Monday, 13 August 2012

நாடி சோதிடம் பாகம் - 5

நாடி ஜோதிடம்
நாடி சோதிடம் பாகம் - 5
ஒரு நீச்சம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெறுவதால் அது தனது ஆட்சி வீட்டுக்குச் செல்லும். அதனால் ஐம்பது சதவிகிதமாவது சுபத்தன்மை பெறும்.
ஒரு ஜாதகத்தில் குரு நீச்சமடைந்து, சனியுடன் பரிவர்த்தனை ஆகிறது. சந்திரன் நீச்சமடைந்து, செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகிறது. சூரியன் நீச்சமடைந்து, சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகிறது. இதில் சந்திரனும், செவ்வாயும் நீச்ச பரிவர்த்தனை பெறுகின்றனர். இந்த விதமாக நீச்ச கிரகங்கள், பரிவர்த்தனை பெறும் போது, ஓரளவு சுப பலனைப் பெற்று விடுகின்றனர். காரணம், அவர்கள் இருவரும் தமது ஆட்சி வீட்டின் பலத்தைப் பெறுகின்றனர். அதேபோல், ஒரு உச்ச கிரகம் பரிவர்த்தனை காரணமாகத் தனது உச்ச பலத்தை இழப்பதுடன், பகைக் கிரகங்களின் சேர்க்கை பெற்று, தனது பலம் முழுவதையும் இழக்கிறார்.
ஒரு சக்கரத்தில் சனி உச்ச ராசியில் நிற்கிறார். சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுத் தனது ஆட்சி வீட்டுக்குச் செல்கிறார். அங்கு தனது பகைக் கிரகங்களான செவ்வாய் மற்றும் கேதுவுக்கு இடை யில் அமர்ந்து தனது ஆட்சி பலத்தையும் இழக்கிறார். இந்த நிலை ஜாதகத்தில் இருந்தால் பலன் எவ்வாறு அமையும்? தொழில் காரகனாகிய சனி, ஒரு அந்தஸ்தான அதிகாரத்தோடு கூடிய ஒரு பணியில் இருக்கலாம். காரணம், சனி உச்சம் பெற்று, உடன் வேறு கிரகங்கள் இல்லாமையே. ஆனால் அவர் பணி செய்யும் இடம் அவரது ஊருக்கு மிகத் தொலைவில் இருக்கலாம். காரணம் சர ராசி. எனவே மாறுதல் கேட்டு, சொந்த ஊருக்கு, அதாவது தனது ஆட்சி வீட்டுக்கு வருகிறார். அங்கே செவ்வாய் மற்றும் கேது இவர்களுக்கிடையில் சிக்கி, வேலையில் பல தொல்லைகளையும், சட்டச் சிக்கல்களையும் சந்திக்கவேண்டி ஏற்படும். அதனால் மனம் தளர்ந்துவிடுவார்.

பரிவர்த்தனை நற்பலனையும் தரும்.
ஒரு ஜாதகத்தில் சனி, செவ்வாய் மற்றும் சந்திரன், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுகின்றார்கள். மேஷத்தில் நீச்சம் பெற்ற சனி, பரிவர்த்தனை காரணமாக தனது ஆட்சி மூலத்திற்கான வீடான கும்பத்திற்கு வருகிறார். அங்கு இயற்கை சுபன் குருவுடன் சேர்வதால், முதலில் இவர் சாதாரணத் தொழில் செய்து, பிறகு பணி மாற்றம் ஏற்பட்டு, பணியில் முன்னேற்றம் காண்பார். அடுத்து உச்ச சந்திரன் பரிவர்த்தனை காரணமாகத் தனது ஆட்சி வீடான கடகத்திற்கு வந்து கொடிய பகைக்கிரகமான ராகுவுடன் சேர்கிறார். சந்திரன் தாயாருக்கு காரகன். அதனால் தாய் நோய்வாய்ப்பட நேரும்.
ஒரு கட்டத்தில் செவ்வாய், சனி சிம்மத்தில் சூரியன் உச்சம் பெற்று, மேஷத்தில் அதேசமயம் செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை காரணமாக சூரியன் உச்ச பலத்தை இழந்து ஆட்சி பலம் பெறுகிறார். மேலும் சூரியனுடன் சனி அமர்ந்து, சூரியனுக்குப் பாதிப்புக் கொடுக்கிறார். ஆகவே, ஜாதகனின் தகப்பனார், ஜாதகன் பிறந்தபோது உயர்நிலையில் இருந்திருப்பார். இந்தக் குழந்தை பிறந்த பிறகு பல கஷ்டங்களையும் அனுப விக்கவேண்டும். மேலும் இவரது சிறிய தந்தையும் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டே உன்னத நிலையை அடைவர்.

No comments:

Post a Comment