Tuesday 4 September 2012

பதினோராம் இடத்தில் களத்திரகாரகன் இருக்ககூடாது.


பொதுவாக திருமணம் என்பது பெரியவர்களாக பார்த்து நிச்சயித்து ஊர் அறிய இன்னாருடைய மகள் இன்னாருக்கு மனைவி என்று திருமணம் என்ற வைபவத்தின் மூலமாக நடத்தி வைக்கின்றனர்.

அந்த தம்பதியரும் காலம் பூராவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற
பண்பாட்டின் அடிப்படையில்
வாழ்ந்தால் இவர்களை போன்று தம்பதியர் உண்டா
என்று அனைவரும் வியந்து வாழ்த்துவர்.

மற்றவர்கள் வாழ்த்தவேண்டும் என்பதற்காக ஒருவனுக்கு ஒருத்தி என்ற
பண்பாட்டில் வாழவேண்டாம் அவர்களுடைய வருங்கால சந்ததியாரின்
வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் ஈருயிர் ஓருயிராக வாழ வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இவையெல்லாம் சாத்தியமாகிறதா?

செய்திதாள்களில் இன்று அடைத்திருக்கும் செய்திகளே தகாத உறவினால்
ஏற்படும் தகராறு, விவாகரத்து, கொலைகள் போன்றவைதான்.

இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன?

ஒருவருக்கு சட்டபூர்வமான
வாழ்க்கை துணை அதாவது ஆணோ பெண்ணோ இல்லாமல் வேறு
ஒருவருடன் திருமணதிற்கு ஒப்பான தாம்பத்திய உறவு ஏற்படுகிறது
என்றால் அவருடைய ஜாதகத்தில் பதினோராம்
இடம் சுபமாக இருக்க கூடாது.
பதினோராம் இடத்தில் களத்திரகாரகன் இருக்ககூடாது.

பதினோராம் இடம் கெடாமல் இருந்தால் ஒருவருக்கு
திருமணதிற்கு இணையான தகாத தாம்பத்திய உறவு
வேறு ஒரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ ஏற்படலாம்.

பதினோராம் இடத்தில் களத்திரகாரகன் இருந்தாலும்
திருமணதிற்கு இணையான தகாத தாம்பத்திய உறவு
வேறு ஒரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ ஏற்படலாம்.

இதுபோன்று தகாத உறவிலிருந்து மீள்வதற்கு ஏதாவது வழி உண்டா?

நிச்சயமாக வழி உண்டு.

சில எளிய வழிபட்டு முறைகளை மேற்கொள்வதின் மூலமாக
தகாத உறவிலிருந்து விடுபட்டு நல்லதொரு வாழ்க்கையையும்
அமைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment