Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 214 - சந்திர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


மானேகேள் சந்திரதிசை சூரியபுத்தி
மரணநாள் மாதமது ஆறதாகும்
தானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும்
தாபமுள்ள சுரதோஷம் சன்னிதோஷம்
யேனே தான்காணுமடா யிருக்கமதுவுண்டாம்
யேகாந்த தேகமது இருளதுவேயடையும்
தேனேகேள் லெட்சுமியும் தேகமுடன் போவாள்
திரவியங்கள் சேதமடா, சிசுவுடனேதீதாம்


மற்றுமொரு கருத்தினை என்னன்பிற்குரிய மானே கேட்பாயாக! சந்திர மகாதிசையின் இறுதி புத்தியாகிய சூரியனின் பொசிப்புக் காலம் ஆறுமாத காலமேயாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! சத்துரு பயமும், அக்கினி பயமும் ஏற்படும். ஜுரதோடம் உண்டாகும். அதிகமான ஜுரத்தால் ஜன்னி காணுதலும் ஏற்படும். மதுவினால் மயக்கமடைதலும் தேகம் இருளடைதலும் நேரும், இலக்குமி தேவியானவள் அவனது தேகத்தை விட்டுச் சென்றுவிடுவாள். அதனால் திரவிய நஷ்டமும் சிசு நஷ்டமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment