Monday, 27 August 2012

நவரத்தினங்களில் கனக புஷ்ப ராகம்



கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள். தங்கம் மஞ்சள் நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும்.

தங்கம் கலந்தாற்போல் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவது கனக புஷ்பராகமாகும். இது மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை கூடுதலானது. இதை கேரட் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.

புஷ்ப ராகக் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில் அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது. புஷ்ப ராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு குன்றாது.

யார் கனக புஷ்பராகம் அணியலாம்?

இந்த புஷ்பராகக் கல்லை 3,12, 21, 30 போன்ற எண்களில் பிறந்தவர்கள் தங்கத்தில் பதித்து ஆள்காட்டிவிரல் அல்லது மோதிர விரலில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்றும் தனசு, மீன ராசிகளில் பிறந்தவர்களும், குரு திசை நடப்பில் உள்ளவர்களும் இந்த புஷ்பராகக் கல்லை அணியலாம். இதனால் தொழிலில் தடை, திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்றவை விலகும். அசுரபரான செவ்வாயை அடக்கி செவ்வாய் தோஷத்தை விலக்கும், மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான நோய்களை போக்கும். மற்ற இயற்கை கற்களை போலவே கனக புஷ்ப ராகத்திற்கும் ஓர் அதிர்வு உண்டு. இந்த அதிர்வானது போலி கற்களுக்கு இருக்காது. குருவின் ஆதிக்கத்திலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்ப ராகம் பெற்று தருகிறது.

கனகபுஷ்ப ராக கல்லுக்குப் பதில் ஏமிதிஸ்ட் என்ற கல்லையும் அணியலாம். இது இந்தியாவில் இருந்தே கிடைக்கிறது. வெண் பவளத்தையும் ஓயிட் கோரல் 3ம் எண்ணின் ஆதிக்கத்தை உடையவர்கள் அணியலாம்.

ஸ்படிக வகையைச் சேர்ந்த கோல்டன் டோபஸ்ட் என்ற கல்லையும் அணியலாம்.ஆனால் இது எடைகுறைவாகவும், நாளடைவில் பளபளப்பு குன்றியும் காட்சியளிக்கும்.
புஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் 7 அல்லது 13 ரத்திகல் எடையில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. கனக புஷ்பராக கல்லானது இயற்கை அளித்த அற்புதமான பரிசாகும்.

நவரத்தினங்களில் கோமேதகம்


கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும்.

தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.

சாயாகிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. ராகு எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதியின் காரகத்துவத்திற்கேற்றவாறு செயல்படுவார். ராகு நின்ற வீட்டின் அதிபதி சுபர் வீட்டில் இருந்து அவரும் சுபராக இருந்தால் கோமேதகக் கல்லை அணியலாம். அதுபோல் ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் 4,13,22,31 ஆகிய எண்ணுக்குரியவர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.

கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகிறது.

கோமேதகத்தின் பயன்கள்
 
கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும். மற்றும் தேவையற்ற பழக்க வழக்கங்கள் விலகும். பேச்சில் நிதானமும் உண்டாகும்.
தேன் நிறத்தில் காணப்படும் ஜிர்க்கான் கற்கள் கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை, கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது சராசரியான தன்மை கொண்டவைகளே. இவை சுபமானதாய கருதப்படுவதில்லை.
கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில் கிடைக்கப்பெறுவது என்பதாலும் இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை. என்றாலும் ஒன்றாம் எண்ணுக்குரிய கார்னெட் கற்களை கோமேதககத்திற்கு மாற்றாக அணியலாம்.

நவரத்தினங்களில் மரகதம்



மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.
மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது.
 
மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில் ஏற்படுத்த விடுவதில்லை.
 
பச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில்அணிந்து கொள்ளுதல் நல்லத. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணியில் அணிவது மிகவும் சிறப்பு.
மரகதம் அணிவதன் பயன்கள்
 
மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.
மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.
பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
 
ஆனெக்ஸ் (ளிஸீமீஜ்):
 
ஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்.

