Friday 24 August 2012

குரு கிரகம் பற்றிய ஜோதிட குறிப்புகள்



தனுசு ராசிக்கும் , மீனா ராசிக்கும் அதிபதியான குரு கடகத்தில் உச்சம் பெறுகிறார். மகரத்தில் நீச்சம் அடைகிறார்.

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் குருவிற்கு நட்பு கிரகங்கள். புதன் மற்றும் சுக்கிரன் பகை கிரகங்களாகும் . சனி சம கிரகம் ஆவார்.

புனர்பூசம் , விசாகம் மற்றும் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குருவின் சாரம் பெற்ற நட்சத்திரங்கள் ஆகும்.

குரு தசை 16 வருட காலம் ஒருவருக்கு நடக்கும் .மேஷம்,மிதனம் ,கடகம் மற்றும் மீன லக்னத்திற்கு மிகுந்த யோகத்தை செய்யும்.

குரு ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல அமைப்பில் அமைந்து இருந்து இளமை காலத்தில் வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் அடைவார்கள். பிற்கால வயதில் சந்ததிகள் சிறப்புடன் விளங்குவார்கள்.

1 comment:

  1. தயவு செஞ்சி இப்படி ஒன்னத்துக்கும் ஆவாத கட்டுரைய publish செய்ய வோணடாம்.8ங் கிளாஸ் புள்ளங்களுக்கு அனா,ஆவனா மாதிரி இருக்கு...

    ReplyDelete