Thursday, 20 September 2012

ரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்டுரை

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நல்ல படியாக சென்ற வாரம் கடந்தது. உங்களில் நிறைய பேர் அண்ணாமலை வந்து இருந்தீர்கள் என நினைக்கிறேன். ஒரு சிலரை தவிர , மற்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மன்னிக்கவும். இறைவனை நம்பி வந்தவர்களை விட, ஒரு குறுகுறுப்பில் வந்தவர்களும் இருந்ததை அவர்கள் பேசிக் கொண்டு இருந்தபோது கவனிக்க முடிந்தது. இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தியும் கேள்விப் பட்டேன். அது தவிர அரசியல் கூத்தும் நடந்து இருக்கிறது. அதை பகிர்ந்து கொள்தல் நாகரீகமாகாது. மிகப் பெரும் ரகசியமான இந்த நிகழ்வை, பட்டவர்த்தனமாக வெளியிட்டது தவறோ என்று கூட எண்ணுகிறேன். இந்த நாளை , சரியாக கணித்து , நம் வாசகர்கள் நீங்களே இனிமேல் வந்து கொள்தல் நலம் என நினைக்கிறேன். மிக நெருக்கமான, தகுதியான சுற்றம், நட்புக்கு மட்டும் தெரியப் படுத்தினால் போதும் என்பது என் கருத்து.

மற்றபடி அருமையான அனுபவம். கூட்டத்தை எதிர் பார்த்து , முதல் நாளே சென்று விட்டதால் , காலையில் அண்ணாமலையாரின் அபிசேகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன். மொத்தத்தில் அங்கு இருந்த இரண்டு தினங்களும் , இன்னும் நிறைய சிந்தனைகளை தூண்டி விட்ட ஒரு இனிய ஆன்மீக அனுபவமாக இருந்தது. அடுத்து வரும் கட்டுரைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதை காண்போம்.

இன்று நாம் பார்க்க விருப்பது , கொஞ்சம் பழைய கட்டுரை. விஜய் டிவி யிலும், ஜு.வியிலும் - வந்த மகா அவதார் பாபா கட்டுரைகளை பற்றி. இதை நீங்கள் ஏற்கனவே படித்தும் இருக்கலாம். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பாபாவை பற்றி இன்னும் பல அரிய தகவல்கள் , அடுத்து வரும் கட்டுரைகளில்.....

ரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்டுரை :
அடிக்கடி இமயமலைக்குப் போறீங்களே… அது ஏன்? சந்தோஷம், நிம்மதி எதுவும் இங்க இல்லையா? அதுக்கு இமயமலைக்குதான் போகணுமா?
இந்தக் கேள்வி நிஜத்திலும் பலர் ரஜினியைப் பார்த்துக் கேட்பதுதான்.

அதற்கு ரஜினி அளிக்கும் பதில்: “நிரந்தரமான நிம்மதியை உணர இமயமலைக்குப் போகணும். அந்த உணர்வை, வைப்ரேஷனை சொல்லிப் புரிய வைக்க முடியாது… போய் அனுபவிச்சிதான் தெரிஞ்சிக்கணும்…”
இதோ அந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
ரஜினி இமயமலைக்கு ஏன் போகிறார்… எப்படிப் போகிறார்… அந்த பயணத்தின் தன்மை என்ன? இறுதியாக அந்தப் பயணத்தில் கிடைப்பதென்ன?

ஜூனியர் விகடனில் வெளியான ஒரு பழைய கட்டுரை , நம் வாசகர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு , இங்கே பகிரப்படுகிறது.

சினிமாவில் மட்டுமல்ல… செய்திகளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!
காரமாக ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லி, தமிழ்நாட்டை வாரக் கணக்கில் கிடுகிடுக்க வைப்பார். தமிழ்நாடே அவரைத் தேடிக் கொண்டிருக்கும்போது, மோனத் தவம் இருப்பார்! தன் அரசியல் ஆர்வம் பற்றி நிலையான ஒரு புதிரை உருவாக்கி வைத்திருந்தாலும், தன்னுடைய ஆன்மிக ஆர்வம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகத்தையும் ரஜினி வைத்ததில்லை!

சினிமா, பணம், புகழ் என பல சிகரங்களைத் தொட்டுப் பார்த்தபோதும் அவருக்கான தேடல் என்னவோ இமயமலை சிகரங்களில்தான்!
பல வருடங்களாகப் பனிமலைக்குப் பயணப்பட்டு அவர் தேடுவது எதை என்ற ரகசியத்தை ஓரளவு உடைத்தது ‘பாபா’ திரைப்படம்தான். யோகக் கலை களில் இறைவனைத் தேடலாம் என்ற தத்துவம் சொன்னார் மஹா அவதார் பாபா! அந்த மகானை, தமிழக சாமானியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ரஜினிதான். கிரியா யோகா முத்திரையை தமிழனுக்குக் காட்டியதும் அவர்தான். இமயமலை முகடுகளில் – அதுவும் இறைவனை பாபா கண்டுகொண்ட அதே குகையில் ரஜினி காணும் ஏகாந்தம் என்னவாக இருக்கும்?p42

இந்தத் தேடல்தான் நம்மை இமயமலை நோக்கிப் பயணிக்க வைத்தது.
ரஜினி பயணித்த அதே ரூட்டில் நாமும் பயணித்தோம். ‘விஜய் டி.வி.’ குழுவி னரும் நாமும் இணைந்த தேடல் இந்தப் பயணம்!

பயண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்கும்போதே நாம் ரஜினியின் நண்பர் நாகராஜன் ராஜாவிடம் கொஞ்சம் பேசிவிட்டுக் கிளம்பலாமா..?

”என்னோட அப்பா பெரிய வியாபார சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி வெச்சிருந்தார். அதையும் பார்க்க ஆரம்பிச்சு, சினிமா விநியோக வியாபாரத்தையும் பார்த்துக்கிட்டிருந்தேன். மூச்சு விடக்கூட நேரமில்லாத நேரத்துல அகஸ்தியர் மலைக்குப் போனேன். அங்க இருக்கற அருவியில் குளிச்சிட்டிருந்தப்போ அகத்திய முனிவர் எனக்குக் காட்சியளித்தார். இதை வெளியில சொன்னா உலகம் நம்பாது! ஆனா, எனக்குள்ள ஏதோ ஒரு சக்தி புகுந்துட்டது மட்டும் நல்லாத் தெரிஞ்சது.

இதை இசைஞானி இளையராஜாகிட்ட மட்டும் சொன்னேன். ‘நீ கொடுத்து வெச்சவன்யா… அது பெரும் பாக்கியம். ஆன்மிகத்தைப் பத்தி உன் அபிப்ராயம் என்னய்யா?’ன்னு அவர் கேட்டார்.

இளையராஜாவோட கேள்வி என்னை சிந்திக்க வெச்சது. வியாபாரத்தை அப்படியே விட்டுட்டு அமைதியைத் தேட ஆரம்பிச்சேன். இந்த சமயத்துலதான் பாபா பத்தின விவரங்களை ரஜினி சார் எனக்கு சொன் னார்.
அந்த ஆச்சர்யத்துல என் ஆசை, இமயமலை நோக்கிப் பயணிக்க வெச்சது. ரஜினியோட நண்பர் ஹரி மூலமா என்னோட இமயமலைப் பயணம் அமைஞ்சது. பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செஞ்சிட்டிருந்தப்போ பாபாவோட உருவம் எனக்குத் தெரிஞ்சது!

கிட்டத்தட்ட பாபாவை, ரஜினி வர்ணிச்ச அதே காட்சிகள். அந்த வைபரேஷன் கிடைச்சதும் அங்கிருந்தே ரஜினிக்குப் பேசினேன். அவரும், ‘குட்! உனக்கும் அந்த பாக்கியம் அமைஞ்சுதா?’னு வியந்து போனார்.
p44c
பாபா தரிசனத்துக்கும், பாபா குகைக்கும் நினைச்ச மாத்திரத்துல போயிட வாய்க்காது. சொத்துபத்து இருந் தாலும் சமுதாயத்துல ஓஹோ என்று இருந்தாலும் பாபா அனுக்ரஹம் இருந்தா மட்டும்தான் அந்தக் குகைக்குப் போக முடியும். அந்த அனுக்ரஹத்தை பாபா எனக்கும் வழங்கினார். நான் ஆன்மிக குருவா ரஜினியை ஏத்துக் கிட்டேன். குகைக்குப் போறது ரொம்ப சிரமமான காரியம். எதன் மீதும் பற்றில்லாமல் பயத்தை ஒதுக்கி வெச்சுட்டுத்தான் போகணும்..!” என்று நெகிழ்ச்சியுடன் நாகராஜன்ராஜா பரவசமாக சொல்லிக்கொண்டே போனார்.

இதோ, தொடங்குகிறது முதல் கட்டப் பயணம் டெல்லியை நோக்கி…
டெல்லியிலிருந்து சாலை மார்க்கமாக இமயமலை நோக்கிய நமது பயணம் ஆரம்பமானது. கான்பூர் வழியாக இமயமலையை நோக்கி நாம் பயணித்த தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகத்தான் இருந்தது. 20 கிலோ மீட்டர்களுக்கு ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது. ஆனால், அத்தனை பாலங்களிலும் கால்வாசிப் பணியே முடிவடைந்திருந்தது. மத்திய – மாநில அரசுகளுக்குள் சுமுக உறவில்லை என்று வழியில் எதிர்ப்பட்டவர்கள் காரணம் சொன்னார்கள்.p44b
அந்த சாலையில் பயணித்த டிஸைனில் வாகனங் களை வேறு எங்குமே பார்க்க முடியாது! லோக்கலில் பம்ப்செட் மோட்டார்களைக் கொண்டு கையில் கிடைத்த உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள். அதில் ஓர் ஊரே குவியலாக அம்மிக் கொண்டு பயணம் செய்தது!

கொஞ்சம் அடர்த்தியான மரங்கள் தென்படத் துவங்க… பயணத்தில் சூழத் தொடங்கியது பசுமை. நம்மை வரவேற்றது ஹரித்துவார். விண்ணை முட்டும் சிவன் சிலை ஹரியின் வாசலாக (துவார்!) வரவேற்றது. சிவனை சுற்றி கங்கை ஏகாண்டமாக, அழுக்காக ஓடிக் கொண்டிருந்தது. ஹரித்துவாரில் எங்கிருந்து நோக்கினாலும் சிவனை தவிர்க்க முடியவில்லை. தென்னிந்திய ஸ்தபதியான ஸ்ரீதர்தான் அச்சிலையை வடிவமைத்தவர்.

இங்கிருந்து சில மைல்களில் வருவது ரிஷிகேஷ்!

இமயமலையின் அடிவாரம் என்று சொல்லலாம். எங்கு திரும்பினும் பச்சைப் போர்வை போர்த்தி, இமயம் தனது கம்பீரத்துக்கு டிரெய்லர் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது. ரிஷிகேஷ் தேசாந்திரிகளின் தேசம். இதன் ஒவ்வொரு தெருவுக்கும் சரித்திரப் பின்னணி உண்டு. சந்நியாசிகள் காவியில் தங்கள் சொந்த வாழ்க்கையை மூழ்கடித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை நெருங்கி முகத்தை உற்று நோக்கினால் ஒவ்வொருவரின் முகத்திலும் புதிய தேடலோடு சேர்ந்து பழைய குடும்ப வாழ்க்கையின் பதிவுகளும் மிச்சமிருப்பதைக் காண முடியும்.

