Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 80


கூறப்பா ஈரைந்தோன் நாலில்தோன்ற
கொற்றவனே குடினாதன் கோணம் ரெண்டில்
சீரப்பா சென்மனுக்கு புதையல்கிட்டும்
செகத்தில் நல்லபேர் விளங்கும் செய்யுள்வல்லோன்
ஆரப்பா அஸ்வங்கள் காடியுண்டு
அப்பனே அன்ன சத்திரமுங்கட்டி
வீரப்பா வெகுபேர்க்கு அமுதளிப்பன்
விதமான புலிப்பாணி விளம்பினேனே.


இதனையும் நீ நன்கு உன்னிப்பாய் அறிந்து கூறுவாயாக! பத்துக்குடையவன் நாலில் அமர இலக்கினத்ததிபன் திரிகோண ஸ்தான பலம்பெற (1,5,9 திரிகோணம்) அச்சென்மனுக்குப் புதையல் உண்டாகும். அவன் கவிதை பாடுவதில் வல்லோனாவான். அவனுக்கு குதிரைகள் வாய்க்கும், விளையவல் வாய்க்கும். அது மட்டுமல்லாமல் அன்ன சத்திரம் முதலியனவற்றைக் கட்டி வெகுபேருக்கு அமுதளித்து ஆதரிப்பான் என்பதனை போகரருளாலே புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment