Tuesday 21 August 2012

எண்களும்-உடல் நலமும்




1, 1,0 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, சுமார் நாற்பது வயதிற்கு மேற்பட்டு இவர்களுக்கு இரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகள் பீடிக்கப்படுவதுண்டு.

இவரது உடலுக்கு நன்மை பயப்பவை மஞ்சள், ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிச்சம்பழம், இஞ்சி, பார்லி, தேன் முதலியன ஏற்றதாகும்.

2, 11, 20 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, ஜிரணக்கருவிகள் அதாவது அஜிரணம் வயிற்றுக் கோளாறு, மூத்திரக்காய்கள் சம்பந்தமான நோய்களே விரைவில் ஏற்பட ஏதுவாகும்.

இவர்களது உடலுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய பதார்த்தங்களான, முட்டைகோஸ், கீரை வகைகள், வெள்ளரி பிஞ்சு, பழவகைகள் குறிப்பாக முலாம்பழம் ஆகியவைகளை தினசரி தம் உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, ஆரோக்கியம் கொஞ்சம் குறைந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் பீடிக்க ஏதுவாகும்.

கிராம்பு, இல வங்கப்பட்டை, குங்குமப்பூ, ஜாதிக்காய் ஆகியவைகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். எப்பொழுதுமே ஆகாரத்துடன் ஆப்பிள், நெல்லி, அன்னாச்சி, கோதுமை ஆகிய பதார்த்தங்களை அன்றாடம் உபயோகித்து வருவது நல்லது.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ தலை சம்பந்தமான அதாவது மூளை, கண், காது, மூக்கு, தொண்டை, வாய், நாக்கு, பல் சம்பந்தமான நோய்கள் ஏதாவது உண்டாகும்.

மேற்குறிப்பிட்ட நோயிலிருந்து ஒருவாறு தப்புவதற்கு கீழ்க்காணும் பதார்த்தங்களை தினசரி ஆகாரத்தோடு சேர்த்து வருவது மிகவும் நன்று.

சாரப் பருப்பு, வாழைக்காய், மாது ளம்பழம், எலுமிச்சம்பழம், பூசணிக்காய், நாரத்தம்பழம், வாழைப்பழம், முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை போன்றவைகளையும் உபயோகிக்கலாம்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, நரம்பு சம்பந்தமான வியாதிகளைப பற்றி எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். இழுப்பு, வாத நோய், தூக்கமின்மை ஆகிய கோளாறுகள் எளிதில் பற்றும்.

மேலும் காரட், ஓட்ஸ், வால்நட், ஹேசல்நட் போன்றவைகளை அன்றாடம் உணவு வகையில் உண்டு வந்தால் இவ்வியாதியை தடுக்கலாம்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ தொண்டை, மூக்கு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பற்றககூடியவை. பொதுவாக இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் இருக்கும். குறிப்பாக நல்ல காற்றோட்டமும், உடற்பயிற்சியும் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியமுண்டு.

எனவே இவர்கள் தேக ஆரோக்கியத்திற்கு தினசரி ஆகாரத்தோடு, பாதாம் பருப்பு, பீன்ஸ், முலாம்பழம், ஆப்பிள், குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் ஆகியவைகளை உட்கொண்டு வருவது நல்லது.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப்பெற்றவர்களுக்கோ, சரும் சம்பந்தமான அதாவது தோல் சம் பந்தப்பட்ட வியாதிகளான, கட்டிகள், சொறி சிரங்கு, அலர்ஜி ஆகியவைகள் வரலாம்.


இவர்கள் எல்லாவற்றிற்கும் அன்றாடம் உணவில் கூடுமானவரை கீரை வகைகளை சேர்த்துக்கொள்வதோடு, பழச்சாறுகளையும் உணவுடன் உப யோகித்து வந்தால், சரும சம்பந்தமான வியாதிகள் வராமல் அநேகமாக தடுக் கலாம்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, எளிதில் வரக்கூடிய வியாதிகள், தலைவலி, ரத்த சம்பந்தமான கோளாறுகள் பீடிக்கப்பட வாய்ப்புண்டு.

எனவே இவர்கள் கூடுமானவரை மாமிசத்தையும், மாமிச வகைகளையும் விலக்கிவிட்டு, காய்கறிகளையும், கீரை வகைகளையும் அதிகமான அளவில் அன் றாட உணவில் சேர்த்துக் கொண்டு வருவது மிகவும் நல்லது.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, உஷண சம்பந்தமான ஜுரங்களும், அம்மை நோயும், குடல்புண், கேன்சர் போன்ற வியாதிகள் எளிதில் பாதிக்கும்.

கீரை வகைகளில் புளிச்சக்கீரை ஒன்று தான் நன்மை தரக்கூடியது. ஆயினும் முருங்கைக்கீரையை ஓரளவு சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.

No comments:

Post a Comment