வீதிக்கு இரண்டு அல்லது மூன்று அன்னதான சத்திரங்கள்… காலை – மாலை – இரவுகளில் அங்கு தயாராகும் உணவுக்காக சந்நியாசிகளைத் தேடிப் போக, சத்திரங்களிலேயே வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் வெறுங்கையான காவித் துறவிகளே தென்பட்டாலும் பொங்கி வைத்த சோற்றைத் திங்க சொற்பமாகவே வந்து போகிறார்கள். வேத கோஷத்துடன் ஒரு கூட்டம் கங்கை நதிக் கரையில்!

இங்கே பிரவாக மெடுத்து, பால் போல் பெருகுகிறது கங்கை. அங்கே பார்த்ததை வார்த்தைகளில் விவரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இனம் புரியாத இருட்டு தேசமான ரிஷிகேஷில் சந்நியாசிகளுக்கு அடுத்து அதிகம் வந்து போவது வெளிநாட்டினர்தான். ஏதோ ஒரு வீதியில் எந்த ஈகோவும் இல்லாமல் தரையில் உட்கார்ந்து வானத்தை நோக்கி முணுமுணுத்தபடி இருக்கிறார்கள் இந்த வெளிநாட்டு ஆன்மிக விருந்தினர்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷில்தான் சூடானபொங்கலும், ஆவி பறந்த இட்லியும் பார்க்க முடிந்தது. ரஜினி இங்கே வரும்போதெல்லாம் தங்குவது தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமக் கிளையில்தான். ஆஸ்ரமத்தின் பின்பக்கப் படிகள் நேராகப் போய் முடிவதே கங்கை நதியில்தான். அங்கே பக்தர்கள் கங்கையை லயித்தபடியே தங்கியிருக்க, அழகாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளன அறைகள்.

p44a
”ரஜினி இங்கே தங்குகையில் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஆழ்ந்து, அகன்று ஓடும் நதிப் பெருக்கையே மணிக் கணக்கில் உற்றுப் பார்த்திருப்பார்…” என்று சொல்லும் ஆஸ்ரமத்தின் இளம்துறவி குகாத்மானந்தா தொடர்ந்து,
”கங்கையை ரஜினி பார்க்கத் துவங்குகிற ஒரு சில நிமிடங்கள் வரைதான் அவரிடம் அசைவு இருக்கும். அதுக்கப்புறம் அப்படியே பல மணி நேரம் இருப்பாரு. உதாரணத்துக்கு, நின்னுக்கிட்டுப் பார்த்தார்னா நின்னபடியேதான் இருப்பாரு. உட்கார்ந்து இருந்தால் எழுந்திருக்கவே மாட்டாரு. தன்னோட அறைக்கு போனாலும் அங்கே தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேணாம்னு சொல்லி கண்மூடி தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாரு. அவராக வந்து பேசினாத்தான் உண்டு. அமைதியைத் தேடி வர்ற பலரில்… அதை சரியா கண்டுபிடிக்கிற அபூர்வமான மிகச் சிலரில் உங்க ரஜினியும் ஒருத்தர்!” என்றார்.ganga-haridwar
ரஜினிக்கு ஆஸ்ரமத்தில் உதவியாக இருப்பவர் சுப்பிரமணியம். இவரது சொந்த மாநிலம் கேரளா. பல வருடங்களுக்கு முன்பு இந்த ஆஸ்ரமத்துக்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார். இப்போது நிறைய பாஷைகள் இவருக்கு அத்துப்படி. ரஜினி இவரிடம் தமிழில், இந்தியில்…. அல்லது மராத்தியில் பேசுவாராம்.
”ஒரே ஒரு துணிப்பை மட்டும்தான் கொண்டு வருவாரு. அதுல பழைய சட்டை ரெண்டு, லேசா தையல் விட்ட பனியன் ரெண்டு, ஒரு தொப்பி, ரெண்டு மூணு கறுப்புக் கண்ணாடி இருக்கும். ஆஸ்ரமத்துல என்ன சாப்பாடு இருக்கோ அதைத்தான் சாப்பிடுவாரு. கொண்டு வந்த சட்டை பனியன்களையே மாறி மாறி போட்டுக்கிட்டு ரிஷிகேஷ் வீதிகள்லயும் நடமாடுவாரு. டீக்கடைகள்ல நின்னு டீ குடிப்பாரு. ஒரு தடவை அவரை ஜனங்க கண்டுபிடிச்சு சூழ்ந்துட்டாங்க. ஆனா துளிகூட டென்ஷன் இல்லாம லாகவமா சமாளிச்சு அவங்ககிட்ட இருந்து தனியா போயி கங்கைக் கரையோரம் நடக்க ஆரம்பிச்சுட்டார்!” என்கிறார் சுப்பிரமணியம்.

ரிஷிகேஷிலிருந்து மேற்கே நம் பயணம் தொடர்கிறது. செங்குத்தாக இமயம் ஓங்கி உயர்ந்து தன் பிரமாண்டத்தைக் காட்டுகிறது. கைநீட்டி நம்மை அழைக்கிறது. அதில் அழகுடன் நிறைய நிறைய ஆபத்தும் காத்திருக்கிறது. மெள்ளவே முன்னேறினோம். ஜப்பான் சாமியார், சஞ்சீவி மலை, பாபாஜி குகை, ரஜினியின் மின்சாரக் கணங்கள் என்று அடுத்தடுத்து ஆச்சர்யங்கள் அங்கே காத்திருக்கின்றன…


ரிஷிகேஷில் இருந்து இமயமலையில் பகல் நேரம் ஏறிச் செல்வதுதான் பாதுகாப்பு’ என்று ரஜினி யின் நண்பர் ஹரி சொல்லிக்கொண்டேதான் இருந்தார். ஆனால், ரிஷிகேஷின் அழகில் மயங்கிப்போய் அதிலி ருந்து மீள இரவாகிவிட்டது. போகவேண்டிய தூரம் அதிகமிருந்ததால், அசட்டு தைரியத்தில் இரவிலேயே நம் வண்டி இமயமலையில் ஏறத் துவங்கிவிட்டது.
p43வளைந்து நெளிந்து நம் வாகனத்தை வழி நடத்திக்கொண்டிருந்த அந்த சாலையில், எதிர் பக்கத்திலிருந்து வாகனங்களே வரவில்லை. அவசரம் மற்றும் கட்டாயத்தின் அடிப்படையில்தான் இந்த சாலைகளில் இரவு நேரப் பயணம் இருக்குமாம். இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்ட போதுதான் இந்தி நடிகை மந்திரா பேடியின் அம்மா புரோத்திமா பேடி நிலச்சரிவில் சிக்கி அண்மையில் இறந்தார் என்பதை, எங்கள் வண்டிக்குள்ளிருந்த யாரோ மெதுவாகச் சொல்ல… ஜிலீரிட்டது முதுகுத்தண்டு! அந்த கும்மிருட்டில் நம் வாகனம் துப்பிய வெளிச்சம் மட்டுமே வளைந்தோடிய ரோட்டைக் காட்டியது!
திடீரென்று பார்த்தால்… ரோட்டை அடைத்துக் கொண்டு ஒரு பாறாங்கல். உருண்டுவந்த ஜோரில் அது சின்னதும் பெரிசுமான இன்னும் பல கற்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்க… அந்த மலைப்பாதை மூடிக்கிடந்தது. பயணக்குழுவினர் அனைவரின் முதுகுத்தண்டும் சில்லிட்டது. இரவை அந்த இடத்திலேயே கழித்தோம். காலையில் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் வரத் துவங்கவும், ஆட்கள் வந்து பாறாங்கற்களை அகற்றி வழி ஏற்படுத்தினார்கள்.
பகல் பயணம் வேறு மாதிரி சவால்! பல இடங்களில் வாகனத்தைக் கொஞ்சம் வேகமாகச் செலுத்தினாலும், அதிர்வில் அது லேசாகக் குதித்து சாலையோரத்துக்கு வந்தது. எட்டிப் பார்த்தால் கிடுகிடு பள்ளம். உயிர் மேல் பயம் வர, இறங்கி நடந்தோம். ஆளில்லா வாகனத்தை ஊர்ந்து ஊர்ந்து ஓட்டிப் பின்தொடர்ந்தார் டிரைவர்!
இதோ வந்துவிட்டது ருத்ரப் பிரயாகை! ‘ஓவென’ கங்கை ரவுத்திரம் கொப்பளிக்கப் பாய்கிறது இங்கே! சின்னச் சின்னதாக பல நதிகள் இந்த இடத்திலேயே வந்து கங்கையோடு கைகோத்துக் கொள்ளத் தொடங்கி விடுகின்றன. நிமிர்ந்து பார்த்தால் நூறு, இருநூறு அல்ல… ஆயிரக் கணக்கில் மலைக்குன்றுகள், மதம்கொண்ட யானைகளாகத் திமிறிக் கொண்டிருந்தன. இமயத்தில் இப்படி லட்சத்துக்கும் அதிகமான மலைக்குன்றுகள் உண்டாம்! இயற்கையின் கம்பீரத்தை பயபக்தியோடு ரசித்துக்கொண்டே சென்ற நம்மை அடுத்து அழைத்தது கர்ணப் பிரயாகை! கங்கைக் கரையை ஒட்டியே ஓங்கி நிற்கிறது ஒரு நடுத்தர ஹோட்டல். இங்கு ரஜினி வரும்போதெல்லாம் அறை எடுத்துத் தங்குகிறார். மிடில் க்ளாஸ் மனிதர்கள் வாசம் செய்யும் சர்வசாதரண ரூம்கள்தான் இங்கே.
என்னதான் இயற்கையோடும், ஆன்மிகத் தேடலிலும் ரஜினி ஒன்றி விட்டாலும், அவரை இங்கும்கூட புகழ்வெளிச்சம் விட்டபாடில்லை! இங்கும் ரஜினியை அடையாளம் கண்டு நூற்றுக்கணக்கானவர்கள் சூழ்ந்துவிடுவார்களாம். இந்த ஹோட்டலுக்குப் பெயரெல்லாம் இல்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் ஒரு சூப்பர் துறவியாக இங்கே வந்து போவதாலேயே உள்ளூரில் இதற்கு ‘ரஜினி தாபா’ என்று பெயர் வந்துவிட்டது. மலைசஞ்சாரத்தின்போது இங்குதான் ரஜினி வயிறார சாப்பிடுவார். சப்பாத்திக்கு மாவை பிசைபவரில் துவங்கி, கல்லாவில் கணக்குப் பார்ப்பவர் வரை ரஜினியோடு பல விஷயங்களும் ஜாலியாகக் கதைப்பார்களாம் இங்கே.
ரஜினி வந்து விட்டால் அவரோடு எல்லோருமே ஒரே பந்தியில் அமர்ந்து பசியாறுவார்களாம். அவர் தங்கும் அறைக் கதவைத் திறந்தால், கங்கை சூப்பர் ஸ்பீடில் புகை கிளப்பிக்கொண்டு பாய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் கரையில் ஒரு சிவன் கோயில். அதற்கு எதிர்க் கரையோரம் பிணங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பாதி எரிந்த நிலையில் மனிதனின் கருகிய மிச்சங்களை கங்கைத் தாய் தன் சுழல்கரம் நீட்டி தன்னுள் வாங்கிக் கொள்கிறாள்!
p42a
மழைத் தூறல், பனி மூட்டம் என இமயம் நிமிடத்துக் கொரு ஜாலம் காட்டிக் கொண்டிருக்க… கர்ணப் பிரயாகையைத் தாண்டி ஆதிபத்ரி அடைந்தோம்! ‘இதுதான் பழைய பத்ரிநாத்’ என்பவர்களும் உண்டு. இமயத்தில் ஆதிபத்ரி என்பது நம்மூர் விழுப்புரம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள்போல. இங்கிருந்து மிக முக்கியமான யாத்திரை ஸ்தலங்களுக்கு சாலைகள் பிரிகின்றன. வந்த சாலையிலேயே ஆதிபத்ரியைத் தாண்டி நேராகப் போனால் பத்ரிநாத், வலது பக்கம் போனால் அமர்நாத், வைஷ்ணவிதேவி கோயில், கைலாசம், மானஸரோவர் போகலாம்.
நாம் பயணித்தது – ஆதிபத்ரியில் இருந்து இடது பக்கம் திரும்பி! எதிரில் கூப்பிடு தொலைவில் வருபவரைக் காண முடியாத பனிமூட்டம். அதன் அடர்த்தியும் குளிர்ச்சியும் சொல்லவோ, எழுதவோ முடியாத பிரமிப்பின் உச்சம்!
p42c”ராணிகேட் வந்தாச்சு…” என்றும், ”இதுதான் துரோணகிரி” என்றும் சொல்லிச் சொல்லி அடுத்த பாயின்ட்களைக் கடந்தது நம் குழு. ”துரோணகிரிதான் இலங்கை யுத்தத்தின்போது அனுமன் சுமந்து சென்ற சஞ்சீவி மலை!” என்று அண்மையில் சில ஆய்வுகள் கூறுவதாக விளக்கினார், ரஜினியின் நண்பர் ஹரி. இந்தப் பாதையில் ஊர்ந்து செல்வதற்காகவே ஒரு ஜீப்! அதில் ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்டிருப்பது போன்ற ஹாரன்! இந்த ஒலியில்தான் காட்டு விலங்குகள் விலகி ஜீப்புக்கு வழிவிடும் என்பது அந்த டிரைவர் கம் ஓனரின் நம்பிக்கை. ஜீப் பயணம், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் நடந்தது. சேரவேண்டிய இடத்தை உயிரோடு அடைந்த பின்பு பயணக் குழுவினர் அனைவருமே அந்த டிரைவருக்கு உலகின் மிகச் சிறந்த ஓட்டுநர் என்ற பட்டத்தை, நீண்ட பெருமூச்சோடு வழங்கினோம்..

p42bஅந்தப் பிரதேசம் எங்கும் கஞ்சா செடிகள் கேட்பாரின்றி தலையாட்டிக் கொண்டிருந்தன. எங்கும் சுத்தமான ஆக்சிஜன். அதை சுவாசித்தபடியே பாபாவின் குகை நோக்கி நடக்கத் துவங்கினோம். சுமார் நான்கு மணி நேரம் ஆபத்தான மலைப்பாதையில் செங்குத்தாக ஏறவேண்டும். ‘பாபா குகை போகும் வழி’ என்று சின்னச் சின்ன அறிவிப்புகள் புதர்களுக்குள் மறைந்திருக்கின்றன. ஓர் இடத்தில் சின்னதாக அருவி. அது தண்ணீராகக் கொட்டும் ஐஸ்கட்டி! அந்தச் சிற்றருவியில் தலைகொடுத்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் எந்த சலனமும் இல்லாமல் ரஜினி உட்கார்ந்திருப்பார் என்று ஹரி சொன்னார். ”நாமளும் குளிக்கலாம். இந்த ஒரு குளியல் ஒரு வருஷத்துக்கு உங்ககிட்ட எந்த நோயையும் அண்ட விடாது… வர்றீங்களா?” என்று ஹரி முதல் ஆளாக நடக்கத் துவங்கிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து நாமும், ‘விஜய் டி.வி.’ குழுவினரும் போனோம். அருவியில் தலை மீது ஐஸ் மழை இறங்கி, உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ச்சுகிறது. உடம்பெல்லாம் நனைந்தவுடன் பார்த்தால், ஆவி பறக்காத குறையாக உடம்பு சூடாவது ஒரு அதிசயம். அந்தச் சூட்டோடு அனுபவித்துவிட்டு வெளியே வந்தால் சிலுசிலு வென்ற ஈரம் தோய்ந்த பனி மீண்டும் நம்மைத் தாலாட்டுகிறது. பாபா குகையைப் பராமரிக்கும் ‘யோகதா சத்சங்க’த்தினர் பொதுவில் இந்த இடம் வரையில் யாரையும் அனுமதிப்பதில்லை. யோகக் கலை மீதான ஆர்வம் கொண்டவர்களா என்று இந்த சங்கத்தினர் சில கேள்விகள் கேட்டு திருப்தியான பிறகே அனுமதிக்கிறார்கள். கைத்தடிகள் இல்லாமல் ஒரு அடிகூட முன்னேற முடியாது.
p421
நம்மிடம் இருந்த லக்கேஜ்களை சுமக்க வன வேடர்கள் உதவிக்கு வந்தார்கள். இவர்கள் எல்லோருமே சாட்சாத் ரஜினியின் நண்பர்கள்! ஹரியின் தலையைப் பார்த்ததுமே, ‘ஓ ரஜினிக்குத் தெரிந்தவர்களா……’ என்று உரிமையோடு வந்து உதவினார்கள்.
‘சாரோட அடுத்த படம் ரிலீஸ் ஆயிடுச்சா?’ என்று ஒருவர் கேட்க… அதற்கு பதிலாக, ‘இன்னும் வந்திருக்காது. வந்திருந்தா… சார், நம்மகூட இங்கல்லவா இருப்பார்…’ என்றார் இன்னொருத்தர். ஆம், இவர்களுக்கும் ரஜினி பட ரிலீஸ் முக்கியம்தான். காரணம், படம் ரிலீஸ் ஆகும் சமயம், இங்கே , ரஜினியே நேரடி ரிலீஸ் அல்லவா!
சட்டென்று நின்று விடுகிறார் ஹரி. அவர் உடல் லேசாக சிலிர்க்கிறது. கைநீட்டிக் காட்டுகிறார். கண்ணெதிரில் ஒரு குகை தெரியத் துவங்குகிறது. இமயத்தின் ஒரு சிகரத்தின் உச்சியில் நடுநாயக மாக இருக்கிறது அந்த குகை. அதற்குப் பின்னால் இருக்கிறது மற்றொரு சிறிய குகை. அதுதான் பாபாவின் மந்திர குகை!
கஷ்டப்பட்டு ஒருவர் ஊர்ந்து செல்லும்படி 23 அடிக்கு துவாரம்… இதைக் கடந்தால் உள்ளே சின்னதாக மண்டபம். ‘இங்குதான் காலங்களைக் கடந்த பாபா யோகத்தில் ஆழ்ந் திருக்கிறார். இந்த குகைக்குள்தான் ரஜினியும் சென்று வருகிறார். ”உள்ளே சென்றால் ‘விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்’ என்ற பரவச நிலைதான்!” என்று ஹரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வன வேடர்கள் புலி மாதிரி ஒலி எழுப்பினார்கள். புரியாமல் நாம் பார்க்க…”எப்போதாவது மட்டுமே மனிதர்கள் சஞ்சாரம் செய்யும் இடமில்லையா… பல சமயம் குகையினுள் புலி இருக்கும். ஓசை எழுப்பினால் உள்ளிருந்து அதுவாக வெளியேறி எதிரே இருக்கும் பள்ளத்தாக்கில் குதித்து ஓடிவிடும்…” என்றார்கள்.
ரஜினி வந்த பல சந்தர்ப்பங்களில் இப்படி பலவிதமாக நடக்குமாம். ஒருமுறை கண்ணெதிரில் புலி வெளியேறி ஓடிப்போனபின்தான் ரஜினி உள்ளே போனதாக வன வேடர்கள் சொன்னார்கள்.
p44b1இந்த குகையைப் பராமரிக்கும் யோகதா சத்சங்கத்துக்கு சென்றோம். துரோணகிரியில் ஒரு சிகரத்தின் முகட்டில் இருக்கிறது ஆஸ்ரமம். அதன் வாசலில் 20 அடியில் சாலை, அதைக் கடந்து பிரமாண்ட பள்ளத்தாக்கு… எட்டிப்பார்த்தால், பைன் மரங்களின் உச்சிகள் மட்டுமே கண்ணுக்குத் p44a1தெரிகின்றன. இதை நிர்வகிக்கும் ‘ஜப்பான் சாமியார்’ நிர்மலானந்தாவை சந்தித்தோம். அவருக்கு 86 வயது என்பதை நம்ப முடியவில்லை. 35 வருடங்களுக்கு முன்பு அவர் இங்கு வந்திருக்கிறார். அதன் பின் யோகக் கலையில் இறைவனைத் தேடும் பணியில் இங்கேயே தங்கிவிட்டார். ”ரஜினி இங்கே வருவார். யோகக் கலைகள் பற்றி திரும்பத் திரும்ப கேட்டுத் தெரிந்து கொள்வார்.” என்றவர், யோகக் கலை பற்றி சிம்பிளாக ஒரு வகுப்பும் எடுத்தார் நம் குழுவுக்கு.
”இந்தக் குகைக்குள் உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை அப்படியே மனதுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் பகிர்ந்து கொள்ளக்கூடியதல்ல, இந்த வைபரேஷன். அதேசமயம், ரஜினி உள்பட அடிக்கடி இங்கே வருபவர்களுக்கு ஏற்படும் ஒருசில அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளக் கூடியவை. மலையிலிருந்து இறங்கியதும் அதுபற்றிப் பேசலாம்…” என்றார் ஹரி. உயிரைப் பணயம் வைத்து, இயற்கையின் எல்லையில்லாத பரவசத்தையும் அனுபவித்து வந்த நாம், குகையிடமிருந்து விடைபெற்று திரும்பத் துவங்கினோம்.
மலை ஏறும்போது பயணக் குழுவினருக்குள் எழுந்த கலகலப்பான பேச்சு இப்போது இல்லை. எல்லோரிடமும் ஏதோ ஒரு மௌனம். சமவெளிக்கு மீண்டும்வந்தடைந்து, உத்தரப் பிரதேசத்தின் புழுதியையும் வெயிலையும் தொட்டதும், மெதுவாக ஒவ்வொருத்தரின் செல்போனும் சிணுங்கத் தொடங்க… அப்போதுதான் மாமூல் மனிதர்களானோம்.
சென்ற இடமும், அங்கே எழுந்த கேள்விகளும் நமக்குள் சுழன்று கொண்டே இருந்தன.
நன்றி: ஜூனியர் விகடன்


 

அவசியம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ பதிவு....

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு. சந்தர்ப்பம், சூழ்நிலை என்று இயற்கையின் இழுப்பில் நாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும், நமக்கே நமக்கு என்று - சில அபூர்வமான வேளை வருவதும் உண்டு. அப்போது நாம் தேமே என்று வாழ்க்கையின் ஓட்டத்திலேயே ஓடாமல், லபக்குன்னு புடிச்சா ஆச்சு... இல்லை , காலம் முழுக்க புலம்பிக்கிட்டே திரிய வேண்டியது தான்..

எந்த நேரம் நல்ல நேரம் , எந்த நேரம் மோசமான நேரம் என்று அறிந்து கொண்டு, அதை பயன்படுத்த தெரிந்தாலே போதும்.. வெற்றி மேல் வெற்றி நிச்சயம். இன்னைக்கு பார்க்க விருப்பது - இரண்டு அபூர்வ நாட்களைப் பற்றி...

பொதுவில் கிரகண நேரம் - பிரபஞ்சத்தின் சக்தி அளவிட முடியாமல் ஆர்ப்பரிக்கும். சமைத்த உணவு என்று இல்லை - நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட, கெட்டுப் போய் விடுமாம். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆதலால் கிரகண நேரத்திற்கு முன்னும் , பின்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இடைவெளி விட்டு உணவு உண்ணுவது நல்லது...

பெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி, பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து , அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்...... தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம்..?

மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ...

எங்கள் ஊரில் கிரகண நேரத்தில் - உலக்கையை நிற்க வைப்பார்கள். கொட்டுக்கூடை என்று சிறிய வெண்கலப் பாத்திரம் ஒன்று இருக்கும். அதில் நல்லெண்ணையை ஊற்றி - உலக்கையை நிறுத்தி வைப்பார்கள். கிரகண நேரத்தில் அந்த உலக்கை அப்படியே நெட்டுக் குத்தாக நிற்கும். மற்ற நேரங்களில் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. சிறிய வயதில் , எங்கள் கிராமத்தில் நானே பல தடவை பார்த்து இருக்கிறேன்... (கொட்டுக் கூடையை விடுங்க... உலக்கையே இப்போ இருக்கிற தலை முறைக்கு தெரியுமான்னு தெரியலை...)

கர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது...

கிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...!
சரி , இது எல்லாம் இன்னைக்கு எதுக்கு சொல்றேன்னு கேட்குறீங்களா?
இன்றைக்கு சந்திர கிரகணம்....

இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும். முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது.

இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும்.

சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று , இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

கிரஹண தோஷ பரிகார ஸ்லோகம் :
இந்த்ரோ[அ]நலோ தண்டதரஸ்ச ருக்ஷ:பாசாயுதோ வாயுக்குபேர ஈசா:

குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ரக்ரஹ தோஷ சாந்திம்.
===============================================

இந்த கிரகண நேரத்தில் - மந்திர ஜெபம் செய்வது மிக மிக உகந்தது. உங்களுக்கு அது அளப்பரிய பல நற்பலன்களை தரும்....

ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கும் , ஜெபித்து இடையில் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து ஜெபிக்க முடியாமல் போனவர்கள் - இன்றைய கிரகண நேரத்தை அவசியம் பயன் படுத்திக் கொள்ளுங்கள்....

சனிக்கிழமை , வீக் எண்ட் ... ஒஸ்தி மாமூ.....ன்னு , வழக்கம் போல செய்ற பார்ட்டி சமாச்சார வேலைகளை எல்லாம் , இன்னைக்கு செய்யாம இருக்கிறது , கறி மீன் சாப்பிடாம இருப்பது - சாலச் சிறந்தது..

வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்...!

======================================================

இன்னொரு சிறப்பான ஆலயத்தை இன்று பார்க்க விருக்கிறோம்....

நாள் தவறாமல் அகத்தியர் பெருமானால் பூஜை செய்யப்படும் முருகன் - இந்த
கழுகாசல மூர்த்தி.

அப்படி என்ன விசேஷம் இங்கே...?

ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். ராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார. இ‌தை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு மக முனிவர், ராமனிடம், தன்னால் தன் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே, இதனால் ஏற்பட்ட பாவம் எப்‌போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது ? என்றார்.

அதற்கு ராமன், நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்,’’ என்றார். இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்‌போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார். அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

முருகன் தாரகாசூ‌ரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு திர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரி‌யைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை’ என பெயர் பெற்றது.

எனவே இந்த மலையும் , ஆலயமும் - ராமாயண கால தொடர்புடையது.

பிரார்த்தனை :திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் ‌மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான் இந்த குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை சற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.

இந்த கழுகாசலமூர்த்திக்கு முகம் ஒன்று, கரம் ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை ‌தொங்க விட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார். மயிலாக மாறிய இந்திரன் : பிற கோயில்களின் அசுரன் தான் மயிலாக இருப்பான். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும்.

ஆனால், இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிணாமூர்த்தி) முருகனும் (‌செவ்வாய்) இருப்பது சிறப்பு. எனவே குரு மங்கள ஸ்தலம்’ என்கிறார்கள். இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும், சிவபெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிசிறப்பாகும்.

 

ஹோரை : செய்யற வேலைகளை உருப்படியா முடிக்கிறதுக்கு ஒரு குட்டி யோசனை...


வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஒரு ஜோதிடராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் " ஹோரையும் " ஒன்று.

ஜோதிடராக இருப்பதை விட்டுத் தள்ளுங்கள். அன்றாட நடைமுறையில் , இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும். ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.


ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.


6 - 1- 8 - 3

இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஓரை :

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஓரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஓரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஓரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.


குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.


செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.



===================================================

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
ஏன்..? அதுதான் உங்களுக்கு தெரியுமே..?

சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை...

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 

என்னையா... அவசரமா பஞ்சாயத்து கூட்டி இருக்கீங்க.. என்ன சமாச்சாரம்... ?
ஐயா... இந்த ஹோரை சம்பந்தமா.... கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா...
ஏற்கனவே சொல்லி இருக்கிறோமேயா .... திரும்ப திரும்ப கேட்குறே.. நீ.. திரும்ப திரும்ப கேட்குறே நீ ......

"ஏ... ராசு...இன்னுமா தூங்குறே.... வேலைக்கு இன்னைக்கு போகலையா?"
"அய்யய்யே... எல்லாம் கனவா!"
"யம்மா... இந்தா ரெடி ஆகணும்மா"... கண்ணைக் கசக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்... ஆமா... ஹோரைனா என்ன? நாம ஏற்கனவே எழுதி இருக்கிறோம்ல.... அப்புறம் என்ன? சரி, திரும்ப படிச்சுப் பார்ப்போம்ன்னு உட்கார்ந்தேன்யா... ஒரு விஷயம் சொன்னா , நல்ல இருக்கும்னு தோணுச்சு... அதுக்குத் தான் இந்த பதிவு..... வாங்க பார்ப்போம்...!
====================================================

ஹோரை : நமது ஜோதிட பாடங்கள் படித்தவர்கள் - இதை நன்றாக அறிவீர்கள்... ஹோரை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்று..!
படிக்காதவன் படத்தில - மலேசியா வாசுதேவன் சார் குரல்ல - ரஜினி பாடுவாரே.. "சொல்லி அடிப்பேனடி ... அடிச்சேனுன்னா நெத்தி அடிதானடி"ன்னு ... அந்த பாட்டு மாதிரி....

ஹோரை பார்த்து நீங்க செய்ற எல்லாவேலையும் - சும்மா நச்சு நச்சுன்னு முடிக்கலாம்....

ஹோரை அட்டவணை :



மணி-முதல்
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
6.00 - 7.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
7.00 - 8.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
8.00 - 9.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
9.00 -10.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
10.00 -11.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
11.00 -12.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
12.00 -01.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
01.00 -02.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
02.00- 03.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
03.00-04.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
04.00-05.00௦
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
05.00-06.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
06.00 -07.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
07.00 -08.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
08.00 -09.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
09.00 -10.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
10.00 -11.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
11.00 -12.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
12.00 -01.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
01.00 -02.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
02.00- 03.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
03.00-04.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
04.00-05.00௦
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
05.00-06.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்



சரி, அட்டவணையை கையில வைச்சுக்கிட்டே இருக்கவும் முடியாது... சுலபமா ஞாபகம் வைச்சுக்க என்ன வழி ன்னு நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டு இருந்தார்...

அந்த நாளைக்கு உரிய ஹோரை முதல்ல வரும், காலை 6 மணிக்கு. ஒரு மணி நேரத்துக்கு பிறகு அடுத்த ஹோரை ஆரம்பிக்கும். செவ்வாய் கிழமைன்னு வைச்சுக்கோங்க... முதல் ஹோரை செவ்வாய் ஹோரை - காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரைக்கும் வரும்..

மதியம் ஒரு மணிக்கு திரும்ப செவ்வாய் ஹோரை வரும். அதே மாதிரி இரவு எட்டு மணிக்கு வரும்.

Cycle time : 6 - 1 - 8 - 3

சரி, முதல் ஹோரை தெரிய வந்திடுச்சு , இரண்டாவது எப்படி கண்டு பிடிக்க?

நிஜமா, நாம் இப்போ சொல்லப் போறது, எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலை.. நானா கண்டு பிடிச்சது , சுலபமா எப்படி ஞாபகம் வைச்சுக்கிடாம்னு ... எப்படின்னு பாருங்க..... ( உனக்கு வேற வேலையே இல்லையா... இப்படியா லூசு மாதிரி இருப்பேன்னு , நீங்க அக்கறையோட கேட்குறது , எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பாஸூ...)

ஞாயிறு - சூரியன்
திங்கள் - சந்திரன்
செவ்வாய்
புதன்
வியாழன் - குரு
வெள்ளி - சுக்கிரன்
சனி

வரிசைப்படுத்திக்கிட்டோமா ?

இப்போ , reverse ல - ஒன்னு விட்டு ஒன்னு போகணும்....

செவ்வாய் ஹோரைக்கு அடுத்து , சூரியன், அடுத்து சுக்கிரன், அடுத்து புதன், அடுத்து சந்திரன் , அடுத்து சனி , அடுத்து குரு , அடுத்து திரும்ப செவ்வாய்....

சொல்ல வந்த விஷயம் தெளிவா புரியுதா?
ஏன்யா .. நான் கரெக்டா பேசுறனா.. ன்னு சங்கிலி முருகன் மாதிரி புலம்ப வைச்சுடாதீங்க.... (கையைப் பிடிச்சு இழுத்தியா... கையைப் பிடிச்சு இழுத்தியாடா......)

எனக்கு ஜோதிடம் சொல்லிக் கொடுத்த என்னோட குருநாதர் - குரு ஹோரை வர்றப்போ.. கரெக்டா ஆரம்பிப்பார்.... செவ்வாய் ஹோரை வரும்போது படக்குன்னு நிறுத்திடுவார் ... செவ்வாய் ஹோரை தேவையில்லாத வாக்கு வாதம், சண்டைன்னு கொண்டு போகும்....
திரும்ப திரும்ப பேசுற நீ...
ஒரு பெரிய பிரச்னை வர்ற மாதிரி இருக்கும்னா, செவ்வாய் ஹோரை அந்த நேரத்துல வந்தா... தயவு செஞ்சு வாயை மூடிக்கிட்டு , கம்முன்னு இருங்க...

வீட்டுக்கார அம்மணி கூட, ஏதாவது சண்டை வந்து , கொஞ்சம் நேரம் கழிச்சு சமாதானம் ஆகும் பாருங்க.. அதுல கூட ஹோரை யோட கைங்கர்யம் இருக்கலாம்...

காலம் அறிந்து நடவாதவன் , கோலம் அழிந்து குரங்காவான் னு பழமொழி இருக்கு தெரியும் இல்லை...

ரொம்ப பெரிய காரியம் ஒன்னு தொடங்கணுமா, நல்ல சுப ஹோரைகள் ல தொடங்குங்க.... சூப்பரா வரும்...

கோவில்ல சாமி கும்பிடனுமா... குரு ஹோரைல செய்யுங்க... நல்ல பலன் கிடைக்கும்....