Thursday, 20 September 2012

என்னதான் நடக்கும் பார்த்துடலாம்...! (அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை... Must read )

நம் வாசகர்களுக்கு ஒரு மிக அதிசயமான ஒரு கட்டுரையை பகிர்ந்து கொள்ள விருக்கிறேன்...

நம்மிடம் ஜாதகம் பார்க்க வரும் பல அன்பர்களும், புலம்புவது - ஆண்டாவன்னு ஒருத்தன் இருந்தா, அவர் ஏன் நம்மளை இப்படி சோதிக்கிறார்? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.. ? கடவுளுக்கு கண்ணே இல்லன்னு , நொந்து போயி பேசுவாங்க... எவ்வளவோ பேர், மன விரக்தி அடைஞ்சு - தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்கிறதை , செய்திகள் ல பார்க்கிறோம்..!

எல்லோரும் , தயவு செய்து இதை படிங்க... உயிர் விலை மதிக்க முடியாத ஒரு விஷயம். கடவுள் தரும் சோதனை , நீங்கள் நிச்சயம் எதையோ சாதிக்க வேண்டும் என்பதற்காகவே... ! எதை நினைத்தும் கலங்கவேண்டாம் என்று சொல்வது எளிதுதான்... ! ஆனால் ஒரு பக்குவம் உங்களுக்கும் வேண்டும்.
Whatever happens , life must move on... ! மேலே படிங்க...

அண்மையில்மெயிலில்எனக்குவந்தஇந்தக்கதையைஉங்களுடன்பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான ஒரு பெரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆப்பரேசன் தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிர்ஷ்ட (?) மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கைக்கை யிழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.

இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சிமுயற்சியிலிறங்கியது. எவருதவியுமில்லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப் பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப் பட்டு , அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.








பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர் நடை பயில்வதைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை நம் அனைவருக்கும் சொல்லாமல் சொல்கிறது.

சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை நமக்கு நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment