Sunday, 12 August 2012

சீன ஜோதிடம் ஒளிவு மறைவற்ற சேவல்

ஒளிவு மறைவற்ற சேவல்
நேரம் மாலை 5:00 முதல் 7:00 வரை
உரிய திசை மேற்கு
உரிய காலங்கள் இலையுதிர் காலம்; செப்டம்பர்; மாதம்
நிலையான மூலகம் உலோகம்;
யின்ஃயாங் யின்

http://www.chicagonow.com/blogs/love-in-time-of-foreclosure/rooster.jpg1909, 1921, 1933, 1945, 1957, 1969, 1981, 1993, 2005, 2017, 2029, 2041, 2053 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் சேவல் வருடத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொடரைப் படிப்போர் தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர் என்பதை முந்தையத் தொடர்கள்; மூலம் அறிந்திருப்பீர்கள். இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ் கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் சேவல் வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஜனவரி 22, 1909 - பிப்ரவரி 09, 1910
பிப்ரவரி 08, 1921 - ஜனவரி 27, 1922
ஜனவரி 26, 1933 - பிப்ரவரி 13, 1934
பிப்ரவரி 13, 1945 - பிப்ரவரி 01, 1946
ஜனவரி 31, 1957 - பிப்ரவரி 17, 1958
பிப்ரவரி 17, 1969 - பிப்ரவரி 05, 1970
பிப்ரவரி 05, 1981 - ஜனவரி 24, 1982
ஜனவரி 23, 1993 - பிப்ரவரி 09, 1994
பிப்ரவரி 09, 2005 - ஜனவரி 28, 2006


இனி இந்தத் தொடரில் சேவல் வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்ப்போம்.

சேவல்வாசிகள் பண்பாளர்கள். சமயோசித புத்தியுள்ளவர்கள். அனைத்தையும் கவனிக்கும் தன்மை மிக்கவர்கள். பகுத்தறியும் உணர்வுடையவர்கள். நேரடியானவர்கள். காரியங்களைக் குற்றமற பூர்ணமாகச் செய்பவர்கள். துறுதுறுப்புடனும், பயமற்றவர்களாகவும், பேச்சாளர்களாகவும், தம்பட்டம் அடித்துக் கொள்பவராகவும் இருப்பார்கள்.

கண்ணியம், நம்பிக்கை போன்ற குணங்களைப் பிறவிக் குணமாகக் கொண்ட சேவல் வருடத்தில் பிறந்தவர்கள், பழகுவதற்குகந்தவர்களாகவும், பெரும்பாலும் நல்ல உடை அணிபவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். நாணமும், பணிவும் கொண்ட சேவல்வாசிகள், தங்கள் தோற்றத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள். நாகரிகமான உடைகளை அணிய விரும்புவார்கள்.

சேவல்வாசிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணுபவர்கள். பயமறியாதவர்கள். உலகமே தவறு என்று சொன்னாலும், தங்கள் வழியை மாற்றிக் கொள்ள எண்ண மாட்டார்கள். எண்ணிய, நம்ப முடியாத, கற்பனை காணும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சில சமயங்களில் அதை நடத்தியும் காட்டி விடுவார்கள். அவர்களது பல திறப்பட்ட விநோதமான வழிகளும் முயற்சிகளும் அவர்களை பெரிதாகச் சாதிக்க வைக்கும்.

கூர்ந்த அறிவும், ஆராய்ந்துணரும் பண்பும் அவர்களை ஆழ்ந்த சிந்தனையாளர்களாகக் காட்டும். அவர்கள் தோற்பது மிக அரிது. சேவல்வாசிகள் நடைமுறையாளர்களாக இருந்த போதும், பெரிய கனவுகள் காண்பவர்களாக இருப்பர். அவர்கள் இயற்கையிவேயே தீரம் மிகுந்தவர்கள். தாங்கள் விரும்பியதை எப்படிப் பெற வேண்டும் என்பதை அறிந்தவர்கள். பெரிய இலட்சியத்தை அடையும் பாதையில் தடங்கல் ஏற்பட்டால், அதை எண்ணி வருந்தமும் கவலையும் கொள்வார்கள். ஆனாலும் அவர்கள் தோல்வியிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிடுவார்கள். அவர்கள் நீண்ட காலம் அமைதியாக இருப்பது மிக அரிது. எப்போதும் தங்களை ஏதாவது பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்ட வண்ணம் இருப்பார்கள்.

