Saturday 18 August 2012

பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 7


இந்த பதிவில் சில குறிப்புகளை பார்ப்போம்


ஒரு கிரகத்திற்கு முன் பின்னாக இரு பகை கிரகங்கள் இருந்தால், அந்த கிரகம் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.

ஒரு கிரகத்திற்கு முன் பின்னாக இரு நட்பு கிரகங்கள் இருந்தால், அந்த கிரகம் சுப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.

இந்த கர்த்தாரி யோகம் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

உதாரணம் 1

Image

மேற்கண்ட ரசிக் கட்டத்தில் சனி, சூரியன், கேது ஆகிய மூவரும் ரிஷபத்தில் இருப்பதாகவும், குறிப்பாக சனி கார்த்திகை 2 ம் பாதத்திலும், சூரியன் ரோகினி 2 ம் பாதத்திலும், கேது மிருகசீரிடம் 1 ம் பாதத்திலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது பாதசார அடிப்படையில் பார்க்கும்போது முதலில் சனி பிறகு சூரியன், அதன்பிறகு கேது என்று இருக்கிறார்கள். அதாவது சனி கேது இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.

சனியும் கேதுவும் ஒருவருக்கொருவர் பகை, சூரியனுக்கு சனி கேது இருவரும் பகை.

எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.

உதாரணம் 2

Image

மேற்கண்ட ரசிக் கட்டத்தில் மேஷத்தில் சனி, ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் கேது இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது முதலில் சனி பிறகு சூரியன், அதன்பிறகு கேது என்று இருக்கிறார்கள். அதாவது சனி கேது இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.

சனியும் கேதுவும் ஒருவருக்கொருவர் பகை, சூரியனுக்கு சனி கேது இருவரும் பகை.

எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.

உதாரணம் 3

Image

மேற்கண்ட ரசிக் கட்டத்தில் சுக்கிரன், சூரியன், சனி ஆகிய மூவரும் சிம்மத்தில் இருப்பதாகவும், குறிப்பாக சுக்கிரன் மகம 1 ம் பாதத்திலும், சூரியன் பூரம் 2 ம் பாதத்திலும், சனி பூரம் 4 ம் பாதத்திலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது பாதசார அடிப்படையில் பார்க்கும்போது முதலில் சுக்கிரன் பிறகு சூரியன், அதன்பிறகு சனி என்று இருக்கிறார்கள். அதாவது சுக்கிரன் சனி இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.

சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நட்பு, சூரியனுக்கு சுக்கிரன் சனி இருவரும் பகை.

எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.

உதாரணம் 4

Image

மேற்கண்ட ரசிக் கட்டத்தில் கடகத்தில் சுக்கிரன், சிம்மத்தில் சூரியன், கண்ணியில் சனியும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது முதலில் சுக்கிரன் பிறகு சூரியன், அதன்பிறகு சனி என்று இருக்கிறார்கள். அதாவது சுக்கிரன் சனி இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.

சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நட்பு, சூரியனுக்கு சுக்கிரன் சனி இருவரும் பகை.

எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.


பாப கர்த்தாரி யோகம் மேலும் தொடரும்...

No comments:

Post a Comment