ஜாதக்தில் 6ல் புதன்
இருந்தால் அல்லது 6மிடத்தை புதன் பார்த்தால் அல்லது 6மிடத்து அதிபதியுடன் புதன்
சேர்ந்திருந்தால் அவர்களுக்கு புறத்தோல், காற்று போகும் தொண்டை,மூச்சு போகும்
மூக்கு ,மூச்சுகுழாய் ஆகியன பலவீனமாக இருக்கும் .இத்தகைய உறுப்புகளு்க்கு நோய்
எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குளிர் தாங்கும் சக்தி அந்த உறுப்புகளுக்கு
குறைவாகதான் இருக்கும். இவர்களுக்குத்தான் ஆஸ்துமா வரும். மனஅழுத்த்தாலும்
அளவுக்கதிகமான து)க்கத்தாலும் இந்நோய் வரவும் அதிகமாகவும் வாய்புண்டு. தனது
முன்னோர்களுக்கு ( தாய் தந்தை தாத்தா பாட்டி ஆகியோர்களில் யாருக்காவது ) புதன்
6மிடத்துடன் சம்பந்தப்பட்டு பிற்ந்திருந்தால் அவர்களது வாரிசுகளும் 6மிடம் புதனுடன்
சம்பந்தப்பட்டு பிறக்க வாய்ப்புண்டு.
Tuesday, 28 August 2012
செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த காலம் எது? செய்யக்கூடாத காலம் எது?
பரிகார காலம்:
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி
என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள்
செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?
செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?
செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல்.
உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும்,பெற்றோரிடம் பாசமின்மை,கண் நோய்,
தலையில் காயம்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை ,
சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம்,தற்புகழ்ச்சி முதலியன.
செவ்வாய் 2ல் இருந்தால் தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம்
பொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.தாராளமனசு ,ஊதாரி செலவு ,கபடமற்ற
வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன
செவ்வாய் 3ல் இருந்தால் சகோதர வகையில் பிரச்சனை
செவ்வாய் 4ல் இருந்தால் சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை,
மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து , கல்வியில் மந்தம் ,உறவினர்
சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு
ஆனாலும் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன.
செவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பிரச்சனை கர்பம் கலைதல் தத்து புத்திரம்...
செவ்வாய் 6ல் இருந்தால் இரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை
செவ்வாய் 7ல் இருந்தால் மனைவிகளால் ஏற்படும் பிரச்சனை.வாழ்க்கைத் துணை ,திருமணம் ,
மணவாழ்வு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனை.குறுக்கு புத்தி,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,
புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் முதலியன
செவ்வாய் 8ல் இருந்தால் பாலின உறுப்புகளில் ஏற்படு்ம் பிரச்சனை .ஆயுள் குறைபாடு,
மாங்கல்யம் குறைபாடு,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்,உறவினர்களிடம்
வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய் முதலியன
செவ்வாய் 12ல் இருந்தால் பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை,
மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ணநோய் ,வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூரகுணம்,
வீண் செலவுகள்,அறுவை சிகிச்சை, இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன.
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில்
மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல்,
தகாத உறவு, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு
மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை,
முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,இல்லற வாழ்க்கையின்
நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை,
தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம்
முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்.
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
மனதாலும் உடலாலும் முற்பிறவிகளில் நாம் செய்யக்கூடிய பாவ செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனை பாதிக்க கூடிய வகையில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு பின்பு பாப பலனாக வந்து சேர்கிறது. சுயநலமின்றி சமுதாய
நலனுக்காக நாம் செய்யும் சில செயல்கள் கூட தோஷங்களை ஏற்படுத்தலாம்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? :
ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 1,2,4,7,8,12 ஆகிய
ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால் செவ்வாய்தோஷமாகும். ஆணின் இலக்கனத்திற்கு 2,7ல் செவ்வாய் இருக்கும்போது பெண்ணுக்கு 4,12 ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் அல்லது செவ்வாய் தோஷ நிவர்த்தி:
செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு
இடத்திலிருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் 2மிடமாகி அது மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷ மில்லை.
செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 8மிடமாகி இது தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்ம் கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷமில்லை
குருவும் செவ்வாய்ம் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
சந்திரனும் செவ்வாய்யும் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,தோஷம் கிடையாது.
இப்படியெல்லாம் பார்க்கையில் 5 சதவீத மக்களுக்குதான் செவ்வாய்தோஷம் இருக்கும் என தெரிகிறது.
செவ்வாய் தோஷம்! சரியான விளக்கம்!
நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.
ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.
உதாரமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும். காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.
செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிற்நதிருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்
தொல்லை தரும் 8ம் மிடம்
பொதுவாக ஒருவரது வாழ்கையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களையும், பிரச்சனைகளையும் அறிய உதவுவது, எட்டாமிடமாகும். எட்டுக்குடயவனின்
திசா, புக்தி மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் திசா, புக்தி போன்றவை நடைபெறும்போது ஜாதகருக்கு பிரச்சனைகளும், சங்கடங்களும் பெருமளவில் ஏற்படும்
ஜென்ம லக்னத்தில் எட்டுக்குடையவர் இருந்திடப் பிறந்தவருக்குப் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். மனத தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும் இருக்கும். ஏதாவது ஒன்று ஏற்பட்டு ஜாதகரது நிம்மதியைக் கெடுத்து, வருத்தப்பட வைத்துவிடும்.
தன் குடும்ப வாக்குஸ்தானம் என்னும் இரண்டாம்பவதில் எட்டுகுரியவர் இருந்தால்,தொழில் அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ஜாதகர் அதை விட்டு விலகி, வேறொரு தொழில் அல்லது உத்தியோகத்துக்கு அலையும்படி நேரும.
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாகுறை ஏற்பட்டு பணத்துக்காக அலயநேரிடும். குடும்பத்தில் நிம்மதியிருக்காது.அவரசு பேச்சே
மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.
மூன்றாமிடத்தில் எட்டுக்குரியவர் இருக்கப் பிறந்தவர் சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இல்லாதபடியும், கடுமையான சொற்க்களைப் பேசி, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் நிலையை
யும் தரும்.
4மிடத்தில் 8 க்குரியவர் இருந்தால் தகப்பனார் தேடி வைத்தசொத்தை அழிப்பவராகவும், குழந்தைகளுடன் கருது வேறுபாடு கொள்பவராகவும்,
மனை, வீடு, வாகனம் இவைகளில் பிரச்சனை எதிர்கொள்பவராகவும் இருப்பார்
5மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் நிலையில்லாத புத்தியும், நிதானமில்லாத போக்கும், அரசாங்கத்தால் தொல்லையும், தரம் குறைந்தவர்களுடன் தொடர்பும் அதனால் அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திப்பதுமாக இருக்கும்
6மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் மற்றவர்களுடன் மனக்கசப்பும் , அடிக்கடி சண்டை சச்சரவுக்கு ஆளாகுதலும் நேரிடும்.
எட்டுகுரியவருடன் சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி நோய்ஏற்படும்
7மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் ஒழுக்கமில்லாதவர்களுடன் தொடர்பும், ஆசன வாயில் நோய்த் தொல்லையும் வரும். எட்டுக்குரியவர் அசுபர்களுடன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருந்தால் பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். . செவ்வாய் எட்டுக்குரியவருடன் சேர்ந்து இந்த பாவத்தில் இருந்தால் ஜாதகர் அமைதியாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவராகவும் இருப்பார்.
எட்டுக்குரியவர் எட்டிலேயே இருந்தால் ஜாதகருக்கு நிறைந்த ஆயுளும் அதிகமான நிலபுலன்களும், மற்றவர்களால் அறிய முடியாத ரகசிய விவகாரங்களில் ஈடுபடுபவராகவும் ஜாதகர் இருப்பார்.
பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் ஜாதகருக்கு தகப்பனாருடன் சுமூகமான உறவிருக்காது. முன்னோர்களின் சாபம் இவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடும். மனதில்
எப்போதும் ஏதாவது குழப்பமும், தேவையற்ற பயமும் இருக்கும். இவருடன் நீண்டகாலம் யாரும் பழக மாட்டார்கள். தொழிலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.
அடிக்கடி தொழில்அல்லது உத்யோகத்தை விட்டு விட்டு வேற தொழில் அல்லது வேலை தேடும் அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.
ஜாதகத்தில் எட்டுக்குரியவர் பத்தாம் பாவத்தில் இருந்தால்
வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் அவமானங்களும்,
வேலைப்பளு, ஊதியக்குறைவு, மரியாதைக் குறைவு போன்ற அதிருப்தியான பலன்களை அதிகம் சந்திப்பர்.
லாபஸ்தானத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் அவர் ஈட்டும் வருமானம் பல வழிகளிலும் கரைந்து காணாமல் போய்விடும். இவரது உழைப்பை பலரும் உறிஞ்சி பயனடைவர். பிள்ளைகளால் மனக்கசப்பும் அதிருப்தியும் இருக்கும்.
பன்னிரண்டாமிடத்தில் எட்டுக்குரியவர் நின்றிட்டால், வேலையில் கெட்டிக்காரனாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல் வேலை செய்வது, இல்லாவிட்டால் மனம் போனபடி சுற்றுவது அல்லது முடங்கிக் கிடப்பது என்று தன் விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு காணப்படும்.
ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?
ஒருவருக்கு பணம் தந்தை மூலமோ , அரசாங்கம் மூலமோ, தாய் மூலமோ , சகோதர வழிகள் மூலமோ, நண்பர்கள் மூலமோ , உறவினர்கள் மூலமோ, பெண்கள் மூலமோ இப்படி எண்ணற்ற வழிகள் மூலம் வரலாம்
1 ஒருவரது ஜாதகத்தில் பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்திருக்கப் பிறந்தவருக்கு அவரது தந்தை மற்றும் அவரது உறவுகள் மூலம் வருமானமும் சொச்துக்களும் வரும்.
2. சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால், தாய் அல்லது தாய்வழி உறவினர்கள் மூலம் வருமானத்திற்கு வழியேற்படும்.
3. சிலருக்கு தொழிலில் அல்லது உறவுகளில் அல்லது வெளிவட்டாரத்தில் பகையாவதும் உண்டு . இந்த பகைவர்களின் சொத்துக்களோ அல்லது அவர்கள் மூலம் நஷ்டஈடு பெறுவதனாலு வருமானம் வருவதுண்டு. இதற்கு பத்தாமிடத்தில் அங்காரகன் அமர்ந்திருப்பது அவசியம். கோர்ட்டு, வழக்கு, வியாக்யங்கள் மூலம் பெரும் வருவாய் ஏற்பட மேற்கூறிய நிலை காரணமாக
அமையும்.
4. சிலருக்கு பெண்கள் மூலமாகவும் வருமானத்துக்கு வழியேற்படும். மனைவி அல்லது காதலி அல்லது வேறு வகையில் பெண் தொடர்பு ஏற்பட்டு அதன்மூலமாகவும் பெரும் பணம் அல்லது சொத்துக்கள் சிலருக்கு அமையும்.
5. சிலருக்கு தங்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், வேலைக்காரர்கள் மூலமும் பெரும் பணம் கிடைக்கும்.
6. . திடீரென்று ஒரு நாள், கார், பங்களா, நகை, சொத்து என்று பெரும் பணக்காரர்களாகி, எல்லோரையும் வியக்க வைக்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இதற்கு ராகுவும், கேதுவுமே காரணமாக அமைவர். ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் பாவத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால் அவருக்கு மேலே கூறியபடி, எப்படி செல்வம் வந்தது என்று அறிய முடியாதபடி, மறைமுகமாகவும் வருமானம் வரும்.
எப்போது வருமானம் வரும்?
ஒருவருக்கு பத்தாமிடத்திலிருக்கும் கிரகத்தின் திசா, புத்தி நடைமுறையில்
இருக்கும்போது வருமானம் வரும்.
திருமணம் வாழ்க்கை நரகமாக காரணம் என்ன?
1. அவஸ்தைகள்
2. தற்கொலை
3. கொலை
4. விவாகரத்து
ஆகியன திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே நடைபெறுவதை நாம் அறிவோம்
1 சந்தேகம் கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை இல்லாமல் போக இதுவும் ஒரு காரணம். சந்திரன் நல்ல இடத்தில் இல்லமல் போனாலும் தீய கிரக சேர்க்கை இருந்தாலும் தீய கிரக பார்வை இருந்தாலும் மனம் கெட்டு போகும். சந்தேக நோய் உருவாகும்.
2. குடுமப ஸ்தானம் கெட்டு போனால் பேச்சு ஒழுங்காக இருக்காது தகாத பேச்சுக்கள் இருக்கும்
3மிடம் இதை வைத்து தம்பதியருக்கு சுகம் கிடைக்காமல் போனதை அறிய முடியும்
4மிடம் கெட்டுபோனால் கிடைக்காமல் அல்லது தவறான வழியில் சுகம் கிடைத்தல்
5மிடம் புத்தி இந்த இடம் கெட்டுபோனால் மனிதனுக்கு அறிவு சரியாக வேலை செய்யாது
6.6மிடம் கெட மனைவியே எதிரியாகும் சூழ்நிலை அமைப்பு
7. . 7மிடம் நட்பு ஸ்தானம். இந்த இடம் கெட்டு போனால் நட்பு பிரியம் இருக்காது.
8. 8மிடம் கெட வாழ்க்கை துணைவர்களே ஒருவர் மற்றவருக்கு அவமானத்தை தரும் சூழ்நிலை அமைப்பு
12மிடம் கெட கட்டில் சுகமில்லா பாதிப்பு ஆகிய பல காரணங்களால் திருமண வாழ்க்கை நரகமாகிவிடுகிறது.
ஜாதகப்படி தொழில்
கிரகங்களால் அமையும் தொழில்
10ல் கேது தனித்து இருந்தால் நல்ல வேலை கிடைப்பது கடினம்
சோம்பலாக இருப்பர்.எதிலும் அக்கரை இருக்காது எதிலும் கவலை இருக்காது
10ல் ராகு கேது இருந்து 6,8,12 க்குடையவர் சேர்ந்திருந்தால் ஜாதகம் சரியான உத்தியோகமிருக்காது.
10ல் சூரியன் குரு நல்ல உத்தியோகத்தை தரும்
ஒருவரது ஜீவனஸ்தானமாகிய 10 மிடத்தில் சூரியன் சம்பந்தப்பட்டால் அரசு உத்யோகம் அரசியல் வருமானம் ஏற்படும்.நகைத் தொழில், தோல் உற்பத்தி, தோல் பதனிடுவது, தோல் பொருள் உற்பத்தி, விற்பனை, வைத்தியம், எலெக்ட்ரிகல் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, மின்துறையில் பணிபுரிதல் அல்லது மின்துறை சார்ந்த பணிகளை காண்ட்ராக்ட் எடுப்பது போன்ற வழிகளில் வருமானம் வரும்
பத்தாமிடத்தில் சந்திரன் சம்பந்தப்பட்டால் நீர் வசதியுடன் கூடிய விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபடுதல் மூலமும், குளிர்பானங்கள் தயாரிப்பு, ஐஸ்க்ரீம், மினரல் வாடர் உற்பத்தி மற்றும் விற்பனை, எ.சி. மெஷின் தயாரிப்பு, விற்பனை, மெக்கானிக், எந்த
பொருளையும் விற்கும் டீலர்ஷிப் , கப்பல் கட்டுவது, கப்பல் கட்டும் துறை சார்ந்த பணிகள், மாலுமியாகி கப்பலை இயக்குவது முதலியன.
சுக்கிரன் 2ல் இருந்தால் கவிஞன், எழுத்தாளர் இவர்களது பேச்சு ரொம்ப இனிமையா இருக்கும். ஆனால் இத்துடன் சனி,செவ்வாய் சம்பந்தபடாது
இருக்க வேண்டும்
சுக்கிரன்,4 ல் இருந்தால் இசைத்துறையில் ஈடுபடுவர்.
சனி,11 ல் இருப்பது- சிற்பம்,சித்திரம் போன்ற தொழில் சினிமாவில் ஆர்ட் டைரக்டர்
சனி,சுக்கிரன் 10 ல இருப்பது கலைத்துறை
புதன்,சுக்கிரன் 10 ல் சினிமா, அழகு சாதனம்,ஆடம்பர பொருள் விறபனை
சந்திரன்,குரு 7ல் இருப்பது ஆன்மீகம்,பாட்டு எழுதுவது,கவிஞன்
சந்திரனுக்கு 10ல் புதன் இருப்பது ஒரு தொழில் திறமையாக செய்து சம்பாதிப்பார்.
2 ஆம் அதிபதி பலம் பெற்று கேந்திர,கோணம் பெற்று குருவின் சம்பந்தம் பெற்றால் மக்களை கவரும் நல்ல பேச்சாற்றல் இருக்கும்
புதன் இருந்தா வக்கீல் மாதிரி பேசுவார். குரு இருந்தா அருமையா புத்திமதி சொல்வார். சனி இருந்தா கண்டபடி பேசுவார். செவ்வாய் இருந்தா மத்தவங்களை அதிகாரம் பண்ணும் பேச்சு இருக்கும்
சந்திரன் 10 ல் இருந்தா நல்ல மருத்துவர். நீர் வசதியுடனான விவசாயம்...
சுக்கிரன்,குரு,செவ்வாய் இவர்களில் ஒருவர் 2 ஆம் பாவகத்தில் இருந்தால் சுக்கிரன் தனுசு,மீனம்,ரிசபம்,துலாத்தில் 2,11,10 ஆம் பாவகத்தில் இருந்தால் ஃபைனான்ஸ் செய்யலாம்
ரியல் எஸ்டேட் செய்ய பலம் பெற்ற செவ்வாய் .2,11 ல் நில ராசியில் இருக்க வேண்டும்..
வழக்கறிஞர்: குரு,புதன் இணைந்து 2,10,11 ல் இருக்க
எழுத்தாளர்: புதன் அல்லது குருவிற்கு 1,5,9 அதிபதிகள் சம்பந்தமடைந்திருக்க
இஞ்சினியர்:செவ்வாய் 10 ல் சம்பந்தப்பட
சிறந்த மேனேஜர்: 8,10 ஆம் அதிபதிகள் சம்பந்தம்மடைந்திருந்தால்
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க செவ்வாய் பலமாக இருக்க வேண்டும் அத்துடன் 4மிடமும் 10 மிடமும் செவ்வாயுடன் பொருந்தி வர வேண்டும் அப்படி யிருந்தால் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். ஜாதகத்தில் குறைபாடு இருக்கமானால்
பவளம் (செவ்வாய்),கோமேதகம் (ராகு) அணியலாம். ராகுவை போல கொடுப்பவனும் இல்லை. கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை. தந்திரம், முரட்டுத்தனம், குறுக்குவழி அனைத்து சட்ட ஓட்டைகளும் அறிந்தவர் ராகு பகவான். பல மிகப்பெரிய அரசியல் ஊழல்களுக்கு காரணமாக இருப்பதும்
இந்த ராகுவே காரணம்.
6மிடம் நோய்
8மிடம் அவமானம்
12 மிடம் துக்கம் துயரம்
ஒருவருக்கு லக்னாபதி 6,8,12ல் இருந்தால் அவர் சொகுசாக உட்கார்ந்து வேலை பார்க்க முடியாது
வெளிநாடு யோகம் யாருக்கு அமையும்?
1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல் வலுவாக இருக்க வேண்டும்.
2. வாயு கிரகங்களான குருவும், சனியும்,
நீர்கிரகங்களான சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல்
நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றில் அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.
3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாட்டு யோகம் அமையும்.
4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆம் இடங்களில் இருந்தால்
வெளிநாட்டு யோகம் அமையும்
சனி நிற்றல் நடத்தல் உடல் உழைப்பு விவசாயம் உணவு பயிர்கள் ஹோட்டல் மெடிக்கல் ரேப் முதலியன.
அவமானம் தந்து வெகுமானம் தரும் தொழில்
குரு அமர்தல் நீதியாக நடத்தல்
சூரியன் வெயில் படுதல் அரசு உத்தியோகம்
சுக்ரன் கலையம்சம் கொண்ட தொழிலில் ஈடுபடுதல் ஆடம்பர தொழிலில் ஈடுபடல்.
ஜவுளி தொழில், சாப்பட்வேர் தொழில்
புதன் அறிவுசார்ந்த புத்திகூர்மை தொழிலில் ஈடுபடுதல்
ராகு\கேது அதுசார்ந்து இருக்கும் கிரகத்தை பொருத்தது
சந்திரன் நீர் மனசு சார்ந்த தொழில்
செவ்வாய் ரானுவம் போலீஸ் வீரம் சார்ந்த தொழில்
ஜாதகப்படி ஆண்மை இல்லாத மணமகன்
ஒருவரின்
வசதிகளையும்,படிப்பையும் பார்த்துவிட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள்.ஆனால்
ஜாதகத்தை சரியான முறையில் பார்க்காமல் விட்டுவிடுகிறார்கள். 100 பவுன் தங்கம்,ஒரு
கார் என வரதட்சணையும் கொடுத்து,அழகான பெண்ணையும் கொடுத்த முதலிரவில் அந்த கட்டிய
கணவன் ஆண்மையற்றவன் என தெரிந்து பின்னர் அவஸ்தை படுகிறார்கள்
லக்னம் இதன் மூலம் ஒருவர் ஆண்மை யுள்ளவரா என்பதை அறிய முடியும்
லக்னம் இதன் மூலம் ஒருவர் ஆண்மை யுள்ளவரா என்பதை அறிய முடியும்
3மிடம் மூலம் ஒருவரின் செயல் திறமை வீரியம் அறிய முடியும்
4 மிடம் மூலம் ஒருவருடைய சுகம் பெரும் நிலையை அறிய முடியும்
5மிடம் மூலம் ஒரு நபர் பெண்ணிடம் கொண்ருக்கும் மன ஈர்ப்பு சக்தியை அறிய முடியும்
6மிடம் மூலம் அவருக்கு இருக்கும் செக்ஸ் நோய்களை அறிய முடியும்
7மிடம் மூலம் அவர் எப்படி செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்
8மிடம் மூலம் அவர் எப்படி முறையற்ற செக்ஸ் பண்ணுவார் அவர் உறுப்பின் அளவு அதன் திறமை முதலியன அறியலாம்
9மிடம் மூலம் அவர் செக்ஸ் எப்படி அக்கறையாக செய்வார் என்பதை அறிய முடியும்
11மிடம் 7மிடம் முதலியன மூலம் எத்தனை பேரிடம் செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்
12 மிடம் மூலம் அவர் காணும் கட்டில் சுக அளவை அறிய முடியும்
குருவின் நிலை கண்டால் ஒருவரின் விந்து நிலை அறிய முடியும்
சுக்ரனின் நிலை கண்டால் அவரது காமவசபடுதலை அறிய முடியும்
செவ்வாய் நிலை அறிந்தால் அவரது ஆணுறுப்புக்கு செல்லும் ரத்தத்தின் அளவை அறிய முடியும்
புதனின் நிலை அறிந்தால் அவர் எப்படி ந்னகு பெண்ணுடன் சரசவிளையாட்டை விளையாடுவார் என்பதை அறிய முடியும். அவரது நரம்பின் திறனும் அதன் உணர்ச்சி கடத்தும் திறனும் அறிய முடியும். இதன் மூலம் அவர் எவ்வளவு நேரம் செக்ஸ் செய்வார் என்பதையும் அறிய முடியும்
சந்திரனின் நிலை அறிந்தால் அவரது மனம் எப்படி செக்ஸ் பற்றி நினைக்குறார் என்பதை அறிய முடியும்
ராகு\கேது நிலை அறிந்தால் அவர் எப்படி மோசம் போகிறார் என்பதை அறிய முடியும்.
சனி நிலை யறிந்தால அவர் எப்படி ஆண்டம இழக்கிறார் என்பதை அறிய முடியும்
சூரியன் நிலை அறிந்தால் அவரது மூளை எப்படி செக்ஸ் பண்ணுவதில் வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்
அந்தக் காலத்தில் பெரிய பாறாங்கல்லை சுமப்பது ,காளையை அடக்குவது ஆகியன பண்ணுபவர்களுக்கே
பெண் தரப்பட்டது.இதினால் ஆணி்ன் முயற்சி, உடல் வலிமை, மன உறுதி, பெண்ணை அடைவதில்
இருக்கும் ஈடுபாடு முதலியவற்றை அறிய முடிந்தது
ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?
ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?
1. 1மிடம் .லக்னம். இது ஜாதகரை பற்றி அறிய. பிரச்சனைக்கு உரிய தீர்வு என்ன? அது எப்போது?
2. 2மிடம். பணவரவினங்களை பற்றி அறிய, கண்ணை பற்றி அறிய, வாக்கு, புதியன வருதல்,
புதிய நபர் வருகை பற்றி,ஷேர் மார்க்கெட், இளைய சகோதரத்தின் இடமாற்றம்.
குழந்தையின் தொழில் வெற்றி,தந்தையின் நோய்,செருப்பு,கண்,பண இருப்பு,
விலை மதிப்புமிக்க பொருள், ஜாதகரது குடும்பம், வருமானம், வரவேண்டிய பணம் முதலியன
3. 3மிடம். சகோதரம்,தைரியம், வீரியம்\வீரம்,வெற்றி, அண்டை வீடுகள்,குறு தூரப் பயணம்,
மெயில\போன் செய்திகள், தகவல் தொடர்பு, வீடு விற்பனை, வேலைக்காரர்கள், செய்திகள்,
பேரம் பேசுதல்,பாகப்பிரிவினை செய்தல், ஆரம்ப கல்வித் தடை, நிருபர்கள், புரோக்கர்கள் பற்றி
4. 4மிடம் தாய், சுகம், குழந்தைக்கு வைத்தியம் செய்வது, வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்,
வீடு வாசல் ,மாடு,கன்று, கல்லறை,இரகசிய வாழ்க்கையை பற்றி, கற்பு பற்றி, தோட்டம், கட்டிடங்கள்,
விவசாயம், ஆரம்பக் கல்வி,வியாபாரம், நீர் ஊற்றுக்கள், திருடி வைத்திருக்கும் பொருட்கள்,
புதையல் பற்றி.
5. 5மிடம் குழந்தையைப்பற்றி, குழந்தை உண்டா? எப்போது,எத்தனை, குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு,
குழந்தைக்கு தொந்தரவு, பாட்டன்,பாட்டி,பூர்வ ஜென்ம புண்யம், மனம், எண்ணம், வம்சா வழி,காதலைப்பற்றி
சந்தோஷம் பற்றி, அதீர்ஷ்டம்,இஷ்ட தெய்வம்,சிற்றின்பம், மந்திர உச்சாடனம்,உபாசனை, இஷ்ட தெய்வம்,
கற்பழிப்பு,வழிபாடு,ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் முதலியன
6. 6மிடம் கடனை பற்றி,நோய்யை பற்றியோ,வழக்கு பற்றி, ஜீரணம், ஊழியர், சிறுதொழில்,
சிறிய வருமானம் தரும் தொழில்,வெற்றிக்கான தடை, கஞ்சத்தனம், மிகப்பேராசை,
திருட்டு பற்றி, ஜெயில், மூத்த சகோதர பிரச்சினை, வளர்ப்புப் பிராணிகள், வீட்டு மிருகங்கள்
பற்றி அறிய
7. 7மிடம் திருமணம் , திருமண வாழ்க்கை , மனைவி, சட்டப்படியான அங்கீகாரம், சமூகப் பழக்க வழக்கம், நண்பர்கள்,
ஆயுளுக்குத் தொந்தரவு, திருடனைப் பற்றி, வேலையாட்களின் பணம், பொது ஜனத் தொடர்பு,
அபராதம், ஒரு பொருள் திரும்பக் கிடைத்தல் பற்றி,வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும்
இரகசிய விரோதிகளால் ஏற்படும் தொந்தரவு பற்றி, காணாமல் போனது எப்போது கிடைக்கும்
8. ஆயுள்பற்றி, காணாமல் போனது பற்றி, அவமானம் பற்றி,கண்டம் பற்றி, இயற்கையான மரணம்,
கெட்ட பயம்,வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு, வட்டி கட்டுதல்,திடீர் அதிஷ்டம், உயில்தடை,
கெட்ட செயல், வரதட்சணை,சீர், மாங்கல்யம், காணாமல் போனது எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும்,
ஆப்ரேஷன் பற்றி, கர்பப்பை பற்றி,வரவேண்டிய பணம், மரணம்.
9. தந்தை,மத ஆச்சாரம்,குல வழக்கம்,குருவை பற்றி,உடனே பலன் தரும் தெய்வம், மதத்தின் மீதானபற்று,
மறுஉலக தொடர்பு, பெரியவர்கள், தூரத்து செய்திகள்,திருமண மண்டபம்,கலாச்சார விருப்பம்,
நீண்ட தூரப் பயணம், தொழில் விரயம், தெய்வ வழிப்பாட்டு இடம்,தம்பியின் மனைவி,
பணம் புரட்டுதல்,ஜபம்,உயர் கல்வி ,வெளிநாட்டுப் பயணம்,
10. தொழில்,ஜீவனம் ,புகழ்,கௌரவம்,சமூக அந்தஸ்த்து,கர்மம்,கருமாதி,இறுதிச்சடங்கு,
புனித வழிபாடு,குழந்தையின் நோய்,மூத்த சகோதரத்தின் விரயம்,தத்துக் குழந்தைகள்,
தீர்ப்பு,மரணம் அடைந்தவர்களை பற்றி.
11. லாபம்,மூத்த சகோதரம்,எதீர்பார்த்தது நன்மையில் முடியுமா?,நண்பர்கள்,ஆசைகள்,
முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசனை. உதவி கிடைக்குமிடம்
வெற்றி,மருமகன்,மருமகள்,நீர்ப் பாசன வசதிகளுடன்கூடிய விவசாய நிலங்கள்.
அரசு மன்றங்கள்\குழுக்கள் (சட்ட சபை,ஊராட்சி,நகராட்சி),நிரந்தர நட்பு\நண்பர்கள்,திட்டங்கள்
வரவேண்டிய பணம் கிடைக்கும் நேரம் முதலியன.
12. செலவு\விரையம், மருத்துவம், நஷ்டம் முதலியவை பற்றி முக்தியடைதல் மோட்சம் கிடைத்தல் பற்றி.
திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு
திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்
மணமகன் மணமகள் ஜாதகத்தில்
1. முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்
2 ஆயுள் பாவமான எட்டாம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்
3. களத்திர பாவமான ஏழாம் இடமும் சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா எனறு பார்க்க வேண்டும்
4 பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்
5. இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு , லக்கிண அமைப்பு ,யோக அமைப்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.
6. இருவர் ஜாதகத்திலும், திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது
இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும். திருமண பொருத்தத்திவல் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
சிலர் மிருகசீரிடம் , மகம் , சுவாதி, அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்
பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறான நடைமுறையாகும்
எல்லோருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான நிகழ்ச்சி ஆகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது அனம் ஒத்து செயல்படுவது நிதானமாக பொருமையாக செயல்படுவது முறைப்படி செயல்படுவத, குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயஙகள்இருக்கிறது.
சொந்த வீடு யோகம் யாருக்குண்டு
எல்லோருக்குமே வீடு வாங்கனும் வாகனம் வாங்கனும் என்ற ஆசை இருக்கும்
4மிடம் நன்கு இருந்தால் செவ்வாயும் நன்கு இருந்தால் வீடு அமையும்
4ல் சனி மிகவும் நன்கு இருக்க அரண்மனை போல வீடு அமையும்
4ல் சுக்ரன் மிகவும் நன்கு இருந்தால் கலையம்சத்துடன் கூடிய ஆடம்பர மாளிகையாக அமையும். இப்படி 4ல் என்ன இருக்கு 4மிடத்து அதிபதி சேர்ந்திருக்கும் கிரகங்களின் நிலை, 4 பார்க்கும் கிரகங்களின் நிலை அறிந்து முடிவு பண்ண வேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் லெட்சுமி யோகம் இருந்தால் அவர்கள் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரராகவோ இளமையிலேயே மாறுவார்கள்.
லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சத்தில் இருக்கவேண்டும்.. ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும்,ஆட்சி அல்லது உச்சம் பெற்று தனாதிபதியுடன் இணைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் லட்சுமி யோகம் வரும்.
மின்சார அறை, உபரணங்கள் அமைக்கும் இடங்கள்
மின்சார அறை, உபரணங்கள் அமைக்கும் இடங்கள்
வாழும் வீட்டிற்கு மிக முக்கியமானது
மின்சாரமாகும். மின்சாரம் இல்லாமல் நம்மால் ஐந்து நிமிடங்கள் வாழ முடியுமா என்றால்
முடியாது என்றே கூற வேண்டும். தற்போதுள்ள விஞ்ஞான யுகத்தில் சமைக்கும் அடுப்பு
முதல் சமையல் செய்யும் பாத்திரங்கள் வரை மின்சாரத்தில் இயங்க கூடியவையாக
இருக்கின்றன. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில்
இருப்பதால் வீட்டிற்கு வந்தோமா? சுவிட்சை தட்டினோமா? சமையலை முடித்தோமா? என அவசர
கதியில் செயல்பட்டு சாப்பிட்டு முடித்தவுடன் அறைக்கு சென்று ஒய்வெடுக்கவே
விரும்புகிறோம். ஒய்வெடுப்பதற்கும் வேண்டாமா ஏ.சி. பழைய பாடல் ஒன்றில் பட்டனை தட்டி
விட்டால் தட்டில் இட்லி வந்திடனும்,காபியும் வந்திடனும் என வரிகள் இருக்கும். பாரதி
பாடிய பாடல்கள் பலித்ததோ இல்லையோ மின்சார வசதியால் பட்டனை தட்டி இட்லி வருவது
உண்மையாகி விட்டது.
இத்தனைக்கும் உறுதுணையாக இருக்கும் மின்சார
போர்டினை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது என பார்க்கும் போது மின்சாரம் என்பது
நெருப்பு, உஷ்ணம் சார்ந்த பொருள் இந்த நெருப்பு சார்ந்த பொருளான மின்சார போர்டினை
அக்னி முலை என கூறக்கூடிய தென் கிழக்கு மூலையில் வைப்பது நல்லது. அது போல ஒவ்வொரு
அறைக்கும் வைக்க கூடிய சுவிட்ச் பாக்ஸினை தென்கிழக்கு பகுதிலேயே அமைப்பது சிறந்தது.
வசதி படைத்தவர்கள் ஜெனரேட்டர், ஹி.றி.ஷி போன்றவற்றையும் பயன்படுத்தினால் அவற்றை
கட்டியத்தின் தென்கிழக்கு அறையில் வைப்பது சிறப்பு. பெரிய கட்டிடங்கள், வணிக
வளாகங்கள் போன்றவற்றில் மின்சார தேவைகளுக்காக ஜெனரேட்டரை பயன்படுத்துகிறார்கள்.
அவற்றை எந்த பகுதியில் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது
கட்டிடத்தின் வெளியே தென்கிழக்கு பகுதியில் அமைப்பது சிறப்பு.
வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் ஆடம்பரமான
வாழ்க்கையை வாழவே விரும்புகிறான். ஆசைகளுக்கு அளவில்லை என்பார்கள். ஒரு 30
வருடங்களுக்கு முன்பு கூட சைக்கிள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான்
இருந்தது. எங்காவது வெளியில் செல்பவர்களும் வாடகை சைக்கிளை தான் எடுத்து
செல்வார்கள். சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பவர்கள் அப்பொழுது பணக்காரக்கள். ஆனால்
இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களோ இல்லையோ வீட்டிற்கு ஒரு
கார் பைக் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பெட்ரோல்,டீசல் விலைகள் எவ்வளவு தான்
ஏறினாலும் வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. முதலில்
சொந்த வீட்டை கட்ட ஆசைப்படும் மனிதன் அடுத்த வாங்க நினைப்பது வண்டி வாகனங்களை
தான்.
சொந்த வீட்டின் முன் ஒரு கார் அல்லது பைக்
நிற்பது என்பது பெருமையான விஷயம் தானே. வண்டி வாகனங்களை வாஸ்துப் படி எங்கு
நிறுத்தினால் நல்லது என பார்க்கும் போது ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில்
அதிக எடையுள்ள வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது. ஈசான்ய மூலை ஈசனே குடியிருக்க கூடிய
இடம் என்பதால் இங்கு வாகனங்களை நிறுத்துவதால் அதன் டயர்க்களில் ஒட்டியிருக்கும்
சேறு, மற்றும் அதிலிருந்து வழியும் ஆயில் பெட்ரோல் ஆகியவை அந்த இடத்தில்
படுமேயானால் அந்த இடத்தின் தூய்மையானது கெட்டுவிடும். எனவே வடகிழக்கு மூலையில்
வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது.
வடகிழக்கு மூலையைத் தவிர தென்கிழக்கு,
தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வண்டி வாகனங்களை நிறுத்தும் இடமாக அமைத்து
வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கின் உச்ச
ஸ்தானத்தில் வாசற்படி இருக்கும் போது வண்டி கார் நிறுத்துமிடமாக தென்கிழக்கை
அமைப்பது நல்லது.
கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கில்
உச்சஸ்தானத்தில் வீட்டின கேட் இருக்கின்ற போது வண்டி கார் நிறுத்துமிடமாக வடமேற்கு
பகுதியாக இருப்பது நல்லது.
தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான
தென்கிழக்கில் வீட்டின் கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக
தென்கிழக்கு பகுதியாக இருப்பது நல்லது.
மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்க்கின்
உச்ச ஸ்தானத்தில் வீட்டின் கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக
வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது.
மேற்கூறியவாறு உச்ச ஸ்தானங்களில் கேட்டை
அமைத்து அதன் வழியே வண்டி வாகனங்கள் செல்லுமாறு அமைத்துக் கொள்ளலாம்.
அப்படி இல்லாமல் இடபற்றா குறை உள்ளவர்கள்
நீச ஸ்தானங்களில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடிய (இடம்) கேட் அமைக்க வேண்டிய
சூழ்நிலை வருமேயானால் அந்த வழியை வண்டி வாகனங்கள் நிறுத்தவதற்கு மட்டும் அமைத்துக்
கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு உச்ச ஸ்தானத்தில் கேட்டை அமைப்பது நல்லது.
அலமாரி
ஒரு வீட்டின் துணிமணிகள் மற்றும் பொருட்கள்
வைப்பதற்கு கபோர்டு மற்றும் செல்ப் அமைக்கிறார்கள். அவை எந்த திசையில் அமைத்தால்
வாஸ்து ரீதியாக நல்லது என பார்க்கும் போது தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில்
அமைப்பது மிகவும் சிறப்பு பொதுவாக தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் பரனை அமைத்து
அதற்கு கீழ் செல்ப் அமைப்பது மிக சிறப்பு. தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் செல்ப்
அமைக்கும் போது தென் கிழக்கு மூலை மற்றும் வடமேற்கு மூலையில் சற்று இடம் விடுவது
மிகவும் சிறப்பு. குறிப்பாக வடக்கு ஒட்டிய மேற்கு திசையிலும், கிழக்கு ஒட்டிய
தெற்கு திசையிலும் மூன்று அடி விட்டுவிட்டு செல்ப் கட்டுவது அனுகூலமான அமைப்பாகும்.
