Wednesday, 15 August 2012

ஜோதிஷம்


சில கிரகங்கள் சில நேரங்களில் மனித இனத்திற்கு ஏன் கெடுதல்களை புரிகின்றன? அவைகள் விரோதிகளாக செயல்படுவதில் ஏதாவது அர்த்தம் உண்டா ? இந்த கேள்விகளுக்கு நேரிடையாக பதில் தர இயலாது. கிரகங்களின் தன்மைகள் என்ன, அவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினால் சில விஷயங்கள் தெளிவாக புலப்படும். பிறகு இந்த கேள்விகளுக்கும் சரியான சமாதானங்கள் கிடைக்கும். ஜோதிஷத்தின் இரு பெரிய தூண்களாக விளங்குவது 1. வான சாஸ்திரம் 2. கணிதம் பிரபஞ்சத்தில் சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் (பூமி உள்பட) அவைகள்பட சில கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. கிரகங்களுக்குள்ள காந்த சக்தி, ஈர்ப்பு சக்தி அண்டவெளியில் (ப்ரபஞ்சம்) பல விளைவுகளை நொடி தோறும் ஏற்படுத்திக் கொண்டிரள் செல்லும் பாதை, சஞ்சாரத்தின் கால அளவு ஆகியவை பற்றி துணையாக இருப்பது கணிதம். பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமிக்கு சமீபமாக இருப்பதும் நடுநாயகமாக இருப்பதும் சூரியன்.

 பூமி உுக்கின்றன. இத்தகைய விளைவுகள் ஜீவராசிகளின் தன்மைக்கு ஏற்றபடியும் காலத்திற்கு ஏற்றபடியும் மாறுபடுகின்றன. ஒரு சமயத்தில் நன்மையாகவும் ஒரு சமயத்தில் தீமையாகவும் அமைகின்றன. மழை பெய்கிறது. ஏரிகுளம் நிரம்புகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக் கெடுத்து பாதிப்புகளை தோற்றுவிக்கின்றன. ஒருவன் சுமந்து வரும் வெற்றிலை முட்டைக்கு அது அநுகூலமாக இருக்கிறது. மற்றொருவன் சுமந்து வரும் உப்பு மூட்டை கரையத் தொடங்குகிறது. இத்தகைய பாகுபாடுகளை வானசாஸ்திரம் கூறாது. ஆனால் ஜோதிஷம் இவற்றை தெளிவுபடுத்தி கூறும் ஆற்றல் உடையது.

கிரகங்களின் அமைப்பு (பரிணாமம்) அவைகள் செல்லும் பாதை. அதற்கான கால அளவுக்கேற்றபடி அவைகளின் தன்மைகள் (செயல் பாடுகள்) அமைவதால் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கிறது. கிரகங்கள் தங்களுக்கென்று சிநேக பாவம், விரோத பாவம் கொண்டுள்ளதாக நாம் கருதக்கூடாது. பூமியில் வாழும் ஜீவராசிகள் பல எதிர்பாராத நிகழ்ச்சிகளை எதிர்கொள்வது இன்றியமையாததாகி விடுகிறது. அதற்கான காரணங்களும் உள்ளன. பூமியைக் காட்டிலும் சூரியன் 13,30,000 மடங்கு பிரம்மாண்டமானது. பூமியின் ஆகர்ஷண சக்தியை விட சூரியனின் ஆகர்ஷண சக்தி 28 மடங்கு அதிகமானது. சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதும் அதன் அருகில் இருப்பதுமான கிரகம் புதன்.

 இது பருமனில் பூமியின் பதினாறில் ஒரு பங்கு சிறியது. அதற்கு அடுத்ததாக சுக்கிரன் பூமியைக் காட்டிலும் சற்றே சிறியது. இதன் வெப்பம் பூமியைக் காட்டிலும் 90 பங்கு கூடியது. சூரியனை சுக்கிரன் கிரகத்திலிருந்து பார்த்தால் பூமியில் தெரிவதை விட இரு மடங்கு பெரியதாக தோன்றும். பூமி சூரியனை சுற்றி வர சந்திரன் பூமியை சுற்றி பூமியோடு சூரியனையும் சுற்றி வருகின்றது. இதே பாதையில் இருபத்தேழு நக்ஷத்திர மண்டலங்களையும் கடக்கிறது. சந்திரனுக்கு சுய வெளிச்சம் கிடையாது. சூரியனிடமிருந்து பெறும் வெளிச்சம் சந்திரன் மேல் ப்ரதிபலிக்கப்பட்டு பூமியில் காணப்படுகிறது. இவைகள் முறையே வளர்பிறை, தேய்பிறையாக மாறு படுகின்றன. மேலும் செவ்வாய், குரு, சனி கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்கள் வெகு தொலைவிலிருந்தாலும் அவைகளிலிருந்து வெளிப்படும் காந்த சக்தி, ஈர்ப்பு அலைகள் பூமியில் வாழும் ஜீவராசிகளின் மேல் தோற்றுவிக்கும் விளைவுகள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் புலப்படாதிருந்தாலும் அவைகள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிஷ சாஸ்திரம் ஒன்றின் மூலமாகத் தான் அதை விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்பு நாம் பொதுவாகத் தெரிந்து கொண்டது. சுப கிரகம் சொந்த வீடு, நட்பு வீடு என்று அமைவது அநுகூலம் பாபகிரகம், எதிரி வீட்டிலிருப்பது போன்றவை கெடுதல்களை விளைவிக்கும். மேலெழுந்த வாரியாக பார்ப்பதற்கு அவ்வாறு தோன்றும். முறையாக அவற்றைக் கணக்கிட்டால் சில சமயங்களில் அதுவே நேர் எதிரிடையாக அமையும். ஒரு கிரகம் ஒரு ராசியில் வீற்றிருக்கும் போது அது ஒரு குறிப்பிட்ட ‘அவஸ்தைக்கு ஆளாகிறது. இந்த அவஸ்தைகள் பின்வருமாறு

 1. பால்ய அவஸ்தை 2. கௌமார அவஸ்தை (குமார) 3. யௌவன அவஸ்தை 4. விருத்த அவஸ்தை (முதுமை) 5. மிருத்யு அவஸ்தை. இவற்றில் முதல் மூன்று அவஸ்தைகள் நன்மை தரக்கூடிய ஒளிமிக்க பாதைகளாகும். மற்ற இரண்டும் தீதான பலனை தரக்கூடிய இருண்ட பாதைகளாம். இந்த விதி ஒற்றைப்படை ராசிகள், ஆண் ராசிகளுக்கு மட்டும் பொருந்தும். பன்னிரண்டு ராசிகள் 360 பாகை (degrees)களில் உள்ளடக்கி இருக்கின்றன. ஒவ்வொரு ராசியின் பரிணாமம் 30 பாகைகள். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ஆகியவை ஒற்றைப்படை ராசிகள், ஆண் ராசிகள் எனப்படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை இரட்டைப்படை ராசிகள், பெண் ராசிகள் எனப்படும். இந்த வகையைச் சேர்ந்த ராசிகளில் அவஸ்தைகள் இவ்வாறு தொடங்குகின்றன. 1. மிருத்யு அவஸ்தை 2. விருத்த அவஸ்தை 3. யௌவன அவஸ்தை 4. கௌமார அவஸ்தை 5. பால்ய அவஸ்தை. இவற்றில் முதல் இரண்டு அவஸ்தைகளல் அசுப பலன்கள் இதர மூன்று அவஸ்தைகளில் நன்மைகள் பயக்கும்.

 ஒரு ராசியில் ஆறு வித அவஸ்தைகளில் நன்மைகள் பயக்கும். ஒரு ராசியில் ஆறு வித அவஸ்தைகளும் தலா ஐந்து பாகைகளை உள்ளடக்கி இருக்கிறது.
ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்யும்பொழுது ஒரு கிரகம் எந்த ராசியில் இருக்கிறது ஒற்றைப் படையா அல்லது இரட்டைப் படையா ? அந்த கிரகம் எந்த பாகையில் இருக்கிறது? அதற்குரிய அவஸ்தை கிரகத்தினால் நம்மை, தீமை எவ்வாறு உள்ளது என்பதைக் கணக்கிடலாம். கிரகங்களின் அவஸ் தை நிலைகள் வேறு முறையிலும் கணக்கிடப்பட்டுள்ளன.

1. நட்பு விடு - பால்யம்
2. சொந்த வீடு - கௌமாரம் (குமார) 3. உச்ச வீடு (அல்லது திரிகோணம்) - யௌவனம் இதேபோல் பகை வீடுகள், நீச வீடுகள் முதுமை, மிருத்யு அவஸ்தைகளை சாரும். ஆய்வு முறை தசா புக்தி காலங்களில் கிரகங்களினால் நேரும் பலன்கள் அதற்குரிய அவஸ்தைகளைப் பொறுத்துள்ளன. மேலும் அவஸ்தைகள் பற்றி ஆய்வுகள் தொடர்கின்றன.

