Sunday, 12 August 2012

சீன ஜோதிடம் வீர டிராகன்

வீர டிராகன்
நேரம்: காலை 7.00 முதல் 9.00 வரை
உரிய திசை: கிழக்கு/தென் கிழக்கு
உரிய காலங்கள்: வசந்த காலம்/ ஏப்ரல் மாதம்
நிலையான மூலகம்: மரம்
யின்/யாங் யாங்

http://library.thinkquest.org/05aug/00514/images/Chinese-Dragon-Green-17-large.jpgடிராகன் என்பது சிங்கம் போன்ற தலையும் பாம்பு போன்ற வளைவான நீண்ட உடலும் கொண்ட விலங்கு. கடவுளர்கள் நடத்திய ஆற்றைக் கடக்கும் போட்டியில் எலி முதலிலும் எருது இரண்டாவ தாகவும் புலி மூன்றாவதா கவும் முயல் நான்காவதா கவும் வந்து முதல் நான்கு வருடங்களின் சின்னங்களாகத் தெரிவு செய்யப்பட் டன. வீரமும் பலமும் கொண்ட டிராகன், வாயில் நெருப்பைக் கக்கிக்கொண்டே ஐந்தாவதாகப் பறந்து வந்து நின்றது கடவு ளர்களுக்கு ஆச்சரியத் தைத் தந்தது. காரணம் கேட்டபோது, டிராகன் உலக உயிர்களுக்காகவும் மக்களுக்காகவும் மழை யைத் தரவேண்டி இருந்ததால் சிறிது பின்தங்கியதாகவும் கரையை வந்தடையும் சமயம், முயல் மரக்கட்டையைப் பிடித்துத் திண்டாடிக் கொண்டிருந்தப் பார்த்து, அது கரைசேர உதவ எண்ணி ஒரு பெரிய மூச்சை அதன் பக்கம் விட்ட பின் வந்ததால் தாமதமாகிவிட்டது என்று கூறிய தாம். இதைக் கேட்ட கடவுளர்கள் மகிழ்ந்து அதை வாழ்த்தி, வருடச்சக்கரத்தின் ஐந்தாவது சின்ன மாகத் தெரிவுசெய்தார்கள் என்பது கதை.
1904, 1916, 1928, 1940, 1952, 964, 1976, 1988, 2000 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் டிராகன் வருடத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொடரை வாசிப்போர், தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர் என்பதை முந்தைய தொடர்களின் மூலம் அறிந்திருப்பீர்கள். கீழ்க் கண்ட திகதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் டிராகன் வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பிப்பிரவரி 16, 1904 - பிப்பிரவரி 03, 1905
பிப்பிரவரி 03, 1916 - ஜனவரி 22, 1917
ஜனவரி 23, 1928 - பிப்பிரவரி 09, 1929
பிப்பிரவரி 08, 1940 - ஜனவரி 26, 1941
ஜனவரி 27, 1952 - பிப்பிரவரி 13, 1953
பிப்பிரவரி 13, 1964 - பிப்பிரவரி 01, 1965
ஜனவரி 31, 1976 - பிப்பிரவரி 17, 1977
பிப்பிரவரி 17, 1988 - பிப்பிரவரி 05, 1989
பிப்பிரவரி 05, 2000 - ஜனவரி 23, 2001