பொதுவாக மேற்கு மற்றும் தெற்கு திசையில் செல்ப் அமைக்கும் போது ஏதாவது ஒரு திசையில்
மட்டும் செல்ப் கட்டி விட்டு மற்ற இடங்களை காலியாக விட்டால் அதுவும் தென்மேற்கு
மூலையை சற்று காலியாக விட்டால் அங்கு பீரோ மற்றும் பணப்பெட்டி வைப்பதற்கு வசதியாக
இருக்கும். அது மட்டுமின்றி ஒரு புறம் செல்ப் கட்டி விட்டு மற்றொரு புறத்தை காலியாக
விட்டால் கட்டில் போடுவதற்கு வசதியாக இருக்கும்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில்
செல்ப் அமைக்கவே கூடாது. அதுவும் வடகிழக்கு திசை, கிழக்கு ஒட்டிய வடக்கு பகுதி,
வடக்கு ஒட்டிய கிழக்கு பகுதியில் கண்டிப்பாக செல்ப் அமைக்க கூடாது. ஏனென்றால் அந்த
இடங்களில் அதிக எடை கொண்ட பொருட்கள் இருக்க கூடாது என்ற காரணத்தால் காலியாக விட்டு
விட வேண்டும் என்பதாலும் வடக்கு மற்றும் கிழக்கு சுவற்றில் செல்ப் கட்டாமல்
இருப்பது நல்லது. அப்படி கட்டியே ஆக வேண்டும் என்றால் தென்கிழக்கு திசையிலும்,
மேற்கை ஒட்டிய வடக்கு திசையிலும் செல்ப் அமைக்கலாம். சமையலறையில் செல்ப் அமைக்கும்
போது கண்டிப்பாகத் தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் செல்ப் அமைப்பது சிறப்பு.
படிக்கும் அறை
காலத்தால் அழக்க முடியாதது கல்வி செல்வம்.
கல்விக்கு ஞாபக சக்தி என்பது மிகவும் முக்கியமாகும். கல்வி பயிலுவதில்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேறுபாடு இருக்கும். சிலர் புத்தகத்தை திறந்து
வைத்திருப்பது போல தான் இருக்கும். ஆனால் மனதிற்குள்ளேயே மனப்பாடம் செய்வார்கள்.
சிலருக்கோ பள்ளியில் சொல்லி தரும் பாடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால்
ஒரு சிலர் தொண்டை வலிக்க கத்தி கத்தி படித்தால் தான் மண்டையில் ஏறும். இப்படி பல
விதங்களில் கல்வி பயிலுபவர்களுக்கு சரஸ்வதி தேவியின் துணையிருக்க, வாஸ்துபடி
வீட்டின் எந்த திசையில் படிக்கும் அறையினை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என
பார்க்கின்ற போது, படிக்கும் மாணவ மாணவிகள் வடக்கு அல்லது கிழக்கு பார்த்து
அமர்ந்து படிப்பது சிறப்பு. பொதுவாக படிக்கும் அறையானது, வடக்கு, வடகிழக்கு,
வடமேற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் அமைவது நல்லது.
தென்மேற்கு அறைக்கும், வடமேற்கு
அறைக்கும் நடுவில் உள்ள பகுதியில் படிக்கும் அறை அமைப்பதும் வடமேற்கு மேற்கு
பகுதிக்கு வடகிழக்கு பகுதிக்கும் மத்தியில் உள்ள வடக்கு பகுதியில் படிக்கும் அறையை
அமைப்பது நல்லது. அதுபோல புத்தகங்களை வைத்து படிப்பதற்கு உபயோகிக்க கூடிய மேஜை
நாற்காலிகளை அறைக்கு தென்மேற்கு, மேற்கு வடமேற்கு பகுதியில் அமைத்து வடக்கு அல்லது
கிழக்குப் பார்த்து படிப்பது போல அமைப்பது சிறப்பு.
புத்தகங்களை அடுக்கி வைக்கும் செல்ப்புகளை
படிக்கும் அறைக்கு தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் அமைத்துக் கொள்வது சிறப்பு.
படிக்கும் அறையில் வடகிழக்கு பகுதியில் அதிக எடையுள்ள பொருட்களை (புத்தக செல்ப்)
வைக்காமலிருப்பது நல்லது. ஆக படிக்கும் அறையானது தென்மேற்கு பகுதியை தவிர மற்ற
பகுதிகளில் அமைத்தால் கல்வியில் நல்ல முன்னேற்றம், ஞாபகசக்தி, யாவும் உண்டாகும்.
வராண்டா&(பால்கனி)
வாஸ்து என்பது வாழ்வில்
முக்கியமானதாகிவிட்டது. அந்த காலத்தில் வசிக்கும் இடங்கள் தாராளமாக இருந்ததால்
வீட்டைச் சுற்றிலும் தாழ்வாரங்கள் அமைந்திருக்கும். இதில் காய் கறிகளை கூட பயிர்
செய்து கொள்வார்கள். மழை காலங்களில் இந்த தாழ்வாரங்களால் வீடு மண் சுவற்றால்
கட்டப்பட்டதாக இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்புடன் இருக்கும்.
தற்போதைய சூழ்நிலை அப்படி இருக்கிறதா என்று பார்த்தால் இரண்டு பேர் வசிக்கும்
இடத்தில் ஐந்து பேர் கூட வசிக்கும் சூழ்நிலை உள்ளது. சொந்த வீடு என்பதே ஒரு கனவாக
வாழும் மனிதர்கள் மத்தியில் நகரங்களில் சொந்த வீட்டில் வாழுவோருக்கு தாம் வாழும்
இடத்திற்கேற்ப வாகனங்கள் நிறுத்துவதற்கும், கட்டிடம் பார்ப்பதற்கு பார்வையாக
இருப்பதற்கும் ஏற்ற வகையில் போர்டி கோ என்ற ஒன்றை அமைத்து கொள்கிறார்கள்.
இந்த
போர்ட்டி கோக்கள் கட்டிடத்தின் முழு நிளத்திற்கும் அகலத்திற்கும் ஏற்றவாறு அமைக்கப்
படுவதில்லை. தங்களின் தேவையை கருதியும், சிக்கனத்தை முன்னிட்டும் போர்டிகோ வை
அளவிற்கேற்ப அமைத்து கொள்கிறார்கள். மண்தரையாக இல்லாமல் சிமெண்ட் கான்கிரேட்
போட்டு அமைத்தாலும் போர்டிகோவும் கட்டிடத்தின் முக்கிய அங்கமாகவே உள்ளது. இட
நெருக்கடி நிறைந்திருந்தாலும் சிறுக கட்டி பெருக வாழ் என்பதற்கேற்ப அமைக்கும்
போர்டிகோ வை வாஸ்துபடி அமைப்பதே நல்லது.
வாஸ்து சாஸ்திர ரீதியாக ஒரு வீட்டிற்கு போர்டி
கோவை எங்கு அமைப்பது சிறப்பு என பார்க்கின்ற போது ஒவ்வொரு திசைக்கும் உள்ள உச்ச
ஸ்தானத்தில் அமைப்பது நல்லது.
வடக்கு பார்த்து அமைந்துள்ள வீட்டிற்கு உச்ச
ஸ்தானமான வடகிழக்கு மூலையில் அதாவது ஈசான்யத்தில் போட்டி கோவை அமைப்பது மிகவும்
சிறப்பாகும். முடிந்த வரை வடகிழக்கை ஒட்டியே அமைப்பது நல்லது. வடமேற்கு பகுதியில்
போர்டிகோவை அமைப்பது நல்லதல்ல.
கிழக்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான
ஈசான்யத்தில் அதாவது வடகிழக்கு மூலையில் போட்டி கோவை அமைப்பது மிகவும் சிறப்பு
முடிந்த வரை வடகிழக்கை ஒட்டியே அமைப்பது நல்லது. தென்கிழக்கு அக்னி மூலையில்
கிழக்கு பார்த்த வீட்டிற்கு போர்டு கோ இருக்க கூடாது.
தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான கிழக்கை
ஒட்டிய தென்கிழக்கு பகுதியில் போர்டிகோ அமைப்பது மிகவும் சிறப்பு.மேற்கை ஒட்டிய
தெற்கு பகுதியில் அதாவது தென்மேற்கு பகுதியில் போர்டி கோவை அமைக்க கூடாது.
மேற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான
வடமேற்கு பகுதியில் அதாவது வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் போட்டி கோவை அமைப்பது
நல்லது. மேற்கை பார்த்த வீட்டிற்கு நீச்ச ஸ்தானமான தென்மேற்கு பகுதியில்
போர்டிகோவை அமைப்பது நல்லதல்ல.
மேற்கூறிய எந்த திசையில் போர்டிகோவை அமைத்துக்
கொண்டாலும், அதன் மேற்கூரையானது எத்தனை அடி உயரத்தில் இருக்க வேண்டும் என
பார்க்கின்ற போது வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு போர்டி கோவின்
கூரையானது கட்டிடத்தின் கூரையை விட சற்று உயரம் குறைவாக இருப்பதும், சூரிய
வெளிச்சம் உள்ளே வரும் படி அமைப்பதும் சிறப்பு.
தெற்கு மற்றும் மேற்கை பார்த்த வீட்டிற்கு
அமைக்கும் போர்டிகோ வின் கூரையானது கட்டிட கூரை எந்த உயரத்திலிருக்கின்றதோ அதே
உயரத்தில் இருப்பது நல்லது. மேல் தளம் கட்டுகின்ற போது தெற்கு மேற்கு பார்த்த
வீடுகளுக்கு அமைக்கும் போர்டி கோவிற்கு மேலே கட்டிடம் கட்டுவதும் நல்லது
தான்.
இப்படி மேலே அமைக்கும் இடத்திற்கு பால்கனி என்று
பெயர். பால்கனி மேலுள்ள வீட்டுடனேயே சேர்ந்திருக்கும் முன்பகுதியாகும் தற்போதுள்ள
இடபற்றா குறைகளில் பால்கனியுடன் வீடு இருப்பது மிகவும் சௌகர்யமான அமைப்பாகும்.
சாயங்கால வேளைகளில் உட்கார்ந்து காற்று வாங்க, ரோட்டில் வருவோர் போவரை வேடிக்கைப்
பா£க்க, துவைக்கும். துணிகளை உலர்த்த, பூச்செடிகள் வளர்க்க என பலவற்றிற்கும்
பால்கனி உதவிகரமாக உள்ளது. ஒவ்வொரு திசைக்கும் போர்டி கோவை எப்படி உச்ச ஸ்தானத்தில்
அமைக்கின்றோமோ அதுபோல பால்கனியை அமைப்பதும் சிறப்பு.
தெற்கு மற்றும் மேற்கு திசையில் அமைய கூடிய
பால்கனிகள் முடிந்தவரை சிறிதாக இருப்பதும் கிரில் போன்றவற்றால் மூடி வைப்பதும்
நல்லது.
வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அமைய கூடிய
பால்கனிகள் சற்று விசாலமாக இருப்பதும் முடிந்த வரை திறந்தே இருப்பதும் சிறப்பு.
கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்
கற்பு என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானதுதான் . ஒருவர் மனதளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது உடலளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது இரண்டு முறையிலுமே கற்பிலந்து போகிறாரா என்பதை அவர்களின் ஜாதகத்தை பார்த்து அறியலாம்.
ஒருவர் கற்பலிக்கபடுவாரா அல்லது மனமறிந்து
கற்பிலந்து போவாரா அல்லது ஏமாற்றப்பட்டு கற்பிலந்து போவாரா அல்லது மிரட்டப்பட்டு
கற்பிலந்து போவாரா என்பதையும் அவர்களின் ஜாதகத்தை கண்டு அறிந்து கொள்ளலாம்.
ஒருவரின் தோல் உணர்ச்சிகள்,நரம்பு உணர்ச்சிகள் பற்றிய விவரங்களை புதனின் நிலையை
வைத்து அறியலாம். ஒருவரின் இரத்த சம்பந்தமான உணர்ச்சிகளை செவ்வாய் இருக்கும் நிலையை
வைத்து அறியலாம். அதாவது அவர் உணர்ச்சி வசபடும் நிலையை இதன் மூலம் அறியலாம். மனதால்
வசமாகி கெட்டுப்போகும் நிலையை சந்திரனின் இருப்பை வைத்து அறியலாம்.
காமவசமாகி
உடலால் கலந்து கற்பிலந்து போகும் நிலையை சுக்ரனின் இருப்பை வைத்து அறியலாம்.
காமவசமாகுதலின் மூளையும் ஒத்துழைக்கிறதா என்பதை சூரியனின் நிலை வைத்து கண்டறியலாம்.
இயற்கைக்கு மாறான சுயஇன்பம் கான்பவரா என்பதை சனியின் நிலை வைத்து அறியலாம். ஆபாச
படம், ஆபாச வீடியோ பார்த்து கெடுபவரா அல்லது ஆவிகளுடன் அல்லது அமனுஸ்ய சக்திகளுடன்
இன்பம் கான்பவரா என்பதை ராகு கேது இருக்கும் நிலை வைத்து அறியலாம். இயந்திரங்கள்
அல்லது விலங்கினங்கள் மூலம் இன்பம் காண்பவரா என்பதை செவ்வாய் நிலை வைத்து அறியலாம்.
10மிடத்தை வைத்து விபசாரம் செய்து வருமாணம் ஈட்டுபவரா என்பதையும்
அறியலாம்
குருவின் நிலையறிந்து அவர் கற்புள்ளவரா அல்லது மனமறிந்து கற்பிலந்தாலும் திருந்தி நல்வழியில் வாழ்பவரா என்பதை அறியலாம்.
தெரு குத்தில் வீடு அமைவது நல்லதா கெடுதலா?
வீடுகள் வரிசையாகவும் பக்கம் பக்கத்தில் ஒரே
சீராகவும் அதே போல எதிர்திசையிலும் வீடுகள் அழகாகவும், வரிசையாகவும் அமைவதே
நல்லது. ஆனால் சில இடங்களில் வீட்டிற்கு நேர் ஏதிராக தெருக்கள் செல்வதை காணலாம்.
அதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமோ, தெருகுத்து வீடாகி விடுமோ என்ற பயம்
எல்லோருக்குமே உண்டு. அதனால் அப்படி அமையும் தெருக்குத்து வீடுகளின் வாகனங்களில்
பிள்ளையாரை வைத்து தினமும் பூஜை செய்வார்கள். அதுபோல அந்த தெரு முடியும் இடத்திலும்
பிள்ளையாரை வைத்து கோயில் கட்டுவதும் உண்டு. இப்படி தெரு குத்தில் வீடு அமைவது
நல்லதா கெட்டதா என வாஸ்து ரீதியாக ஆராயும் போது ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன்
உண்டு.
பொதுவாக உச்ச ஸ்தானத்தில் ஏற்படக் கூடிய
தெருகுத்து நன்மையை தரும். நீச்ச ஸ்தானத்தில் மீது ஏற்படும் தெரு குத்து கெடுதியை
தரும். அதாவது
வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு திசையின்
மீது ஏற்பட கூடிய தெரு குத்து நன்மையை செய்யும். அதுவே வடமேற்கு திசையில்
தெருக்குத்து ஏற்பட்டால் அது கெடுதியை தரும்.
கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு பகுதியில்
தெரு குத்து ஏற்பட்டால் அது கெடுதியை செய்யாது. அதுவே தென் கிழக்கு பகுதியில் தெரு
குத்து ஏற்பட்டால் அதனால் கெடுபலன்கள் ஏற்படும்.
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில்
ஏற்பட கூடி தெரு குத்து கெடுதியை செய்யாது. அதுவே தென்மேற்கு பகுதியில் தெரு குத்து
ஏற்பட்டால் கடுமையான பாதிப்பை தரும்.
மேற்கு பார்த்த
வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுதியை செய்யாது அதுவே
தென்மேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுபலனை உண்டாக்கும்.
Monday, 27 August 2012
நவரத்தினங்களால் விளையும் நன்மைகள்
வாழ்க்கை வண்டியானது நம்பிக்கை சக்கரத்தில்தான்
சுழன்று கொண்டிருக்கின்றது. என்னால் இது முடியும், நான் இதைச் சாதிப்பேன்,
வாழ்க்கையில் நானும் உயர்வடைவேன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியங்கள்.
லட்சியங்கள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் இல்லாத ஓடையைப் போன்றது. வறண்ட வாழ்க்கையை
யாரும் விரும்புவதில்லை. எதையாவது சாதிக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் கனவாகும்.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் நாட்களானது லட்சியங்கள் நிறைந்ததாக
இருக்கு வேண்டும்.
ஆனால் நினைத்தவுடன் நம் லட்சியங்கள்
எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது.
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். இறைவன்
இருக்கின்றானா? இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட, நமக்கும் மேல் ஒரு சக்தி
இருக்கிறது என்பதை நம்பினால் போதும். அது எந்த உருவத்தில் இருந்தாலும் சரி.
மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் நம் கையில்
இல்லை என்பார்கள். ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் அந்த தேதி, மாதம், வருடம்,
நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை வைத்து ஜனன ஜாதகம் என்ற ஒன்றைக் கணிக்கிறோம். அந்த
குழந்தை பிறந்த நேரத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அதுவே அக்குழந்தையின் ஜனன
நட்சத்திரம் ஆகும். நவக்கிரகங்களில் அந்த நட்சத்திரம் எந்த கிரகத்திற்குரியதோ,அந்த
கிரகத்தின் திசைதான் அக்குழந்தைக்கு முதலில் நடைபெறும். இது தொன்று தொட்டு
நடைமுறையில் உள்ளது. ஒரு மனிதனுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், அவனது வாழ்வில்
கிடைக்கும் வெற்றிகளை வைத்தே அவனுடைய பெயரையும் புகழையும் உயர்த்தும் நல்வாழ்வு
கிடைக்கும்.
அதுவே தொட்டதெல்லாம் தோல்வியாகும் போது மனம்
உடைந்து போகிறான். ஏனிந்த அவலநிலை என யோசிக்கிறான். உடல் நிலை சரியில்லாதபோது
டாக்டரைத் தேடி ஓடுவதைப் போல வாழ்க்கை நிலை சரியில்லாதபோது அவனுடைய ஜனன ஜாதகம் என
ஒன்றிருப்பது அவனின் நினைவுக்கு வரும்.
அப்பொழுது ஜனன ஜாதகம் கிரக நிலைகள் என்ன திசையில்
நடைபெறுகிறது, அத்திசையில் விளையும் நன்மை தீமைகள் என்னென்ன? என்பதை அறிந்து
கொள்வதுடன் நவரத்தினங்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். நடைபெறும் திசை பலமற்று
இருந்தால், அத்திசையை பலப்படுத்துவதற்காக அத்திசைக்குரிய நவரத்தினக் கல்லை அணிந்து
கொண்டால் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் குறையும் என்பதையும் உணர்கிறோம்.
நவரத்தினங்கள் அணிவதிலும் நிறைய விதிமுறைகள்
உள்ளன. பலர் நவரத்தினங்களை ஒன்றாக சேர்த்து அணிகிறார்கள். இது முற்றிலும்
தவறானதாகும். எல்லா நவரத்தினங்களும் ஒரே நேரத்தில் நல்லதைத் செய்யும்
எனக்கூறமுடியாது. சில ரத்தினங்கள் அந்த ஜாதகருக்கு தோஷத்தை தருவதாக இருந்தால்
நற்பலன்கள் ஏற்படுவதற்கு பதில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும். அதாவது எலி
வலைக்கு பயந்து புலி வலையில் தலை வைத்ததைப் போல ஆகும். சாதாரணமாக ஒரு இரத்தினத்தை
ஒரு கேரட்டிற்கு மேல்தான் அணிய வேண்டும்.
