Monday, 13 August 2012

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள்

தமிழ் மாதப் பலன்கள்
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள்

சூரியனுக்கு மிக அருகாமையில் உலவும் புத னின் உச்சமனையாகிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது கன்னித் திங்கள் என்றும், புரட் டாசி மாதமெனவும் அழைக்கின்றோம். புதன் என் றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக் காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்! சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரிய னைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன். புரட் டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் பாண்டித்தியம் உடையவர்களே. அதுவும் துரித மாய்க் கற்றுணரக்கூடியவர்கள். சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடு வார்கள். புரட்டாசியில் தோன்றிய இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே!

தோற்றம்:

நடுத்தர உயரம், வட்டமான தலை, அகன்ற முகம். குறைந்த ரோமம், உயர்ந்த அகன்ற நெற் றியை உடையவர். நெற்றியில் கோடுகள் இருக் கும். புருவங்கள் வளைந்தும் ஒன்று சேர்ந்தும் காணப்படும். வரிசையான பற்கள் உடையவர். மேலுதடு குவிந்தும் கீழுதடு முன் சரிந்தும் காணப்படும். தடித்த கழுத்துடையவர். முக பா வனையில் இவர் மேதாவி என்பதைக் காட்டும்.

குணபாவங்கள்:

பல நூல்களை நன்றாகப் புரட்டியவர்களா கையால் தர்க்கம் பேசுவதிலும் சமர்த்தர். குதர்க்கம் செய்வதிலும் வித்தகர். "கண்ட தைக் கற்கப் பண்டிதனாவான்' என்பது போல, "கூற்றுவன் செய்ததை மாற் றுபவன் கொற்றவனாவான்!" என் பது இவர்களுடைய கருத்து. அரிய நூல்களைச் சேகரிப்பர். சீக்கிரத்தில் அரச யோகத்தை அடைந்திடுவர். கற்றதை மாற்றிப் பேசிப் போற்றுதலைப் பெறுவர். மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சமர்த்தர். படிக்காத மேதைகளும், படித்த பட்டதா ரிகளும் விஞ்ஞானிகளும் மெய் ஞானிகளும் இம் மாதத்தில் பிறந்தவர்களே.

ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடார். எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர். மற்றவர்கள் செய் யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அழுத்தந்திருத்தமாக எடுத்துக் கூறிடுவர். மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர். மற்றவர்களுடைய முன்னேற்றத் திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர். தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந் தஸ்தைத் தேடியடைந்திடுவர். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரி யத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

இயற்கையை ரசிப்பவர். சுவையான பண்டங் களைப் புசிப்பவர். நல்ல பேச்சாளர். கலாரசிகர், நடிப்பாற்றல் உடையவர். கற்பனா சக்தியும் கருத்து நிறைந்த தத்துவங்களடங்கிய கவிபாடு வதிலும் தொடர் கதைகளையும்,

சிறு கதைக ளையும் எழுதுவ திலும் நிகரற்று விளங்குவர். இவருக் கெனத் தனி நடையை அமைத்துக்கொள்வர். மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள் கைகளை மாற்றிக்கொள்வர். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வர்.

சுறுசுறுப்பானவர்கள். ஆனால், சுகஜீவிகள், நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற் குள் செய்வனவற்றைத் திருந்தச் செய்வர். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவர்.

பிணியும், மருந்தும்:

இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருக்க நேரிடுவதாலும் பகல் நேரங்களில் நேரம் கழித்து உணவு உட்கொள்வதாலும் ஜீரண கோசத்தில் இவ ருக்குச் சில கோளாறுகள் இயற்கையாகவே தோன் றிடும். நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவையும் ஏற்படலாம். ஜீரண கோசத்தில் புளிப்பு ரசங்கள் அதிகம் சுரப்பதால் உணவு உட்கொண்டபின் வயிற்றில் அசதியும், வலியும் ஏற்படும். சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் சற்று சங்கடமாகவே இருந்திடும். இவர் அவ்வப்போது தேநீர், கோப்பி அருந்துவது ஆகாது. கூடுமான வரையில் புளிப்பு, காரம் இரண்டையும் குறைத்துக் கொள்வது நல்லது. பச்சை மிளகாய் அறவே நீக்கப் பட வேண்டும். காரத்துக்கு மிளகையும், புளிப் பிற்கு இலேசான எலுமிச்சை ரசமும் சேர்த்துக் கொள்வது மிகச் சிறந்ததாகும். பகலில் முன்நேரத் திலும் அதாவது உச்சி நேரத்துக்கு குறைந்தது இரண்டு மணிக்கு முன்பாவது பகலுணவு எடுத்துக் கொள்வது சிறந்தது. இரவிலும் சீக்கிரமாகவே எண்ணெய் சேராத சிற்றுண்டிகளை உட்கொள்வது நல்லது. பால், தயிர், மோர், நெய் முதலியவை தவ றாமல் சேர்க்கப்பட வேண்டியவை. கீரை, தக்காளி நித்தியமும் சேர்க்க வேண்டியவை. கத்தரிக்காய், முட்டைக்கோஸ், மாங்காய், உருளைக்கிழங்கு முத லியவை ஆகாத வஸ்துகளாகும். இரவு நேரங்க ளில் தூக்கம் கெடாமல் இருப்பின் இவருக்கு வயிற்றுவலி தானாகவே நின்றுவிடும். பத்தியம் தவறியவர்கள் சத்திர சிகிச்சைக்கும் உள்ளாக நேரிடும்.