இனி இந்தத் தொடரில் டிராகன் வருடத்தைச் சேர்ந்த வர்களின் குணாதிசயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஐந்தாம் இடத்தில் இருக்கும் டிராகன் வருடத்தில் பிறந்தவர் கள் மிகவும் அதிர்ஷ்டச் சின்னத்தில் பிறந்தவர் களாகக் கருதப்படுகின் றனர். இது முக்கியமான, மிகவும் சக்திவாய்ந்த சின்னமாகக் கருதப் படும் ஒன்று. டிராகன் என்பது உண்மையான விலங்கு கிடையாது. இது கற்பனையில் தீட்டப்பட்ட, உருவாக் கப்பட்ட விலங்கு. சீனாவில் டிராகன், சிங்கத்திற்கு இணையான சக்தி பொருந்திய விலங் காகக் கருதப்படுகின்றது.
டிராகன்வாசிகள் நெருப்புப் பந்துகள் என்றே சொல்லலாம். அவர்கள் உடல் உரம் கொண்டவர்கள். அவர்களுக்கு வீரம் உடன் பிறந்த ஒன்று. டிராகன் வாசிகளில் அகந்தையும் அகங்காரமும் கொண்ட வர்களும் உண்டு. பித்தர்கள். அதிகாரம் செலுத்து பவர்கள். எந்தச் சமயத்திலும் உதவிக்கரம் நீட்ட வல்லவர்கள். விட்டுக்கொடுக்கக் கூடியவர்கள். அவர்கள் எதையும் நேரடியாக எதிர்கொள்ளத் துணிவார்கள், பேசுவார்கள்.
வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள். வாழ்க்கையை முழுமையாக, மிகவும் ஆடம்பரமாக அனுபவிக்க எண்ணுபவர்கள். டிராகன்வாசிகளுக்கு வாழ்க் கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும். போராட ஏதாவது காரணம் வேண்டும். அடைய வேண்டிய இலக்கு வேண்டும். எதிலுமே ஆர்வம் காட்டாத டிராகன் வாசிகள் மிகவும் கவலைக்கிடமானவர்கள்.
எப்போதுமே ஓடிக்கொண்டே இருப்பவர்கள். அந்த ஓட்டத்தில் தனக்கென ஒரு கூட்டத்தையும் கொண்டு செலுத்தக்கூடியவர்கள். தங்களது உயர்ந்த கொள்கையின் மேல் பற்றுக்கொண்டு, அதை அடைய முயற்சி செய்பவர்கள்.
அவர்கள் பேச்சும் செயல்களும் அனைவ ரையும் கவரத்தக்கவை. ஏதாவது கூட்டத்தில் டிராகன்வாசிகள் நுழைந்தால், உடனே அதைக் கண்டுபிடித்துவிடலாம். அவர்கள் கூடவே அவர் களது சுவாரசியமான செயல்களும் பேச்சும் கூட்டத்தினர் மத்தியிலும் ஊடாடி, அவர்கள் இருக் கும் இடத்தைக் காட்டிக்கொடுக்கும். அவர்களது மென்மையான உணர்வுபூர்வமான செயல்கள், அவர்களைத் தெரிந்தவர்கள் மத்தியில் விரும்பத் தக்கவர்களாக உயர்த்தும்.
மிகுந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் எப்போதும் வெளிக்காட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். அதனால் அவர்களது நேர்மையும் துடுக்குத்தனமும் அனைவரையும் அவர்களிடத் தில் நம்பிக்கை கொள் ளச் செய்யும்.
எப்போதுமே அவர்கள் பேச்சு உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகளாக இருக்கும். அவை உண்மையாகவும் கபடமற்றும் இருக்கும். அவர்கள் முற்போக்கானவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் இயற்கையில் ஆட்டமும் வேகமும் கொண்டவர்கள். எதையும் அசைக்கவல்ல மனிதர் கள். தனக்கு வேண்டியதைப் பெற எந்தவொரு வெட்கமும் படாமல் செயற்பட வல்லவர்கள். அவர்கள் அதிகாரத்தன்மையே அவர்களுக்குப் பல சமயம் எதிரியாகி விடும் வாய்ப்பு உண்டு. அவர் கள் சில நேரங் களில் ஆழ்ந்து சிந் திக்காமல் பேசி, எதிரா ளியின் மனதைப் புண் படவைக்கும் தன்மை உடையவர்கள்.
தங்கள் முட்டாள்தனமான செயல்கள் மற்றும் முடிவுகளால் வருத்தப்பட்டாலும், உடனே அதை விட்டு வெளியே வர முயற்சி செய்வார்கள். தங்களது தவறை உணர்ந்து மேலும் அதிக தன்னம்பிக்கையுடன் உடனே செயற்படக்கூடியவர்கள். அவர்களது புத்திசாலித் தனமும் பிடிவாதமும் அவர் கள் எந்தத் துறைக்குச் சென் றாலும் அதில் பிரகாசிக்கச் செய்யும். அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்றே சொல்லலாம். எதிர்க்க வேண்டிய சமயங்களில், விதியை நொந்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள், எதிர்க்கத் துணிவார்கள்.
அவர்கள் வேலை செய்வதிலும், அதிகாரம் செய்வதிலும் திறமை வாய்ந்தவர்கள். மேல் தட்டில் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மிக உயர்ந்த செயல்களைச் செய்து சாதிக்க வேண்டும் என்ற உறுதியும் ஆர்வமும் இருந்தபோதும், அவர்கள் அதை அடைய மிகவும் போராட வேண்டும். மிக உயரத்திற்கு எளிதில் செல்ல முடியாமல் தவிப்பார்கள்.
டிராகன்வாசிகள் நல்லதோ, கெட்டதோ எதைச் செய்தாலும் அடுத்தவர் கண்ணிலிருந்து தப்பவே முடியாது. அவர்கள் செய்யும் காரியங்கள் எப் போதுமே எல்லோருக்கும் தெரியும் செய்தியாகி விடும். வாதம் செய்வதிலும் அவர்கள் வல்லவர்கள். அவர்களை வெற்றிகொள்வது மிகவும் கடினமான காரியம். அவர்கள் சவாலை நேரடியாக எதிர்கொள் வார்கள். அவர்களை எதிரியாகவோ, கோபம் கொள்ளவோ செய்துவிட்டால், அவர்கள் விடாமல் துரத்தக்கூடியவர்கள்.
அவர்கள், தங்களை எல்லோரும் விரும்பு வார்கள் என்று தானாகவே எண்ணிக்கொண்டு செயற்படுவார்கள். அவர்கள் பிடிவாதமாக இருந் தாலும் அற்பகுணம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களது உணர்வுகளை மறைத்துக்கொள்வது கடினம். அதை மறைக்கவும் முயலமாட்டார்கள். அவர் கள் தங்களது ரகசியங்களையே காக்கத் தடுமாறு வார்கள். அதனால் நம்பிக்கையை நெடுநாட்களுக் குத் தாக்குப்பிடிக்க முயலாது. செயல்களைச் செய்துமுடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். டிராகன் செயற்பாட்டிற்குப் பெயர் போன சின்ன மென்பதால், அவர்கள் அடுத்தவர் களை ஊக்குவிக்க வல்லவர்கள். அவர்கள் வேகமாகச் செயற்பட எண்ணம் கொண்டவர்கள் என்பதால் அவர் களுக்கு அதைச் செய்வதில் ஏற்படும் தவறுகளைக் கவ னிக்க நேரம் கிடைக் காது. அதனால் டிராகன்வாசிகளே, எப்போதும் செயல் களைச் செய்யத் தலைகீழாய் விழுவதை விட்டு விட்டு, அதை ஆராய்ந்து செயற்படுதல் நலம் பயக்கும்.
அவர்கள் தங்க ளைச் சக்திவாய்ந்த வர்களாகக் கருதுவார்கள். பல செயல்களை ஒரே நேரத்தில் திறம்படச் செய்யும் தன்மையும் அவர்களிடத்தில் உண்டு. அகலக்கால் வைப்ப வர்கள். மெல்வதற்கு அதிகமாகவே கடித்துச் சாப் பிடுவார்கள்.
துன்பப்படும் நேரங்களில், அகந்தையின் கார ணமாக அடுத்தவர்களிடம் உதவி கேட்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் அகந்தையும் கர்வமும் கொண்ட காரணத்தால் தனியே செயற்படு வது போன்று தோன்றினாலும், அவை முக்கிய கார ணங்களாக. அவர்கள் மிகுந்த கோபக் காரர்கள். கோபம் வந்தால் என்ன நடக்கும் என்று சொல் லவே முடியாது. டிராகன்வாசிகளிடம் இருக்கும் வேண்டாத குணம் தலைக்கனமும் துடுக்குத் தனமான நாக்கும் தான்.
வலிமை, சுறுசுறுப்பு, ஓடிக்கொண்டே இருக் கும் தன்மை இவற்றைப் பெற்றவர்கள். தங்களிட மிருந்து எதை எதிர்பார்க்கிறார்களோ அதையே அடுத்தவரிடமும் எதிர்பார்ப்பார்கள். சில சமயங் களில் தான் சொல்வதைத் தானே செய்யாமல், அடுத்தவர்களுக்குப் போதிப்பதும் நடக்கும். அதிகத் தன்னம்பிக்கை, அடுத்தவர்களைக் குறை சொல்வது, தானே கூட்டங்களுக்குத் தலைவன் என்ற எண்ணம், அதிக சுறுசுறுப்பான போதிலும் மிக வேகத்துடன் செயற்படும் தன்மை துன்பத்தை வரவழைக்க வல்லது.
தொழில்
அரசியல்வாதிகள், மருத்துவர்கள், அமைச்சர்கள், கலை ஞர்களாக இருக்கத் தகுந்தவர்கள். அவர் கள் சரியான தொழி லைத் தேர்வு செய்து விட்டால், அதில் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். அதற்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு விடு வார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெறுவதைத் தடுக்கவே முடியாது.
செல்வாக்கும் குறிக் கோளும் கொண்டவர்கள். இவர் கள் தாங்களாக விதித்த விதிகளின்படி தங்கள் வாழ்க்கையை வாழ்பவர்கள்.தனியாக விட்டால், பெரும்பாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்கள் சுய ஊக்கம் கொண்டு, போட்டிகளை எதிர்கொண்டு, துணிந்து காரியங் களைச் செய்ய வல்லவர்கள். அவர்கள் செய்யும் காரியங்களை விரும்பிச் செய்வார்கள்.அதைப் பிரமாண்டமாகச் செய்ய விரும்பு பவர்கள். இந்த விருப்பமும் ஆர்வமும் சில சம யம் அவர்களைச் சோர்வடையச் செய்து அதிருப் தியையும் தரக்கூடும்.
டிராகன்வாசிகள் மற்றவர் பின் போவதைக் காட்டிலும் வழிநடத்திச் செல்ல விருப்பம் கொண்டவர்கள். அவர்கள் புதிது புதிதாகப் படைக் கும் படைத்தல் தொழிலில் ஈடுபட்டால் நன்மை பயக்கும். கண்டுபிடிப்பாளர், மேலாளர், கணிப் பொறி வல்லுனர், வழக்கறிஞர், பொறியியலாளர், கட்டிட நிபுணர், வியாபாரி, தரகர் போன்ற வேலைகள் இவர்களுக்கு உகந்த வேலைகளாகும்.

உறவு
காதலில் அவர்கள் என்றுமே தோல்வியைத் தழுவுவார்கள். அவர்கள் இதயங்களை உடைக்க வல்லவர்கள். அவர்கள் இளவயதில் பெரும் பாலும் மணம் செய்துகொள்ள விரும்ப மாட்டார் கள். தனியாக வாழ்வதில் மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்வார்கள். டிராகன்வாசிகளுக்கு அளவிற்கதிகமான நண்பர்களும் போற்றுபவர்களும் இருப்பார்கள். அவர்கள் மிகவும் மென்மையானவர்கள். அதனால் பிரிவுகள் அவர்களைப் பெரிதும் பாதிக்கும். அதனாலேயே தனி வாழ்க்கை வாழ விரும்பு வார்கள்.
அவர்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உண்மையானவர்களாக நடந்துகொள்வார்கள். வேண்டியபோது காப்பாற்ற முன் நிற்பார்கள். அவர்கள் தான் உதவிக்கு முதல் ஆளாக நிற்பார்கள். அடிக்கடி அடுத்தவருக்கு உதவி செய்யும் டிராகன் வாசிகள், தங்க ளுக்கென உதவி கேட்கத் தயங்கு வார்கள். அவர் களது தன்மையும் நடத்தையும் பலரை அவர்களு டன் பழகவைத்தா லும், அவர்கள் அடிப்படையில் தனிமை விரும்பிகள். அதனாலேயே அவர்கள் தனித்து விடப்பட்டால் காரியங்களைச் செவ்வனே செய்துமுடிப்பார்கள்.
காதலை விட்டுக்கொடுத்தாலும் கொடுப்பார்களேயன்றி, சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க விரும்பமாட்டார்கள்.
அவர்களது துடுக்குத்தனமான பேச்சும் கோப மும் அவர்களுடன் இருப்பவர்களை வருத்தக்கூடி யது. அதனால் அவர்கள் திடம் மிக்கவர்களாக இருக்கவேண்டும்.அவர்கள் நெருங்கிய நண்பர்களிடமும் உறவி னர்களிடமும் மட்டுமே தங்களின் சுகதுக்கங்களை எடுத்துச்சொல்லி அன்பைப் பொழியக் கூடியவர் கள்.

சுகாதாரம்
கடின உழைப்பை விரும்பும் இவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியம் மிக்கவர்கள். துணிகரமான காரியங்களில் அதிகம் ஈடுபடுவதால் அவர்கள் மன அழுத்தம் கொண்டு அடிக்கடி தலைவலிக்குள்ளாகும் வாய்ப்பு உண்டு. அதனால் மிகச் சாதாரண காரியங்களைச் செய்வது அவர்களுக்கு நலம் பயக்கும். யோகாசனம், நடத்தல் போன்ற பயிற்சிகள் அவர்களது உடலையும் மனதையும் நன்முறையில் வைக்க உதவும். அவர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள். இருந்தாலும் அவர்கள் மனக்கிளர்ச்சி கொள்ள மாட்டார்கள்.

டிராகன் வருடத்தைய பிரபலங்கள்
பாரத் ரத்னா விருது பெற்ற பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி, பாடகி எம். எல். வசந்தகுமாரி, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், தேச பக்தர் திருப்பூர் குமரன், தொழிலதிபர் ஜே. ஆர். டி. டாடா, முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயல் சிங், உதவிக்கரம் நீட்டிய புளாரன்ஸ் நைட்டிங்கேல், வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க், மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் பிராட், நடிகர் கினு ரீவ்ஸ், கால்பந்தாட்ட வீரர் ரோனால்டோ

அதிர்ஷ்ட எண்கள்
3, 4, 5, 6, 15, 21, 34, 35, 36, 45.