அது போல எண்கணிதப்படி இரத்தினங்ள் அணிவதும்
நற்பலனைத் தரும். எண்கணிதப்படி இரத்தினங்கள் அணிவதால் வாழ்வில் முன்னேற்றங்கள்
ஏற்படும். நட்சத்திரத்ரரின் அடிப்படையிலும் நவரத்தினங்களை தேர்வு செய்யமுடியும்.
அதிலும் குறிப்பாக நமக்கு என்ன திசை நடக்கிறதோ, அந்த திசை எந்த கிரகத்தின்
ஆதிக்கத்திற்குரியதோ, அதற்கேற்ற ரத்தினங்களை அணிந்து கொள்வதே நல்லது.
அப்ஙபொழுதுதான் அந்த கிரகத்திற்குரிய பலனானது திருப்பி விடப்பட்டு செய்யப்பட்டு
வாழ்வில் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றப் பலன்களை அடைய முடிகிறது.
சிலர் தவைலிக்கு கடையில் மருந்து மாத்திரை வாங்கி
சாப்பிட்டேன். சரியாகி விட்டது. ஆனால் மீண்டும் வந்து விட்டது என கூறுவார்கள்.
அதுபோல நாமே ஒன்றை முடிவு செய்து ஏதாவது ஒரு கல்லை வாங்கி அணிந்து கொண்டு இது
இப்படி, அது அப்படி என புலம்புவதை விட நல்ல ஜோதிடராக பார்த்து கலந்தாலோசித்து
அதற்கேற்றவாறு நவரத்தினங்களை அணிவது சிறப்பு.
நவரத்தினங்கள் பல ஆண்டுகளுக்கு முன் பிருந்தே
புழக்கத்தில் உள்ளதாக பல ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. நமது ரிஷிகளும், பல கணித
வல்லுனர்களும் ஜோதிட கலையை மேம்படுத்தி உள்ளனர். அவர்கள் ஜோதிடத்தைப் பல பிரிவுகளாக
பிரித்துள்ளனர். அவற்றுள் ரத்தினக் கற்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியமானதாகும்.
மனித தோற்றம் எவ்வளவு பழமையானதோ, ரத்தினக் கல்லும் அவ்வளவு பழமையானதாகும்.
எப்படி அணிவது?
நவரத்தினங்களைச் சரியான ஜோதிடர்களை பார்த்து
வாங்கும்போது அவர்களே நவரத்தினங்களை பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி
நல்லபடியாக வாழ்க்கை வளம்பெற செய்து தருவார்கள். நாமே கடையில் சென்று வாங்கும் போது
வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்து இறைவனை வழிபட்டு சுத்தமான
பசும்பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் சுப ஓரையில் அந்த ரத்தினத்திற்குரிய
விரலில் அணிந்து கொள்வது நல்லது. எந்தக்கை, மற்றும் எந்த விரலில் ரத்தினக்கல்
மோதிரங்களை அணிய வேண்டும் என்பதிலும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது வலது கை
குருவாலும், இடது கை சுக்கிரனாலும் ஆளப்படுகின்றது. உடலின் உயிர் சக்தியானது
அதிகமாவது அல்லது குறைவதை வலது மற்றும் இடது கைகள் குறிக்கின்றன.
தீய கிரகத்தின் திசை நடைபெற்று அந்த தீய விளைவைக்
குறைக்க ஒரு ரத்தினம் அணிய வேண்டியிருந்தால் அதனை இடது கையில் அணிய
வேண்டும்.
பலம் பெற்ற கிரகத்தின் திசை நடைபெற்று அதன்
பலத்தை மேலும் அதிகரிக்க அத்திசைக்குரிய கிரகத்தின் ரத்தினத்தை வலது கையில் அணிய
வேண்டும்.
அதேபோல அசுபத் தன்மையுடைய கிரகத்தின் அசுபத்
தன்மையைக் குறைக்க அந்த கிரகத்திற்கு எதிரான இரத்தினத்தை அணிவதும் நற்பலனை
ஏற்படுத்துவதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
உதாரணமாக, ராகு திசை நடந்து ராகு அந்த ஜாதகருக்கு
அசுபராக இருந்தால் கனக புஷ்ப ராகம் அல்லது புஷ்பராக கல்லை வலது கை மோதிர விரலில்
அணிய வேண்டும். ஏனென்றால் புஷ்பராகவும் குருவின் ரத்தினமாகும். குருவும், ராகுவும்
பகைவர்கள். இதனால் சுபகிரகமாகிய குருவின் ரத்தினத்தை அணிவதால் ராகுவால்
உண்டாகக்கூடிய அசுப தன்மைகள் குறையும்.
மாணிக்கம் (RUBY) சூரியன்
மாணிக்கம் (RUBY) சூரியன்
மாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (RUBY) என்று
பெயர். மாணிக்கம் சிவப்பு நிறமுடைய, பூமியில் விளையக்கூடிய ஒரு கல்லாகும். ரோஸ்
கலந்த சிப்பு நிறமுடையதாகவும் அல்லது சுத்த சிவப்பு நிறமுடையதாகவும் விளங்கும்
இக்கற்கள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாக
கிடைகிறது. வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும்
கொண்டது மாணிக்கக் கல்லாகும்.
மாணிக்கம் மிகுந்த உயர்தரமானது. தற்போது
கிடைப்பது அரிதாக இருப்பதால் இதற்கு இது தான் விலை என்று நிர்ணயிக்க முடிவதில்லை.
அதனால் தான் மாணிக்கத்தை விலையில்லா மாணிக்கம் என்கிறார்கள். மாணிக்கத்தை கேரட்
முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள்
வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில்
கிடைக்கின்றன.
உயர்தர மாணிக்கங்கள் சாதார வெளிச்சத்தில் ஒரு
சிப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும்.
இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும்
கிடைக்கின்றது. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ
கவர்ச்சியோ இருக்காது. நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும்
ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றை சரியான முறையில் பட்டை தீட்டி பாலிஷ்
செய்தால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.
மாணிக்கம் அலுமியம் டிரை ஆக்ஸைடு என்ற
வேதிப்பொருளால் ஆனது. கெராண்டம் என்கிற வகையைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் புறா
இரத்த நிறத்தில் கிடைப்பது முதன்மை தரம் ஆகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை
அணிந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம்
இறப்பைக்கூட தந்து விடும். மாணிக்கத்தை கையில் அணிந்திருக்கும் போது அதன் நிறம்
மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல்
மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும்.
யார் மாணிக்கக்கல் அணியலாம்?
சூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம்
உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும் சூரிய திசை
நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1,10,19, 28 ம் எண்ணில் பிறந்தவர்களும்
மாணிக்க கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு
செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.
மாணிக்கக் கல்லின் நன்மைகள்
மருத்துவ ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள்,
காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய்
போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின்
பிடியிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளலாம்.
மாணிக்கக் கல்லை தங்கத்தில் பதித்து உடலில்
படும்படி அணிந்து கொண்டால் நல்ல உடல் நலம், உள்ள உறுதி நட்பு, காதல் பாசம்
போன்றயாவும் சிறப்பாக அமையும். இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச்
செய்கிறது. மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைத்து
தைரியத்தையும் வீரத்தையும் தருகிறது. மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால்
பெயரையும் புகழையும் உயரத்த்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்க பதவிகளை வகிக்கும்
ஆற்றலையும் கொடுக்கிறது. மழலைச் செல்வமும் சிறப்பாக அமையும்.
ஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு
கீற்றுகள் உடைய நட்சத்திரத்தை பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர
மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம்
நிலைத் திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.
மாணிக்கத்தை தங்கத்தில் பதித்து உடலில் படும்
படியாக மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். அதன் எடை 3 அல்லது 5 ரத்திகள்
இருப்பதே நல்லது. மிக விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை வாங்க இயலாதவர்கள் அதற்குப்
பதிலாக கார்னட் என்ற கல்லை வாங்கி அணியலாம். இந்த கல் சிவப்பு நிறத்தில்
பவழத்தினைப் போன்று சற்று கூடுதலாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். குற்றமில்லாத
கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்த தாகும்.
மாணிக்கக் கல்லை அணியும்போது சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய
ஓரையில் அணிந்துகொள்வது நல்லது.
நவரத்தினங்களில் முத்து
வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை
வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள்
சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக
உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை.
இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது.
சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை.
மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து
அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும்,
பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில்
அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன்
முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை ஙிணீக்ஷீஷீரீuமீ ஜீமீணீக்ஷீறீ
என்று கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற
நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப்
போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று
பெயரிட்டுள்ளனர்.
உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய
அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும்
பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல
பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான்.
இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம்
காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை
உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப்
பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே
தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக
உற்பத்தி செய்கிறார்கள்.
இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை
நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத்
முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை
முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த
விலையிலும் கிடைக்கின்றன.
ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில்
அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில்
பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில்
அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக இருப்பது நல்லது. நவரத்தினங்களில்
சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.
முத்தின் நன்மைகள்
முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள்
திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும்.
பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப்
பேறும் உண்டாகும்.
முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு
அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.
யாரெல்லாம் முத்து அணியலாம்?
முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில்
பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால்
பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய
தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.
முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன்
படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல்
அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை
கொண்டவையாகும்.
முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும்
பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று
மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.
நவரத்தினங்களில் கனக புஷ்ப ராகம்
கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள்.
தங்கம் மஞ்சள் நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம்
சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம்
என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண
புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே
கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால்
அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப்
பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால்
வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி
ஜொலிப்புடன் அழகாக காணப்படும்.
தங்கம் கலந்தாற்போல் மஞ்சள் நிறத்துடன்
காணப்படுவது கனக புஷ்பராகமாகும். இது மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக
காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை
கூடுதலானது. இதை கேரட் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
புஷ்ப ராகக் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா
ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில்
அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது.