இவர்கள் இரு வகைப்படுவர். ஒரு வகை விசனப்படுபவர்கள். மற்றொரு வகை நன்கு பழகத்தக்கவர்கள்.

சீன ஜோதிடத்தில் சேவல்வாசிகள் சற்றே விநோதப் பாங்கு கொண்டவர்களாக இருப்பார்களாகக் கருதப்படுகிறார்கள். கனவுலகில் அதிகம் சஞ்சரிப்பார்கள். வண்ண வண்ண உடைகளை அணிந்து பிறரைக் கவரும் வகையில் விளங்குவர். தங்களைப் பற்றி கர்வம் இருக்கும். செய்யும் காரியங்களைச் சரியாக, திறம்பட, வரிசைப்படுத்திச் செய்வர். எல்லா காரியங்களிலும் நுணுக்கமான விசயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தும் கண்கள் கொண்டிருப்பார்கள். செம்மைவாதிகள். மனிதத் தவறுகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். கஷ்டமான காரியங்களைச் சவாலாக ஏற்றுக் கொள்வர். வாக்குவாதங்களைத் துவக்கி வைப்பதைப் பெரிதும் விரும்புவார்கள். தங்களைப் பற்றி செம்மையாகப் பேசவும் எழுதவும் கூடியவர்கள். எந்தப் பொருளைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றாலும், அவர்கள் அதில் தேர்ந்த ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் சவால் விட்டால், நீளமான சண்டைக்குத் தயாராக இருக்க வேண்டி இருக்கும். அவர்களது உடல் உரம் பிரமிக்கத் தக்கது. தங்களது கருத்துக்களை எத்தனை விலை கொடுத்தும் வெல்ல வைத்து விடுவார்கள். சில நேரங்களில் தவறு செய்கிறார்கள் என்ற பிறர் எண்ணினாலும், அது ஏதாவது ஒரு வகையில் சரியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அவர்கள் உருவாக்கவும், இருக்கும் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்ளவும் விரும்பாதவர்கள். ஆனால் கவனித்து, விருதுகளை வழங்க வேண்டும் என்று எண்ணுவர். விவாதத்திற்கும் சண்டையிடுவதற்கும் ஆவலாகக் காத்திருப்பர். முரட்டுதனமானவர்கள்.

பண விசயங்களில் மிகவும் சிறந்த வகையில் செயல்படுவார்கள். வரவுக்குள் செலவுகளை வைத்துக் கொள்ளும் சுயகட்டுப்பாடு இவர்களிடத்தில் உண்டு. கஞ்சத்தனம் இருக்காது. அதிக தயாள குணமும், பிறருக்கு கொடுத்துதவும் குணமும் அவர்களிடத்தில் இருக்கும். தாங்கள் சேகரித்த செல்வத்தைச் சரியான முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணிச் செயல்படுவார்கள். அதையே மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வார்கள்.

சேவல்வாசிகளை தன்னம்பிக்கை, ஆடம்பரம், ஊக்கம் ஆகிய குணங்களுக்கு அடையாளமாகச் சொல்லலாம். விசுவாசமும், நம்பகமும் மிக்க மனிதர்கள். ஒளிவு மறைவற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதில் எப்போதும் பின்வாங்க மாட்டார்கள். கீழ்தரமான குணமல்ல அது. உண்மையானவர்கள் என்ற காரணத்தாலேயே அத்தன்மையைக் கொண்டவர்கள். பிறரிடமும் அதையே எதிர்பார்க்கவும் செய்வார்கள்.

காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பதில் அக்கறையும் திறமையும் கொண்டவர்கள். சாதிக்கக் கிளம்பி விட்டால், செய்து முடிக்க வழியில் சிக்குவற்றையெல்லாம் திருப்பிப் போடாமல் விட மாட்டார்கள். அவர்கள் சுறுசுறுப்பான ஆவல்மிகுந்த மனத்தை ஆழமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் ஒரு போதும் அசைவற்று இருக்கவே மாட்டார்கள். சேவல்வாசிகள் சில விசயங்களுக்கு நேரம் எடுக்கவேச் செய்யும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த உலகத்தின் இயக்கங்களைத் தங்கள் கால அட்டவணைக்குள் புகுத்த முடியாது என்பதை உணர வேண்டும். அவர்கள் மிகவும் அற்புதமான விசயங்களையும் சாதிக்க வல்லவர்கள். ஆனால் அவர்கள் மிகவும் நுணுக்கமான விசயங்களை எப்போதும் கோட்டைவிட்டு விடுவார்கள்.

