உன் முதல் ஸ்பரிசம் - பெண்ணே
எனை எங்கோ கொண்டு செல்கிறது.....
நிச்சயம் அது மலர்களினால் கிடைத்த ஸ்பரிசம் அல்ல...
ஒரு குழந்தையை தீண்டும் ஸ்பரிசமும் அல்ல...
மலர்களை ஸ்பரிசிக்கும் போது......
உன் உடல் வெப்பமதை
நான் அறிந்திருக்க முடியாது!
குழந்தையை தீண்டும் போது.......
உன் உணர்சிகளை
நான் உணர்ந்திருக்க முடியாது!
பெண்ணே நீ மலரல்ல
காலையில் பூத்து மாலையில் வாட!
கண்ணே நீ குழந்தையும் அல்ல
அழுது கொண்டிருக்க!
என் உடலில் பூத்த வியர்வைத்துளிகள்
என் உடலெங்கும் உன் பெயரை எழுதுகின்றன....
எதோ ஓர் மாற்றம் என் உடலில்....
அந்தரத்தில் மிதக்கிறேன் சில நொடிகள்!
உலகமே மகிழ்சிகரமாக இருக்கிறது
காத்திருக்கிறேன் உன் இன்னொரு தீண்டலுக்காக
போதைக்கு அடிமையானவன் போல..........
enna?
ReplyDelete