இவருக்கு எளிதில் நோய் பற்றுவது கடினம். அதிகம் படித்துப் படித்து மூளையைக் குழப்பிக் கொள்வர். பித்தம் தலைக்கேறிடும். பித்துப் பிடித்த வர் போல் பிறர் புலனுக்குத் தோற்றமளித்திடுவர். தினசரி செய்தித்தாள்களை ஆதியோடு அந்தம் படித்து முடிக்காமல் உறங்கமாட்டார்கள். தினசரி முக்கியமான பிரசங்கங்கள் எங்கிருந்தாலும் சென் றிடுவர். நட்புடன் ஒழுகுவதற்கு நல்லவர்கள். இவ ரிடம் கற்க வேண்டிய அம்சங்கள் அனேகம். ஆனால், இவரைப்போல் நடப்பதற்கும், நடிப்பதற் கும், சீக்கிரத்தில் சமூக வட்டாரத்தில் உயர்ந்த அந் தஸ்தை அடைவதற்கும் மற்ற மாதங்களில் பிறந் தவர்களால் முடியாது.

பலமும், பலவீனமும்:

அறிவிற் சிறந்தவர். பல ஆராய்ச்சித் தத்துவங் களைத் தாமும் கற்று, பிறருக்கும் போதித்திடுவர். அவ்வாறே செயலிலும் ஈடுபடுவர். சமூகசேவை யில் கைம்மாறு கருதாது தொண்டு புரிவர். இவ ரால் முடியாத காரியங்கள் இவ்வுலகில் இல்லை எனலாம். அற்புத சக்தி வாய்ந்தவர். இருப்பிடத்தி லிருந்துக்கொண்டே பலரிடத்தில் பல துறைகளில் பல காரியங்களைச் சாதித்திடுவர். தம்மைப் பலர் கேலியாகவும், கிண்டலாகவும் பேசினாலும் பொருட்படுத்தார். சிறு வயதிலேயே முதிர்ந்த உல க அனுபவமும் உடையவராதலால் எவரிடத்தில் எவ்வாறு பழக வேண்டுமோ அவ்வாறு நடந்துக் கொள்வர். பழைய சம்பிரதாயங்களில் முழு நம்பிக்கையுடையவர். புதிய கருத்துகளுக்கு இவர் எளிதில் இடங்கொடார். என்றும், முன்னேற்றப் பாதையிலேயே முன்னேறிச் செல்வர். ஆனால், இவருடைய முன்னேற்றத்திற்கு அடிக்கடி இவரு டைய மனைவி மக்கள் தடைவிதிப்பர். சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்த பிறகுதான் காரியத்தில் தைரிய மாக ஈடுபடுவர். சில சமயங்களில் மனக்குழப்ப மும் மனோவியாகூலமும் இவரைப் பெரிதும் பாதிக்கும். காசைத் துச்சமாகச் செலவிடுவர்.

நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் கைவிட்ட போது இவரை அணுகினால் எண்ணிய விவகாரங் கள் சித்தியடையும். மற்றவர்களால் இயலாத காரி யங்களை இவரிடத்தில் ஒப்படைத்தால் அதிசயிக் கும் அளவிற்கு வெற்றிகிட்டிடும்.

வாழ்க்கைத் துணைவி:

தை, வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க் கைத் துணையாகவோ கூட்டாளியாகவோ அமை வாராயின் வாழ்க்கையில் சுகமும், செல்வமும், செழிக்கும். அமைதி நிலவிடும். சித்திரை, ஆவ ணி, கார்த்திகை மாதங்களில் பிறந்தவர்கள் அமை வாராயின கஷ்டமும், நஷ்டமும், ஓயாத தொல்லையும் நேரிடும்.

தொழில்:
அதிக மூலதனமில்லாமலேயே பெரும் நிதி யைச் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பைத் தேடிக்கொள் வர். வணிகத்துறையிலும், கலைத்துறையிலும் இவர் புகழுடன் விளங்குவர். தரகு முகவர்களாக வும், சுயதொழில் ஸ்தாபகர்களாகவும், அரசியல் வாதிகளாகவும், அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும், தேசத் தூதுவர்களாகவும் சிறந்து விளங்குவர். வாழ்க்கையில் எதிர்ப்புகள் நிறைந்திருக்கும். இவ ரைக் கண்டு பலர் பொறாமை கொள்வர். வம்பு வழக்குகளில் இழுப்பார்கள். ஆனால், இவர் எதற் கும் செவி சாய்க்காமல் தம்முடைய குறிக்கோளை விடாமல் கடைப்பிடிப்பர். முடிவு எத்தகையது என் பது இவருக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். சிறந் த பேச்சாளராகவும், ஆசிரியராகவும், விரிவுரை யாளராகவும் விளங்குவர்.

அதிர்ஷ்ட எண்:
இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 அதிர்ஷ்ட எண் ஆகும்.

நலந்தரும் நிறம்:

இவருக்குப் பச்சை நிறம் நலந்தரும் நிறமாகும்.

No comments:

Post a Comment