தன் அகதொலைநோக்கி பார்வை மூலம் அனைத்து கிரகங்களையும் கண்டு அவை நகரும் நிலைகளையும் அறிந்து தன்மைகளையும் நம் உடலோடு, உயிரோடு, மனமோடு ஒப்பிட்டு கூறியுள்ளனர். அத்தகைய ஞானிகளால் தான் இந்த எண் கணிதமும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து எண்கணிதம் எங்கோ வெளிநாடுகளில் தோன்றியதல்ல, இங்கு அதுவும் தமிழ்நாட்டில் தான் தோன்றியுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இன்றைய காலத்தில் உலகமொழியாக உள்ள ஆங்கிலத்தில், தமிழ் எண் கணிதத்தை சார்ந்து தொகுக்கப்பட்டது. தொன்று தொட்ட காலகட்டமுதல் இன்று வரை ஒரு குறிப்பிட்ட சாரர்கள் மட்டுமே பயபடுத்தி வந்த கலை இன்று அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்றால் இப்பொழுது வாழும் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு "தங்க புதையல்" எனலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு எண் கணிதம் நம் வாழ்க்கையோடு ஒன்றி நம்மை வழி நடத்தி கொண்டு செல்கின்றது. எண் கணிதம் ஒரு கலங்கரை விளக்கம் எனலாம். ஏனென்றால் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கும் நமக்கு கரையை காட்டக்கூடியதான விளக்கு போன்றது அதாவது நிம்மதியையும் நம் பாதையையும் நினைவுப்படுத்தக்கூடியது.

No comments:

Post a Comment