Tuesday 4 September 2012

இரு தாரம் உண்டா


ஒருவனுக்கு ஒருத்தி என்ற பழமொழி நம் முன்னோர்கள் கூறியது.

காரணம் ஒருவனுக்கு ஒருத்தி என்றால் தான் அந்த குடும்பம் அமைதியான குடும்பமாக இருக்கும். குழந்தைகளும் நல்ல சூழ் நிலையில் வளர்வார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பு உள்ள குடும்பங்களிலேயே சில நேரங்களில் வேறு சில காரணங்களினால் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இன்றி பிரச்சனைகள் உருவாகின்றன.

இந்த சூழ்நிலையில் இன்னொரு தாரம் அமைப்பு கொண்ட ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும்.
நிறைய திரைப்படங்களில் இரு தாரம் கொண்ட ஆண் படும் பாட்டை அல்லது அந்த பெண் படும் பாட்டை பார்த்திருப்பீர்கள். சில சினிமாவில் சொல்லப்படும் கதைகள் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் அல்லது யாரோ ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிதான் சினிமாவாக வருகிறது.

சரி விசயத்திற்கு வருவோம். திருமண பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தங்களை மட்டும் பார்த்தால் போதாது. இது போன்ற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய சில முக்கியமான அம்சங்களையும் பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் களத்திரகாரகன் சேர்ந்துள்ள கிரகத்தை வைத்து பார்க்கும் கிரகத்தை வைத்து அந்த ஜாதகருக்கு இரு தாரம் உண்டா என்பதை தீர்மானித்து விடலாம்.

அது போன்று அமைப்புள்ள ஜாதகங்களை நிராகரித்து தேவை இல்லாத வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாமே.

No comments:

Post a Comment