கடனாளி என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஒரு சிலருக்கு கடன் வாங்குங்கள் என்று நாங்களே கூறுகிறோம்.
லக்னத்திற்கு 6க்குரியவனின் தசை என்று வைத்துக் கொண்டால் அவன் சத்ரு, நோய் , விபத்து, கடன் இவற்றைக் கொடுப்பான். 6க்குரியவன்தான் இவற்றுக்குக் காரணம். எனவே முதலிலேயே நாம் கடனை வாங்கி விட்டால் மற்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.கிரகங்கள் எல்லாம் ஒன்றைக் கொடுத்துவிட்டால் மற்றவற்றை கொடுக்காது. எனவே 6க்குரிய தசையா, கடன் வாங்கி விடுங்கள். அதுவும் சுபக் கடனாக வாங்கி விட்டால் மற்றவற்றில் இருந்து தப்பி விடலாம்.வீடு, வாகனம் போன்றவை தவணை முறையில் பணம் கட்டுவது போல் கடன் வாங்கி விடுவதும் நல்லது. மாதா மாதம் பணம் கட்டும்போதெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுவது இந்த கிரகத்தின் அமைப்பாக இருக்கும்.அதேப்போல அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடக்கும்போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.
அதாவது லி·ப்ட் கேட்டு ஏறியவன், கொஞ்ச தூரம் போனதும் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை, நகைகளை கொள்ளை அடிப்பது போன்றவை நடந்துள்ளது. சில நேரங்களில் வண்டியையே தள்ளிக் கொண்டு போனதும் உண்டு.எனவேதான் லி·ப்ட் தராதீர்கள், ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்கிறோம். குறிப்பிட்ட ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காலக்கட்டம்தான் நெருக்கடியானது. அந்த காலத்தில்தான் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.
ஒருவர் இருக்கிறார். அவருக்கு நெருங்கிய நண்பர். ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள். ரொம்ப யோக்கியமானவர். அவரது நண்பருக்கு கேரண்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். இவரது போதாத காலம் அவரால் கடனைக் கட்டாமல் போக இவர் கட்ட வேண்டியதாகி, அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு துணைவியார் பிரிந்து போக ஒரு குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது.
எனவேதான் சில நேரங்களில் இதுபோன்ற கேரன்ட்டி கையெழுத்துக்களை போடாதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறோம். யாருடனும் வம்பு தும்புக்குப் போகாமல் வாயைக் கிளறினாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்புகிறோம்.
சிலருக்கு அவர்களது நேரத்தின்படி, வந்தவர்களுக்கு உதவுங்கள். நண்பர்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறுகிறோம். சின்ன வயதில் உங்களுக்கு உதவியவர்களுக்கு கைமாறு செய்யுங்கள் என்றும் கூறுகிறோம்.
No comments:
Post a Comment