Jataka, I
Jataka 2
ஒரு ஜாதகத்தில் 12 ராசிகள் உள்ளன. அவைகளை வீடுகள் என்றும் கூறுவர். இதன் அமைப்பை ஒரு ராஜ்ய பரிபாலனம் போன்று உள்ளது.மேலே காட்டப்பட்ட ஜாதக அமைப்பில் சிம்மராசியில் வீற்றிருப்பவர் சூர்யன். அவர் ராஜா. அவருக்கு வலதுபுறத்தில் கடகராசியில் வீற்றிருப்பது சந்திரன். அதற்கு ராணி அந்தஸ்து. சந்திரனுக்கு வலதுபுறம் மிதுனராசி இளவரசன் புதன். சூர்யனின் இடதுபுறம் கன்னிராசி அதுவும் புதனின் இருப்பிடம். ராஜா, ராணி இரு இளவரசர்கள் காட்சியளிக்கிறார்கள். ராஜதர்பாரில் இளவரசனுக்கு அடுத்த ஸ்தானம். மந்திரிகள் சுக்கிரன் இருபுறமும் அடுத்ததாக இருப்பது வாகன ஸ்தானம். நான்காவது இடம். இதில் இடம் பெறுவது செவ்வாய். அதன் அந்தஸ்து தளபதி. அதற்கும் அடுத்ததாக இருப்பது ஐந்தாவது வீடு. அதில் இடம் பெறுவது குரு கிரகம். அறிவுக்கு அதிபதி. ஆறாவது இடங்களில் இருப்பது சனி கிரகம். அதன் அந்தஸ்து ஊழியம் செய்வது. வேலைக்காரன்.

சூர்யனின் சொந்த வீடு சிம்மம் ஒன்று தான். சந்திரனின் சொந்த வீடு கடகம் ஒன்று தான். புதன் கிரகத்திற்கு சொந்த வீடுகள் இரண்டு - மிதுனம், கன்னி, சுக்கிரனின் சொந்த வீடுகள் இரண்டு - ரிஷபம், துலா, செவ்வாயின் சொந்த இடங்கள் இரண்டு மேஷம், விருச்சிகம். குருவின் சொந்த வீடுகள் இரண்டு - மீனம், தனுஸ். சனியின் சொந்த இடங்கள் இரண்டு - கும்பம் மகரம். ஜாதகத்தில் ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலிருந்தால் அதற்கு பலம் கூடுதல். ஜாதகருக்கு அது அநுகூலம்.ஒரு ஜீவனுக்கு ஆத்மா எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அது போல ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் சூர்யனின் நிலை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்ததாக சந்திரன் மனதின் நிலையை தெரிவிக்கிறது. செவ்வாய் அவனுடைய பலத்தைக் காட்டுகிறது. புதன் ஜாதகருடைய பேச்சுத்திறனை வெளிப்படுத்துகிறது. குரு ஜாதகருடைய அறிவுத்திறனையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிறது.

சுக்கிரன் காமம். ஆசைகளை வெளிப்படுத்துகிறது. சனி ஜாதகருடைய வறியநிலை அவலநிலைகளை அறிவிக்கின்றன. கிரகங்கள் பலமாக இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் மிகுதியாக இருக்கும். இவற்றில் சனி கிரகம் விதி விலக்கு. சனி கிரகம் பலத்திருந்தால் கேடுகள் குறைவாக இருக்கும். சனி பலமிழந்திருந்தால் தொல்லைகள் அதிகம். பொதுவாக கிரகங்களின் பலன்கள் அந்தந்த தசாபுக்தி காலங்களில் நன்கு வெளிப்படும். குழந்தை பிறப்பதனால் ஏற்படும் ஆனந்தத்திற்கும் பிறந்த குழந்தை இறப்பதனால் ஏற்படும் துக்கத்திற்கும் இணை ஏதும் கிடையாது. ஜாதகருடைய ஆரோக்யம், செல்வம், முன்னேற்றம் ஆகியவைகளுக்கு குரு கிரகம் காரணமாகிறது. ஆதலால் குருவின் சேர்க்கை, பார்வை கிட்டினால் ஜாதகருக்கு மிகுந்த பலன்கள் கிட்டுகின்றன. சனி கிரகம் பலவிதமான தொல்லைகளுக்கு காரணமாக இருக்கிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் எவ்வளவு முக்கியமோ அதுபோல சூரியன், சந்திரன் நிலைகள் பலம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஜாதகரின் வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது. இந்த இரண்டு கிரகங்களில் சந்திரன் மிகவும் முக்கியம். மனம் செல்லும் வழியில் தான் ஒருவன் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்கிறான். மனதிற்கு அதிபதி சந்திரன். ஒவ்வொருவனுடைய வாழ்க்கை தரத்தின் ஏற்றத்திற்கும வீழ்ச்சிக்கும் அவனுடைய மனம் காரணமாகிறது. சந்திரன் பாபியாக இருப்பது கிருஷ்ண பக்ஷத்தில் குறிப்பாக 14, 15வது தினத்தில். மற்றபடி பொதுவாக சந்திரன் சுபகிரகம். சந்திர மாதம் அமாவாசை கழிந்து பிரதமை முதல் தொடக்கம். அப்போது சந்திரனின் பலம் சுமார். அதற்கு அடுத்த பத்து நாட்களில் சந்திரனின் சுபபலன்கள் வெகுவாக கூடியிருக்கும். அப்போது சுபகிரகங்களின் பார்வையினால் கூடுதல் பலன்கள்.

No comments:

Post a Comment