Tuesday, 4 September 2012

travel agency வைத்து லாபம் சம்பாதிக்க முடியுமா?



 மக்கள் தொகை பெருகி விட்ட இன்றைய சூழ்நிலையில்
ஒரு இடத்தில இருந்து
இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு வாகனம் என்பது
அனைவருக்கும் அவசியமாகிவிட்டது.

சொந்த வாகனம் வைத்திருப்பது என்பது அனைவருக்கும்
சாத்தியம் இல்லை.
எனவே பொது வாகனங்களை (Public Transport)நம்பி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு
இடத்திற்கு௦ செல்ல வேண்டிய அவசியமாகிறது.

பொது வாகனம் என்றால் பேருந்து போன்ற வாகனங்களில்
பயணம் செய்ய வேண்டிய
சூழ்நிலை இருக்கிறது.

ஆனால் பேருந்து போன்ற பொது வாகனங்கள் அவசரமாக
செல்ல வேண்டிய அல்லது குடும்பத்துடன் சௌகரியமாக
சென்று வருவது போன்ற சூழ்நிலைகளுக்கு சரியாக இருக்காது.

அது போன்ற நேரங்களில் பெரும்பாலானோர் தனியார்
வாகனங்களையே
பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

அதுவும் தற்பொழுது மக்களின் வாழ்க்கை தரம்
உயர்ந்து உள்ள சூழ்நிலையில் ஆட்டோ, கார், கால் டாக்ஸி
போன்றவற்றில்
பயணம் செய்யவேண்டும் என்பது சர்வ
சாதரணமாகிவிட்டது.

எனவே travel agency வைத்து நடத்தினால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லோராலும்
travel agency
வைத்து லாபம் சம்பாதிக்க முடியுமா?

Travels நிறுவனம் வைத்து வெற்றிகரமாக நடத்தி லாபம் சம்பாதிப்பதற்கு ஜாதகத்தில்
நான்காம் இடம் வலுவாக இருக்க வேண்டும்.

நான்காம் இடத்து அதிபதியும் வலுவான இடத்தில்
அமர்ந்து, நட்பு கிரகங்களுடன் கூட்டு சேர்ந்து,
நட்பு கிரக பார்வை பெற்றால்
Travels நிறுவனம் நடத்தி நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

Travel agency நடத்த வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்து,
உங்களது ஜாதகத்திலும் travel agency நடத்தி லாபம் சம்பாதிக்கும் அமைப்பு இருந்தால்
நீங்களும் முயற்சி செய்யலாமே?

No comments:

Post a Comment