குற்றங்களைத் தூண்டும் ஜாதக அமைப்புகள்



குற்றங்களைத் தூண்டும் ஜாதக அமைப்புகள்


சில மனிதர்களின் பேராசையும், வக்ர புத்தியும், பொறாமைக் குணமும் சக மனிதர்களையே கொல்லும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. தினமும் செய்தித் தாள்களில் இத்தகைய நிகழ்வுகளை அதிக எண்ணிக்கையில் செய்தியாகப் படிக்கிறோம். கடத்தல், கொலை, கொள்ளை இல்லாத செய்தியாக செய்தித்தாள்கள் ஒரு நாள் கூட வந்ததில்லை.

இத்தகைய கொடூர செயல்களைச் செய்பவர்களின் ஜாதகங்களையும், கிரக நிலைகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் வாழ்க்கை இப்படி மாறிப்போனதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரும்.

நவகிரகங்களில் செவ்வாயானவர் மிகக் கொடிய பாவ கிரகமாக விளங்குகிறார. செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்று, சுபகிரக சேர்க்கையுடன் அமைந்திருந்தால் சமுதாயத்தில் உயர் பதவிகளை அடையக்கூடிய யோகத்தையும், நல்ல நிர்வாகத் திறமைகளையும் பெற்றிருப்பார்.

அதுவே செவ்வாயானவர் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று அமைந்துவிட்டால், அந்த ஜாதகரின் மன நிலையும் திறமையும் அதன் தசாபுக்தி காலங்களில் தீய செயல்களுக்கு பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை உண்டாக்குகிறது.

ஒருவரது ஜென்ம லக்னத்தைக் கொண்டு அவரது குணநலன்களைப் பற்றி அரிந்து கொள்ள முடியும். 5ம் வீடு உணர்ச்சியைக் குறிக்கும். 9ம் வீடு தான தர்ம செயல்களைக் குறிக்கும். 6 மற்றும் 12 ம் வீடுகள் எதிர்ப்புகளைக் குறிக்கும்

நவகிரகங்களில் பாவிகள் என குறிக்கப்படும் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற கிரகங்கள் 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு முரட்டு சுபாவம் அதிகம் இருக்கும். செவ்வாய், சனி, ராகு இணைந்து மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால், அந்த ஜாதகர் கொலை செய்யவும் தயங்காதவராக, கொடூர மனம் படைத்தவராகவும் இருப்பார்.

செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்திலும், சனியின் வீடான மகரம் மற்றும் கும்பத்திலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் இருந்தால் அவர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்வதில் வல்லவராக இருப்பார்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் சனி, செவ்வாய் அமையப் பெற்றிருந்தாலும் அல்லது தனித்தனியே அமைந்து சனிக்கு கேந்திரத்தில் செவ்வாயோ அல்லது கேந்திரத்தில் சனியோ அமையப்பெற்றாலும், குற்றச் செயல்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக அந்த ஜாதகர் இருப்பார்.

நவரத்தினங்களில் வைரம்




சுக்கிரன் வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட் ஆகும். வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.

நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது. வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.

இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில் கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில் தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது.

நம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந் கொள்கிறோம். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும் சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது.

வைரம் தன் மீது படும் ஒளியை முழு அக எதிரொலிப்பு செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும. வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாதான் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு காலியாகிவிட்டதால் ஒரிஸாவில் மீண்டும் வைரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு காரட் (0.2 கிராம்) பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் பெறுவதற்கு 30 டன் எடையுள்ள பாறை மற்றும் மணலை பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் பட்டை தீட்டி, பலர் கை மாறி மாறி விற்பனைக்கு வருவதால்தான் வைரத்தின் விலை பல மடங்காக் உள்ளது. சுத்தமான வைரங்களைக் கண்டு பிடிக்க டைமண்ட் டெஸ்டர்களும் தற்போது உபயோகத்திற்கு வந்து விட்டதால் அந்த கருவியைக் கொண்டு சுத்தமான ஒளி, ஒலி அமைப்பை கண்டுபிடித்து விடலாம். வைரத்திற்கு எளிதில் வெப்பத்தை கடத்தும் தன்மை உள்ளதாலேயே மேற்கண்ட பரிசோதனையைச் செய்து போலியா, ஒரிஜினலா என கண்டறிய முடிகிறது.

வெண்மையாகவும் தீவு போன்ற வடிவம் கொண்ட வைரம் தோஷமுள்ளதாகவும் இதை அணிவதால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

ஜிர்கான், வைரத்தை வாங்க இந்த ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.