Sunday 16 December 2012

வீட்ல விநாயகர் இருந்தா விசேஷங்க!

சுதா ரகுநாதன் வீட்டு அழைப்பு மணி அருகே ஒரு பிள்ளையார் அமைதியா கப் புன்னகைக்கிறார். கதவு திறந்ததும் வரவேற்பதும் ஒரு பிள்ளையாரே. வரவேற்பறையில் ஆனந்த சயனத்தில் ஒரு பிள்ளையார் கனிவாக நம்மைப் பார்க்கிறார். மாடிப் படிக்கட்டுகளில் வண்ணங்களில் ஜொலிக்கும் பிள்ளையார், உணவு மேஜையில் குடையோடு வீற்றிருக்கும் பிள்ளையார் என வீடு முழுக்கத் தரிசனம் தருகிறார்கள் பிள்ளையார்கள்!
''சங்கீதத்துக்கு இணையா என்னை இயக்கும் இன்னோர் அம்சம்... விநாயகர். கணபதி, கண நாயகா, கணபதி மகராசா, விக்னேஸ்வரானு எப்படி அழைச்சாலும் ஏற்றுக்கொள்ளும் விநாயகனை வணங்கினால் சங்கடங்கள் தானாக விலகும்.

சவால்கள் சாதனையாக மாறும். அதான் தீபாவ ளிக்கு அடுத்து இந்தியா முழுக்க உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி இருக்கு!'' - நெகிழ்வுடன் விநாயகர் பிரியம் பகிர்ந்துகொள்ளும் சுதா ரகுநாதன் வீட்டில் சுமார் 600 பிள்ளையார்கள் குடியிருக்கிறார்கள். ''எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல விருந்துக்காக பிரேமா அண்ணி வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க வீடு முழுக்க விநாயகர் சிலைகள்.

அந்தச் சிலைகளையே நான் பிரமிப்பாப் பார்த்துட்டு இருக்கிறதைப் பார்த்த அண்ணி, எனக்கு ஒரு சந்தனப் பிள்ளையாரைப் பரிசாக் கொடுத்தாங்க. அதுதான் என்கிட்ட வந்த முதல் பிள்ளையார். தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் பரிசாக் கொடுத்த வகையில் ஒரே வருஷத்துல 50 விநாயகர்கள் என் வீட்டுக்கு வந்தாங்க. 'விநாயகரே நம்ம வீட்டுக்கு விரும்பி வர்றார். அவரை உன் இஷ்ட தெய்வம் ஆக்கிக்கோ’னு அப்பதான் என் மனசுல பதிஞ்சது.

அப்புறம் எங்கே போனாலும் பிள்ளையார் சிலை வாங்காம இருக்க மாட்டேன். வெள்ளி, தங்கம், சந்தனம், லேப்பிஸ், கிறிஸ்டல், சோப்னு பல பொருட்களில் செய்யப்பட்ட பிள்ளையார்கள், சிவன் வடிவ விநாயகர், வீணை ஏந்திய விநாயகர், புத்தர் போன்ற விநாயகர்னு விதவிதமா சேகரிக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 28 வருடச் சேகரிப்பு இந்தப் பிள்ளையார்கள்!
எப்பவும் நான் விநாயகரை தெய்வம் என்ற அம்சத்தில் மட்டுமே அணுகுவேன். கிரிக்கெட் பிள்ளையார், கம்ப்யூட்டர் பிள்ளையார், சார்லி சாப்ளின் பிள்ளை யார்னு மார்க்கெட்ல ஃபேன்ஸியா இருக்கும் பிள்ளையார்களை வாங்க மாட்டேன். என் மகன், மகள்... ரெண்டு பேருமே 20 வயசைத் தாண்டிட்டாங்க. ஆனா, இப்பவும் வீட்ல ஏதோ ஒரு குழந்தை தவழ்ந்துட்டு இருக்கும் உணர்வைக் கொடுக்கிறாங்க என் பிள்ளையார்கள்.

வீட்டுக்கு புதுப் பிள்ளையார் வர்றப்போ, 'புதுப் பாப்பா வந்துடுச்சு’னு மகனுக்கும் மகளுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புவேன். உடனே அவங்களும் 'என்ன ஸ்பெஷல்? எப்படி இருக்கார்?’னு ஆர்வமாக் கேட்பாங்க.
என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச பிள்ளையார்னா, தம்புரா வாசிக்கும் பிள்ளையார். இவர் எப்பவும் நிதர்சன சந்தோஷத்துல இருப்பார். கச்சேரி மேடையில் நான் வாசிக்க உக்காந்துட்டா, யார் கைதட்டுறாங்க, யார் எந்திரிச்சுப் போறாங்கன்னுலாம் பார்க்க மாட்டேன்.

ஒருவிதமான மோனத்தவத்துல ஆழ்ந்துதான் பாடுவேன். அந்த உணர்வு தம்புரா பிள்ளையார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்கிறது என் நம்பிக்கை!
எப்பவும் விநாயகர் பாட்டுப் பாடித்தான் நான் கச்சேரியை ஆரம்பிப்பேன். இது என் குரு எம்.எல். வசந்தகுமாரி கத்துக்கொடுத்த பழக்கம். ஆனா, இத்தனை பிள்ளையார்களும் நிறைவேத்தாத ஏக்கம் ஒண்ணு இருக்கு எனக்கு. அது, என் கனவுல ஒரு தடவைகூட பிள்ளையார் வந்ததே இல்லைங்கிறது. சீக்கிரமே அவர் என் கனவுல வரணும்னு அடிக்கடி உருகி உருகிப் பாடுவேன்'' என்று தம்புராவை மீட்டியபடி திவ்யமான குரலில் பாடத் தொடங்குகிறார் சுதா ரகுநாதன்.

''பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா...
ஸ்ரீகணேசா... சரணம்!

Monday 10 December 2012

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

 
திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

விதிக்கப்பட்டதை அனுபவிப்பதேயன்றி வேறுஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் நம்முடைய முயற்சி, வேண்டுதல்கள், தியாகம் இவற்றிற்கெல்லாம் என்ன பயன்?
பரிகாரங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லையா? என்றால்,  இதற்கெல்லாம் பதில் விதியை அனுபவிப்பது தான். ஆனால் நம் விருப்பப்படி அனுபவிப்பது. அது எப்படி?

அனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத் வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம் தனிமனிதனாக இருக்கும் போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே ஆகும். அதே சமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன் குழந்தைகள் இவர்களின் மனநிலையையும் அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கிறது. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப் போவதில்லை அது தான் பிரச்சனை.

இதற்கு தீர்வு விட்டுக்கொடுத்தல், தியாகம், இவையெல்லாம் தான். இதற்கு உளவியல் தீர்வு போதுமே எதற்கு ஜோதிடம் என்று கேட்போரும் உண்டு. வெறும் உளவியல் முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் அதற்காகத்தான். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தம் ஆகாது. முழுஜாதகத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும்.

திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதற்கு முன். பிரச்சனைகள் என்ன என்பதை ஆராயலாம். பிரச்சனைகளை நாம் நான்காக வகைப்படுத்தலாம்.

  1. அறம் சாரந்த பிரச்சனைகள்
  2. பொருள் சார்ந்த பிரச்சனைகள்
  3. இன்பம் சார்ந்த பிரச்சனைகள்
  4. மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்

அறம் சார்நத பிரச்சனைகள்.
அறம் என்பது என்ன? மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவுஎடுக்கும் திறன். நியாயம் தரமம் இது போன்றவை. அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப் போகாமல் வரும் பிரச்சனைகள்.

பொருள் சார்ந்த பிரச்சனைகள்
பணம், வீடு, வாகனம், தொழில் இது போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள்.

இன்பம் சார்நத பிரச்சனைகள்
காதல், காமம், ஆடம்பரம், இலாபம் இது போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சாரந்த உடலினாலும் ஏற்படும் பிரச்சனைகள்.

மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்
இறப்பு, மறுபிறப்பு, தொடர்பான பிரச்சனைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம் பெற வாய்ப்பில்லை. காரணம் யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா? மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வைக் காண முடியும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தேவைகள் இவற்றை ஜோதிடத்தில் 12 பாவங்களாகப் பிரித்து பலன் காண்கிறோம். மேற்கூறிய பிரிவுகளும் ஜோதிடப் பாவங்களும் அதாவது ஸ்தானங்களும் என்ன என்றால்?

அறம் சாரந்த ஸ்தானங்கள் – 1, 5, 9
பொருள் சார்ந்த ஸ்தானங்கள் – 2, 6, 10
இன்பம் சார்ந்த ஸ்தானங்கள் – 3, 7, 11
மோட்சம் சாரந்த ஸ்தானங்கள் – 4, 8, 12


பிரச்சனைகள் எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை ஜோதிடத்தில் திசா புத்தி அந்தரம், என்ற ஜோதிடக் கணிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் திசாபுத்தி அந்தர அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சனைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம் கூட பெரிய பிரச்சனையாகி பிரிவு என்ற நிலைவரை வந்து விடும்.

சில சமயம் என்ன பிரச்சனை எதற்காக கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசாபுத்தி அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில் தான் கோபம் வரும் உதாரணமாக 3, 7, 11ம் சூட்சும அந்தர காலங்களில் காதல், காமம்,அந்நியோன்யம்,  திருப்பியின்மையினாலும் கோபம் வரும் அதைப் புரியாமல் நீங்கள் கோயில் கோயிலாக சுற்றினால் உங்கள் மேலும் கடவுள் மேலும் கோபம் தான் வரும் அப்பொழுது செய்ய வேண்டியது இருவரும் தனியாக சென்று இயற்கையை அனுபவியுங்கள்.

அறம் சார்நத காலகட்டங்களுக்கு தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சாரந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்தது.

இவ்வாறு செய்தால் குடும்பத்தில் பிரச்சனை வராதா என்றால் வரும் ஆனால் மறுநாள் அது தீரந்துவிடும். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்சனை பிரிவு வரைசெல்லாது.

இது தான் ஜோதிடம் கூறும் தீர்வு. ஒவ்வொரு பிரச்சனைகளையும் இவ்வாறு புரிந்து காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் திருப்தியாகவே அமையும்.