Wednesday 15 August 2012

வீட்டில் பண பெட்டியை எங்கே வைப்பது?

 
 
வீட்டில் பண பெட்டியை எங்கே வைப்பது?

நான் கஷ்ட்டப்பட்டு உழைக்கிறேன், எவ்வளவு பணம் வந்தாலும் தங்க மாட்டேங்குது. அதுக்கு ஒரு செலவு தயாரா இருக்கு - ஒருவர்
எனக்கு தேவைகள் அதிகமா இருக்கு, அதனால எப்பவும் பற்றாக்குறைதான் -மற்றொருவர்
நம்ம விட்டுல மகாலக்ஷ்மி தங்கிக்க இடவசதி இல்லையோ என்னவோ - ஒரு நக்கல்
இப்படி ஆளுக்கு ஒரு அபிப்ராயங்கள் இருக்கிறது. இதன் சாராம்சம் என்ன என்று பார்த்தால் சேமிப்பு இல்லை என்பதை தவிர வேறு இல்லை.
உங்கள் விட்டில் எப்பவும் காசு பணம் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம் என்ன என்பதை பார்போம்.
உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.
வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் மாதிரி போய் கிட்டே இருக்கும். வரவுக்கு மிறிய செலவு வரும்.
தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும்
உங்கள் விட்டு பூஜை அறையில் சாமி படங்ககளை மேற்கு திசை நோக்கி .வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும்.
அட சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்திர்களானால் பணம் வருவதும் போவதும்மாக இருக்கும் தங்கவே தங்காது.
பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு.

No comments:

Post a Comment