ஒத்துப் போகும் விலங்குகள் : குரங்கு, எலி, பாம்பு, சேவல்

ஒத்துப் போகாத விலங்குகள் : எருது, ஆடு, நாய்
டிராகன்வாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும் போது வௌ;வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருப்பு டிராகன்
பிப்ரவரி 03,1916 - ஜனவரி 22,1917
ஜனவரி 31,1976 - பிப்ரவரி 17,1977)

குணங்கள் இரக்கம், எதிர் கொள்ளுதல், நேர்மை, நற்குணங்கள் உடையவர்கள். உணர்ச்சிப் போராட்டம் அதிகம் கொண்டவர்கள். அவசரமும், ஆர்வமும் தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும். அத்தகையவர்களின் வேகம் கட்டுப்பட வேண்டும். உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முயல வேண்டும்.

மர டிராகன்
(பிப்ரவரி 16,1904 - பிப்ரவரி 03,1905
பிப்ரவரி 13,1964 - பிப்ரவரி 01,1965)

குணங்கள் அகங்காரம், விட்டுக் கொடுத்தல், வெகுளித்தனம், கபடமற்ற தன்மை உடையவர்கள். அடுத்தவர்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். அவர்கள் கலை நயம் சிறந்தது. அடுத்தவர்களிடம் நன்கு பழகினாலும், அதிகாரம் செலுத்துவார்கள். அவர்கள் படைப்பு முயற்சிகளில் கைத் தேர்ந்தவர்கள்.

பூமி டிராகன்
(ஜனவரி 23,1928 - பிப்ரவரி 09,1929
பிப்ரவரி 17, 1988 - பிப்ரவரி 05, 1989)

குணங்கள் வீரம், விவேகம், நிலையான தன்மை உடையவர்கள். உல்லாசிகள். டிராகன் நிலத்தில் ஊன்றி இருப்பதால், அவர்கள் முடிவுகளைச் சரியாக எடுப்பார்கள். சமநோக்கு உடையவர்கள். தங்களது செயல்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள். அடுத்தவர்களை ஆதரித்தாலும், தன்னை போற்ற வேண்டும் என்று எண்ணுவார்கள். நடைமுறைச் செயல்பாடுகளை நம்புபவர்கள்.

உலோக டிராகன்
(பிப்ரவரி 08,1940 - ஜனவரி 26,1941
பிப்ரவரி 05,2000 - ஜனவரி 23, 2001)

குணங்கள் உண்மை, வேகம், வளையாத தன்மை, திடம், துணிவு கொண்டவர்கள். உலோகம், டிராகன் சின்னத்தின் பலத்தை மேலும் பலப்படுத்தக் கூடியது. அவர்கள் கொள்கை பிடிப்புக் கொண்டவர்கள். தான் நம்புவதை செயல்படுத்தப் போராடுவார்கள். தன் நம்பிக்கைகளை எதிர்ப்பவர்களுடன் இருக்க அதிகம் விரும்புவார்கள். தலைமை தாங்கும் குணம் பெற்றவர்கள். அவர்களின் பின் நடக்க பலர் இருப்பார்கள்.

நீர் டிராகன்
(ஜனவரி 27,1952 - பிப்ரவரி 13,1953
ஜனவரி 23, 2012 - பிப்ரவரி 09,2013)

குணங்கள் நீர், டிராகனின் ஆக்ரோஷத்தை சற்றே மட்டுப்படுத்த வல்லது. அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். நம்பத் தகுந்தவர்கள். அடுத்தவர்களின் கணிப்புகளை சீர் தூக்கிப் பாhப்;பவர்கள். அவர்கள் எப்போதுமே சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்கள் முடிவுகள் ஆராயப்பட்ட முடிவாக இருந்தால், மற்றவர்களின் கருத்துக்களும் அதில் அடங்கி இருந்தால், முடிவு சரியானதாக இருக்கக் கூடும். நீங்கள் டிராகன் வருடத்தில் பிறந்திருந்தால், மேற்சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர்.

டிராகன் வருடம் சந்தோசத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும். அது சக்தி வாய்ந்த, பலம் பொருந்திய சின்னம். அதனால் இயற்கைச் சீற்றம் அதிகம் இருந்த போதிலும், நல்லன பல நடக்கும். திருமணம் செய்பவர்கள், புதிய தொழிலை ஆரம்பிப்பவர்கள் இந்த வருடத்தில் செய்தால், நன்மை பெறுவார்கள்.

No comments:

Post a Comment