புஷ்ப ராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு
குன்றாது.
யார் கனக புஷ்பராகம் அணியலாம்?
இந்த புஷ்பராகக் கல்லை 3,12, 21, 30 போன்ற
எண்களில் பிறந்தவர்கள் தங்கத்தில் பதித்து ஆள்காட்டிவிரல் அல்லது மோதிர விரலில்
உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்றும் தனசு, மீன ராசிகளில்
பிறந்தவர்களும், குரு திசை நடப்பில் உள்ளவர்களும் இந்த புஷ்பராகக் கல்லை அணியலாம்.
இதனால் தொழிலில் தடை, திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்றவை விலகும். அசுரபரான
செவ்வாயை அடக்கி செவ்வாய் தோஷத்தை விலக்கும், மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான
நோய்களை போக்கும். மற்ற இயற்கை கற்களை போலவே கனக புஷ்ப ராகத்திற்கும் ஓர் அதிர்வு
உண்டு. இந்த அதிர்வானது போலி கற்களுக்கு இருக்காது. குருவின் ஆதிக்கத்திலிருந்து
வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்ப ராகம் பெற்று தருகிறது.
கனகபுஷ்ப ராக கல்லுக்குப் பதில் ஏமிதிஸ்ட் என்ற
கல்லையும் அணியலாம். இது இந்தியாவில் இருந்தே கிடைக்கிறது. வெண் பவளத்தையும் ஓயிட்
கோரல் 3ம் எண்ணின் ஆதிக்கத்தை உடையவர்கள் அணியலாம்.
ஸ்படிக வகையைச் சேர்ந்த கோல்டன் டோபஸ்ட் என்ற
கல்லையும் அணியலாம்.ஆனால் இது எடைகுறைவாகவும், நாளடைவில் பளபளப்பு குன்றியும்
காட்சியளிக்கும்.
புஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில்
குரு ஓரையில் 7 அல்லது 13 ரத்திகல் எடையில் உடலில் படும்படி அணிந்து கொள்வது
நல்லது. கனக புஷ்பராக கல்லானது இயற்கை அளித்த அற்புதமான பரிசாகும்.
நவரத்தினங்களில் கோமேதகம்
கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து
காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த
சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய
தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான
கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம்
கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல்
என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது
தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு
அம்சமாகும்.
தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான
எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச்
செழிப்பும் உண்டாகும்.
சாயாகிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது.
ராகு எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதியின் காரகத்துவத்திற்கேற்றவாறு
செயல்படுவார். ராகு நின்ற வீட்டின் அதிபதி சுபர் வீட்டில் இருந்து அவரும் சுபராக
இருந்தால் கோமேதகக் கல்லை அணியலாம். அதுபோல் ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும்
திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் 4,13,22,31 ஆகிய
எண்ணுக்குரியவர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது
தங்கத்தில் பதித்து மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.
கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற
நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி
விற்பனை செய்யப்படுகிறது.
கோமேதகத்தின் பயன்கள்
கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய
நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால்
ஏற்படக்கூடிய விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும். மற்றும் தேவையற்ற
பழக்க வழக்கங்கள் விலகும். பேச்சில் நிதானமும் உண்டாகும்.
தேன் நிறத்தில் காணப்படும் ஜிர்க்கான் கற்கள்
கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை,
கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது சராசரியான தன்மை
கொண்டவைகளே. இவை சுபமானதாய கருதப்படுவதில்லை.
கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில்
கிடைக்கப்பெறுவது என்பதாலும் இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை. என்றாலும் ஒன்றாம்
எண்ணுக்குரிய கார்னெட் கற்களை கோமேதககத்திற்கு மாற்றாக அணியலாம்.
நவரத்தினங்களில் மரகதம்
மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி
புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது.
வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம்
பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.
மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை
இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது
நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற
பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற
பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம்
செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த
நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று
மக்களிடையே உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது
மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில்
ஏற்படுத்த விடுவதில்லை.
பச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட
ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23
ம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர
விரல் அல்லது சுண்டு விரலில்அணிந்து கொள்ளுதல் நல்லத. புதன் கிழமைகளில் காலை 6 மணி
முதல் 7 மணியில் அணிவது மிகவும் சிறப்பு.
மரகதம் அணிவதன் பயன்கள்
மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும்,
எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும்.
கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.
மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு,
தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம்,
ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம்
கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக
உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது.
பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை
உயர்வானதாக இருப்பதில்லை.
பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான
கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது
தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
ஆனெக்ஸ் (ளிஸீமீஜ்):
ஆழ்ந்த
நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக்
கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்.
குற்றங்களைத் தூண்டும் ஜாதக அமைப்புகள்
குற்றங்களைத் தூண்டும் ஜாதக அமைப்புகள்
சில மனிதர்களின் பேராசையும், வக்ர புத்தியும், பொறாமைக் குணமும் சக மனிதர்களையே கொல்லும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. தினமும் செய்தித் தாள்களில் இத்தகைய நிகழ்வுகளை அதிக எண்ணிக்கையில் செய்தியாகப் படிக்கிறோம். கடத்தல், கொலை, கொள்ளை இல்லாத செய்தியாக செய்தித்தாள்கள் ஒரு நாள் கூட வந்ததில்லை.
இத்தகைய கொடூர செயல்களைச் செய்பவர்களின் ஜாதகங்களையும், கிரக நிலைகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் வாழ்க்கை இப்படி மாறிப்போனதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரும்.
நவகிரகங்களில் செவ்வாயானவர் மிகக் கொடிய பாவ கிரகமாக விளங்குகிறார. செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்று, சுபகிரக சேர்க்கையுடன் அமைந்திருந்தால் சமுதாயத்தில் உயர் பதவிகளை அடையக்கூடிய யோகத்தையும், நல்ல நிர்வாகத் திறமைகளையும் பெற்றிருப்பார்.
அதுவே செவ்வாயானவர் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று அமைந்துவிட்டால், அந்த ஜாதகரின் மன நிலையும் திறமையும் அதன் தசாபுக்தி காலங்களில் தீய செயல்களுக்கு பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை உண்டாக்குகிறது.
ஒருவரது ஜென்ம லக்னத்தைக் கொண்டு அவரது குணநலன்களைப் பற்றி அரிந்து கொள்ள முடியும். 5ம் வீடு உணர்ச்சியைக் குறிக்கும். 9ம் வீடு தான தர்ம செயல்களைக் குறிக்கும். 6 மற்றும் 12 ம் வீடுகள் எதிர்ப்புகளைக் குறிக்கும்
நவகிரகங்களில் பாவிகள் என குறிக்கப்படும் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற கிரகங்கள் 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு முரட்டு சுபாவம் அதிகம் இருக்கும். செவ்வாய், சனி, ராகு இணைந்து மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால், அந்த ஜாதகர் கொலை செய்யவும் தயங்காதவராக, கொடூர மனம் படைத்தவராகவும் இருப்பார்.
செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்திலும், சனியின் வீடான மகரம் மற்றும் கும்பத்திலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் இருந்தால் அவர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்வதில் வல்லவராக இருப்பார்.
அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் சனி, செவ்வாய் அமையப் பெற்றிருந்தாலும் அல்லது தனித்தனியே அமைந்து சனிக்கு கேந்திரத்தில் செவ்வாயோ அல்லது கேந்திரத்தில் சனியோ அமையப்பெற்றாலும், குற்றச் செயல்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக அந்த ஜாதகர் இருப்பார்.
நவரத்தினங்களில் வைரம்
சுக்கிரன் வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட்
ஆகும். வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை
வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.
நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக்
கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி
தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது. வெண்மையான வைரம்
மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட
வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். சிற்றின்ப நோய்கள், சிறுநீர்
சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண்
குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம்
அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.
இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில்
எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது.
தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி
எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும்
நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள்
தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில்
கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில்
தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது.
நம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும்
இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி
அணிந் கொள்கிறோம். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே
முக்கியத்துவம் தருகின்றனர். வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும்
சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ம் எண்ணில்
பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து
மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து
கொள்வது நல்லது.
வைரம் தன் மீது படும் ஒளியை முழு அக எதிரொலிப்பு
செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர்
எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேர சூரிய ஒளியில்
நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும. வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
இந்தியாதான் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு
காலியாகிவிட்டதால் ஒரிஸாவில் மீண்டும் வைரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
ஒரு காரட் (0.2 கிராம்) பட்டை தீட்டப்பட்ட
வைரத்தைப் பெறுவதற்கு 30 டன் எடையுள்ள பாறை மற்றும் மணலை பிரித்தெடுத்து பயன்படுத்த
வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் பட்டை தீட்டி, பலர் கை மாறி மாறி விற்பனைக்கு
வருவதால்தான் வைரத்தின் விலை பல மடங்காக் உள்ளது. சுத்தமான வைரங்களைக் கண்டு
பிடிக்க டைமண்ட் டெஸ்டர்களும் தற்போது உபயோகத்திற்கு வந்து விட்டதால் அந்த
கருவியைக் கொண்டு சுத்தமான ஒளி, ஒலி அமைப்பை கண்டுபிடித்து விடலாம். வைரத்திற்கு
எளிதில் வெப்பத்தை கடத்தும் தன்மை உள்ளதாலேயே மேற்கண்ட பரிசோதனையைச் செய்து போலியா,
ஒரிஜினலா என கண்டறிய முடிகிறது.
வெண்மையாகவும் தீவு போன்ற வடிவம் கொண்ட வைரம்
தோஷமுள்ளதாகவும் இதை அணிவதால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
ஜிர்கான், வைரத்தை வாங்க இந்த ஜிர்கான் கற்களை
வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது.
வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)