Saturday 18 August 2012

பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 5


விதி 6 : ராகு, கேதுகளுக்கான விதி.

ராகு கேது இருவரும் ராசி சக்கரத்தில் அப்பிரதட்சனமகவே (எதிர் திசையில்) சுற்றி வருவார்கள், என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

எனவே இவ்விருவருக்கும் 2 மிடம் என்பது 12 மிடத்தைக் குறிக்கும்.

அதாவது ராகு அல்லது கேது மேஷத்தில் இருந்தால் மேஷத்திற்கு 12 மிடமாகிய மீனம், ராகு அல்லது கேதுவுக்கு 2 மிடமாகும் (இதை கவனமாக வைத்துக்கொள்ளவும்)

இனி விஷயத்திற்கு வருவோம்

ராகுவுக்கு (கேதுவுக்கு) 2 ல் ஏதேனும் கிரகம் இருந்தால் அந்த கிரகம் ராகு (கேது) வுடன் இணைவு பெற்று செயல்படும்.

கீழ்க்கண்ட உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்

Image

ராகுவுக்கு 2 ல் சனி இருக்கிறார். (சனிக்கு 2 ல் ராகு இருக்கிறார் என்றும் கூறலாம்) எனவே சனி ராகுவுடன் இணைவு பெற்று செயல் படுவார்.

மேலும்...

சனிக்கு 5 ல் உள்ள புதனுக்கும், 9 ல் உள்ள சந்திரனுக்கும் ராகு (சனி வழியாக) தனது தாக்கத்தை தருவர்.

ராகு (கேது)வுக்கு 5 ல் ஏதேனும் கிரகமிருந்தால் 6 ல் உள்ள கிரகத்திற்கும் 6 க்கு திரிகோணத்தில்(ராகுவுக்கு 10 ல்) உள்ள கிரகத்திற்கும் தனது தாக்கத்தை தருவார்.

கீழ்க்கண்ட கட்டத்தைப் பாருங்கள்.

Image

ராகுவுக்கு 5 ல் சனி இருக்கிறாரா? ராகுவுக்கு 6 ல் (சனிக்கு 12 ல்) செவ்வாயும், செவ்வாய்க்கு திரிகொனத்தில் (ராகுவுக்கு 10 ல்) குருவும் இருக்கிறார்களா?

ராகு சனியின் வழியாக செவ்வாய்க்கும் குருவுக்கும் தனது தாக்கத்தை தருவார்.

மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் " ராகு கேதுக்கள் ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்றிவருவார்கள்.

ராகு கேது இவர்கள் குறித்த பலன்களை ஆய்வு செய்யும்போது மிக கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். சிறிது கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பலன் மாறிவிடும். இவர்களுக்கு மட்டுமல்ல மற்ற கிரகங்களுக்கும் இப்படித்தான். நாடி முறை மிக மிக எளிமையானது. அதேசமயத்தில் புரிந்துகொள்ளும் வரை சற்று கடினமானதும் கூட.

வக்கிரம் பெற்ற கிரகங்களுக்கும் மேற்படி ராகு கேதுக்களுக்கான விதிகள் அப்படியே பொருந்தும்.

வக்கிர கிரகங்களுக்கும் ராகு கேதுக்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

வக்கிர கிரகங்களை ஆய்வு செய்யும்போது, வக்கிரம் என்பதை தற்காலிகமாக மறந்துவிட்டு 2, 3, 4, 5 ம் விதிகளின்படியும்,

வக்கிரம் என்ற நிலையில் மேற்படி ராகு கேதுக்க்ளின் விதிகளின்படியும் ஆய்வு செய்து இரண்டு பலன்களையும் கலந்து சொல்லவேண்டும்


அடுத்தப் பதிவில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளை பார்க்கலாம்.

No comments:

Post a Comment