சமூகத்தின் மேல் அக்கறை உள்ளவர்கள். பழகுதற்கு இனிமையானவர்கள். கூட்டத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். அதனால் தன்னைப் பற்றியும், தான் சாதித்தவற்றைப் பற்றியும் பெருமை பேசும் தன்மை உடையவர்கள். அவர்களின் தொடர்ந்த இந்தப் போக்கு சில நேரங்களில் தொல்லையாகக் கூட அமைந்து விடும். சேவல்வாசிகள் தங்கள் மேல் எவ்வளவுக்கெவ்வளவு கர்வமாக இருக்கிறார்களோ, அதே அளவு தங்கள் வீட்டின் மேலும் குடும்பத்தார் மேலும் கர்வம் கொண்டவர்கள்.

செய்யும் பணிகளைச் செவ்வனேச் செய்வார்கள். அதனால் அவர்களின் வீடுகள் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் காணப்படும்.

தாராள மனப்பான்மையற்றவர்கள். இதை வெளிக்காட்டாமல் இருக்க தங்களைத் தன்னம்பிக்கையும் போராடும் தன்மையும் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்வர்.

அவர்கள் எல்லோர் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்க்க விரும்புவார்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பது மிகக் குறைவு. அதனால் அவர்கள் புகழாரம் சூட்டுவதைக் கேட்க பெரிதும் விரும்புவர்.

தொழில்
குறிக்கோளுடையவர்கள். வானளவு உயர எண்ணுவார்கள். தேர்தெடுத்த துறையின் மேல் தீவிரமான பற்று கொண்டு, வேலையைச் செய்து, பல புதிய யுத்திகளைப் புகுத்தி வெல்வர். இளமையிலேயே வாழ்க்கையை வாழ ஆரம்பித்து, தங்கள் இள வயதிலேயே வெற்றிப் படியில் மேன்மேலும் செல்வர். சுய வியாபாரத்தில் சிறப்பர்.

முக்கியமான காரியங்களை அவர்களைப் போல் சரிவரச் செய்ய யாராலும் முடியாது. ஆணையிடும் போது சரியான ஆணையைக் கொடுக்க வேண்டும். தேவைக்கேற்ப வேலையை மாற்றிச் செய்ய உடன்பட மாட்டார்கள். செய்யவும் விரும்பமாட்டார்கள். அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் வெற்றி பெறும் திறம் படைத்தவர்கள். விளம்பரம், கேளிக்கை, உணவகம் சம்பந்தப்பட்ட வேலைகளில் சிறக்க வாய்ப்புகள் உண்டு.

பண விசயங்களில் சிறந்தவர்கள். அவர்கள் மனிதக் குறைகளை என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அனுமதிக்கவும் மாட்டார்கள். அவர்கள் மனம் அறிவியல் ரீதியில் வேலை செய்து நடைமுறையுடன் ஒத்தக் காரியங்களைச் செய்யத் துடிக்கும்.

சேவல்வாசிகள் ஊக்கம் மிகக் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். இக்குணங்கள் அவர்களை வெற்றிகரமான நிலைக்கு உயர்த்தக் கூடியவை. அவர்கள் நல்ல நடிகர்களாகவும், நடனக் கலைஞர்கiளாகவும், இசைக் கலைஞர்களாகவும் இருப்பார்கள். பல் மருத்துவர், ஆயட்காப்பாளர், உதவியாளர், நூலகர் போன்ற தொழில்களிலும் ஈடுபடலாம். போர் படையில் சேர்ந்தால் மிகவும் சிறப்பான பணியைச் செய்யத் தக்கவர்கள்.

உறவு
நண்பர்களும் உறவினர்களும் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால், அவர்கள் உதவி கோரும் முன்பே சிக்கலைத் தீர்க்க முயன்று, வெற்றியும் பெறுவார்கள். அந்தக் குணம் சிக்கலில் மாட்டியவர்களுக்கு பிடிக்காத போதும், தீர்வு காணும் சமயத்தில் மகிழ்வர். நேரம் பற்றி அதிகம் எச்சரிக்கை குணம் உடையவர்கள். அவர்களுடன் பழகும் போது, நேரம் காலம் பார்த்து, திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பிறருக்கு உதவும் தன்மையில் நம்பகமானவார்கள்.

சேவல்வாசிகளின் ஒளிவுமறைவற்ற உண்மையான குணம், பல இடங்களில் சரிப்படாது. உணர்வுப்பூர்வமான மனிதர்கள் அவர்களால் பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அவர்கள் மிகவும் திடமான மனம் கொண்டவர்களுடன் பழகுவது நல்லது. அவர்களின் திடமான மனத்திற்குள் மிகவும் அன்பான இதயம் இருப்பதை அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சில சமயம் தங்கள் எண்ணமே சரி என்று அவர்கள் நடக்கும் போது, பிறருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் பல சமயங்களில் அவர்கள் எண்ணம் சரியானதாகவே இருக்கும்.

சேவல்வாசிகள் தங்கள் நண்பர்களையும் தங்கள் அன்பிற்குப் பாத்திரமானவர்களையும் மகிழ்வுடன் வைத்துக் கொள்ள பலவற்றைச் செய்யத் துணிவது குறிப்பிடத்தக்கது. அதில் வெற்றி பெறாவிட்டால், மிகவும் வருத்தமுறுவர். அவர்களது உண்மையான அன்பும், ஆதரவும், நேரடிக் கண்காணிப்பும் அவர்களிடம் நண்பர்களும் உறவினர்களும் அவர்கள் பால் அன்பும் மதிப்பும் மரியாதையும் கொள்ள வைக்கும்.

சேவல்வாசிகள் நேருக்கு நேர் பேசும் தன்மை அவர்களைச் சிறந்த ராஜீயவாதியாக கருத விடாது. தங்கள் மனத்தில் பட்டதை எடுத்துக் கூறும் போது, பிறரது உணர்வுகளை யோசிக்காமல் செய்வது பல சமயங்களில் பிரச்சினைகளில் மாட்டி விடும். பிறரை ஏன் வருத்தப்பட வைக்க வேண்டும்? சேவல்வாசிகள் எப்போதும் சரியாகவே செய்வார்கள் என்று மற்றவர்கள் எண்ண வேண்டும். அப்படி எண்ணினால் மனத்தாங்கல்கள் விலகி விடும். மற்றவர்களை மகிழ்விக்க விரும்புவார்கள். அவர்கள் ஏற்பாடு செய்யும் விழாக்கள் கேளிக்கைகள் நிச்சயமாகப் பெரியதாகவும், நீண்ட நாட்கள் நினைவில் நிற்பவையாகவும் இருக்கும்.

சுகாதாரம்
சேவல்வாசிகள் பெரும்பாலும் சுறுசுறுபானவர்கள். அவர்கள் தங்களை எப்போதும் இயக்கிய வண்ணம் இருப்பதால், உடல் நலம் நன்றாகவே இருக்கும். ஏதாவது நோய்வாய்பட்டாலும், வேகமாக அதிலிருந்து மீண்டு விடுவார்கள். எப்போதேனும் அதிகமாக நோய்வாய்பட்டால், அழுத்தத்துடனும் சோகத்துடனும் காணப்படுவார்கள்.

சேவல்வருடத்தைய பிரபலங்கள் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அசீம் பிரேம்ஜி, சுனில் மிட்டல், தீரஜ்லால் ஹிராநந்த் அம்பானி, தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, பக்தவச்சலம், கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, சனத் ஜெயசூர்யா, யுவராஜ் சிங், சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், மாண்டரின் சீனிவாஸ், அமைச்சர் ப. சிதம்பரம், ஆங்கிலப் எழுத்தாளர் ரட்யார்ட் கிப்லிங், நடிகர் பீட்டர் உஸ்தினாவ், ஜெர்மனியில் பிறந்து ரஷ்யாப் பேரரசியான காத்தரின் தி கிரேட்

அதிர்ஷ்ட எண்கள் 1,5,6,12.15,16,24,51

ஒத்துப் போகும் விலங்குகள் :
எருது, பாம்பு, டிராகன்

ஒத்துப் போகாத விலங்குகள் :
முயல், நாய்

முயல்வாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும் போது வௌ;வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருப்பு முயல்
(ஜனவரி 31,1957 - பிப்ரவரி 17,1958)

குணங்கள் கடின உழைப்பாளிகள். சுதந்திரமானவர்கள். சரியாகச் செய்பவர்கள். நிதானமற்றவர்கள். சமூகத்தின் முன் தங்களது பிம்பத்தை சரி செய்து கொள்வதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிப்பர். அவர்கள் சமூக தொண்டர்கள். தலைசிறந்த தலைவர்கள். அதிக ஒளிவுமறைவு அற்றவர்கள். இந்த அவர்களது குணம் பலரையும் வருத்தக்குடியது.

மர சேவல்
(பிப்ரவரி 13,1945 - பிப்ரவரி 01,1946
பிப்ரவரி 09,2005 - ஜனவரி 28, 2006)

குணங்கள் உண்மையானவர்கள். சிந்தனைவாதிகள். அடக்கமானவர்கள். சுயநலமற்றவர்கள். குழுவைச் சார்ந்து இருக்க விருப்பம் கொண்டவர்கள் என்பதால், நண்பர்களும் தெரிந்தவர்களும் அதிகம் இருப்பார்கள். எப்போதுமே மனிதர்களிடத்தில் கெட்ட குணங்களைத் தவிர்த்து நல்ல குணங்களை மட்டுமே கண்டு பழகுவர். வாழ்க்கையிலும் நல்லனவற்றையே நோக்குவர். அவர்களிடம் குறை என்று சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பித்தக் காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வேகம் இல்லாதது மட்டுமே. இது பெரும்பாலும் தங்கள் சக்திக்கு எட்டாத பணிகளை எடுத்துக் கொள்வதன் காரணமாக இருக்கும்.

பூமி சேவல்
(ஜனவரி 22,1909 - பிப்ரவரி 09,1910
பிப்ரவரி 17,1969 - பிப்ரவரி 05,1970)

குணங்கள் அறிஞர்கள். பண்பானவர்கள். ஒழுங்காகக் காரியங்களைச் செய்பவர்கள். விசயங்களை ஆராய்ந்து செயல்படுபவர்கள். பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்யக் கூடியவர்கள். வெற்றியால் ஊக்கம் கொண்டு, செயல்படுவர். உயரிய கருத்துக்களைக் கொண்டு, மற்றவர்களும் அதன் வழி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு சில சமயங்களில் மற்றவர்களை துன்புறுத்த வல்லதாக அமைந்துவிடும் என்பதால் மிதமாக நடந்து கொள்வது நலம் பயக்கும்.

உலோக சேவல்
(பிப்ரவரி 08,1921 - ஜனவரி 27,1922
பிப்ரவரி 05,1981 - ஜனவரி 24,1982)

குணங்கள் கடின உழைப்பாளி. நடைமுறைவாதி. அகம்பாவம், தற்பெருமை மிகக் கொண்டவர்கள். அந்தத் தற்பெருமையைப் பெரிதாக வெளிப்படுத்தும் நண்பர்களை எப்போதும் தேடிய வண்ணம் இருப்பார்கள். அவர்களது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உள்ள உறவுகளை தூரப்படுத்தும். எல்லாவற்றையும் ஆராயும் தன்மை மிக்கவர்கள். கற்பனை அதிகம். சந்தர்பங்களை பயன்படுத்திக் கொள்பவர்கள்.

நீர் சேவல்
(ஜனவரி 26,1933 - பிப்ரவரி 13,1934
ஜனவரி 23,1993 - பிப்ரவரி 09,1994)

குணங்கள் திறமை மிக்கவர்கள். கல்வியாளர்கள். நடைமுறைவாசிகள். புத்தி சாதுர்யத்தால் ஊக்கம் கொள்பவர்கள். உற்சாகமானவர்கள். சேவல்வாசிகளைச் சாந்தப்படுத்தும் தன்மை நீருக்கு உண்டு. அவர்கள் கூட்டத்தில் முக்கியத்தஸ்தர்களாக இருக்க வேண்டும் என்ற உணர்வு அதிகம் இல்லாதவர்கள். பேச்சுத் திறமை செம்மைப்படுத்தப் பட்டதாக இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பு, விசயங்களை கூர்ந்து கவனிக்கும் தன்மைகள் குறிப்பிட்ட காரியத்தைக் கவனமாகச் செய்வதில் நல்ல பலன் கிடைக்கும்.

நீங்கள் சேவல் வருடத்தில் பிறந்திருந்தால், மேற் சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர்.

சேவல் வருடப் பலன்கள்: சக்தி மிகுந்த வருடம். வாதம் விதண்டாவாதம் நிறையவே இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வருடமும் கூட. யாரும் யாருடையக் கருத்துக்களையும் கேட்க விரும்ப மாட்டார்கள். அதனால் பெருத்த வேற்றுமைகள் ஏற்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகமாகும். இருந்தாலும் யாரும் பெருத்த கஷ்டங்களை அனுபவிக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment