ஒரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெறுவதால் தான் சொந்த வீட்டிற்கு சேரும்போது நீச்ச பங்கம் ஏற்படுகிறது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமுற்று, கடகத்தில் இருந்து சந்திரன் நீச்சமுற்று விருச்சிகத்தில் இருந்தால் நீச பரிவர்த்தனை பெறுகிறது. பரிவர்த்தனை காரணமாக அவர்கள் தமது வீட்டிற்குச் சென்றுவிடுவதால் ஆட்சி பலத்தைப் பெற்று நீச்ச பங்கம் பெறுகின்றனர்.
இதற்கு பலன் கூறுவதானால், ஜாதகன், சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தான நிலையையும் மதிப்பையும் பெறுவான். அவ்வாறு உயருவதற்கு கள்ள வழியில் நடப்பவர்களின் உதவி கிட்டும். (குரு மதிப்பு, அந்தஸ்து, சந்திரன் கள்ள வழி செல்லுதல்)
அடுத்து, அஸ்தமனம் பெறும் கிரகம் பரிவர்த்தனை பெறுவதன் காரணமாக அஸ்தமன தோஷம் நீங்கி விடும்.
ஜாதகத்தில் சூரியனும், குருவும் உபாசனை தூரத்தில் உள்ள காரணத்தால் குரு அஸ்தமனம் அடைகிறார். அப்போது குரு தனது காரகத்தைச் சரிவர செய்ய இயலாது.
ஆனால் குரு, செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுகின்ற காரணத்தால் அஸ்தமன தோஷம் நீங்கப் பெறுகிறது. அதன் காரணமாக குரு தனது காரகத்துவ பலனைத் தரமுடியும்.
ஒரு பெண்ணின் ஜாதகமாகக் கொண்ட கிரகங்களை வரிசைப்படுத்தி எழுதுவோம். முதலில் சு+சந்+கே+செ+கு+சூ+ரா+பு உயிர் காரகனாகிய குருவும் ஆன்ம காரகனாகிய சூரியனும் ஒரு ராசியில் அடுத்து அடுத்து நிற்பது ஒரு நல்ல சேர்க்கையாகும்.
அதன்படி ஜாதகர், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து அதிகாரத்துடன் வாழவேண்டும். ஜாதகரின் தந்தை ஆன்மீக உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும்.
ஜாதகியின் தந்தைக்கு சூரியன், உச்சம் பெற்ற உயிர் காரகனாக, குருவுடன் சேர்ந்து இருப்பதால் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். ஆனால் அற்ப ஆயுளில் இறந்து விடுகிறார்.
காரணம் சூரியன் தனது பாதையில் முதலில் மரணத்தைக் கொடுக்கும் கிரகமான ராகுவைத் தொடுகிறார். அதேபோன்று ராகுவும் முதலில் சூரியனைத் தொடுகிறார். அதன் காரணமாக அவர் அல்பாயுசில் இறக்க நேரிடுகிறது.
அடுத்து காரகக் கிரகமாகிய செவ்வாய் நிலையைப் பார்ப்போம்.
செவ்வாய்க்கு 2.7.12ல் கிரகங்கள் இல்லை. மேலும் சுக்கிரன் செவ்வாயை சென்று அடைய வேண்டுமானால் இடையில் உள்ள பகைக் கிரகங்களான சந்திரன் மற்றும் கேதுவைக் கடந்துதான் (பல சிக்கல்கள், எதிர்ப்புகள் பேரில்) அடைய முடியும். மேலும் இந்த செவ்வாய், ராகு, கேது அச்சுக்கு ஒருபுறமும், சுக்கிரன் மறுபுறத்திலும் இருப்பதால், அப்படியே திருமணம் நடந்தாலும் பிரிவினை ஏற்படும். திருமண வாழ்க்கை சரியாக அமையாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.அடுத்து சகோதரன். செவ்வாய் சகோதரனைக் குறிக்கும். ஆக, சகோதரன் தூரதேசத்தில் இருக்கிறான் என எடுத்துக்கொள்ளலாம். ஆக, இந்த ஜாதகக் கட்டம், 15ஆம் மற்றும் 16ஆம் விதிக்கு ஒத்து வரும்.
பெண் ஜாதகம் ஜீவனகாரகன், சுக்கிரன் எனப் பார்க்கும். கேது, சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கிறார். அதே சமயம் வக்கிரம் பெற்று இருக்கிறார். சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும் இந்த ஜாதகிக்கு அமைதியும் இல்லை, ஆனந்தமும் இல்லை.
ஜாதகத்தில் தகப்பன் காரகன் சூரியன் உச்சம் பெற்றுத்தான் இருக்கிறார். ஆனால் 7ஆம் வீட்டில் உள்ள சூரியனின் கொடிய பகைவனான சனி பலம் பெற்று நிற்கிறர். மேலும் சனிக்கு பகைக் கிரகமான செவ்வாயுடனும் சேர்ந்து சூரியன் நிற்கிறார். அதுவே இந்தப் பெண்ணின் தந்தை முன் கோபக்காரராகவும். பல விரோதிகளை உடையவராகவும் இருப்பார்.
காரணம், செவ்வாய் தனது காரகத் தன்மை தோஷத்தை சூரியனுக்குத் தருவார். விரோதி கிரகமான சனி விரோதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்.
ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரன் வக்கிர கதியில் உள்ளார். எனவே சுக்கிரன் புதனை நோக்கி நகருகிறார். புதன் நண்பனைக் குறிக்கும் காரகக் கிரகம். அத்துடன் காதலையும் குறிக்கும் கிரகம். எனவே, இந்தப் பெண் தனது நண்பனை காதலித்துத் திருமணம் செய்து கொள்வார்.
அடுத்து சுக்கிரன், குரு பரிவர்த்தனை. இதன் காரணமாக ஆண் கிரகமான குருவிற்கும், பெண் கிரகமான சுக்கிரனுக்கும் தொடர்பு தரப்படுகிறது.
இதற்கு முன்பாக சுக்கிரன், புதன் இருந்த வீட்டிற்கு திரிகோணத்தில் இருப்பதால் இவர் சட்டபூர்வமான பிரிவினையை ஏற்படுத்திக்கொடுத்து விடுகிறார்.
ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிர கதியில் இருப்பதால் நீசத்திற்கு வரும்போதும் வக்கிரமாகவே கருத வேண்டும். இதன் காரணமாக மேஷத்தில் உள்ள செவ்வாய் என்ற கணவனை அடைகிறார்.
அது மூன்றாவது திருமணம். இந்த இடத்தில் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால் அதிகார அந்தஸ்து உள்ள ஒருவரது உதவியால் செவ்வாயைக் கைப்பிடிப்பார். என்றாலும் அதற்குள் உள்ள பகைக்கிரகமான சனியின் தொடர்பு காரணமாக மூன்றாவது கணவனையும் இழக்க நேரிடுகிறது.
இது போன்று நாடி முறையில் மிக எளிய முறையில் பலன் எடுக்கலாம்.
No comments:
Post a Comment