Tuesday 7 August 2012

வள‌ர்‌பிறை, தே‌ய்‌பிறை‌யி‌ல் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன?




அந்தக் காலத்தில் சந்திரன் நமக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வந்திருக்கிறது. ஏனென்றால் அப்பொழுது மின்சார விளக்குகள் எதுவும் கிடையாது. இரவு நேரங்களில் சந்திரனையே அடிப்படையாக வைத்து எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். அதனால் வளர்பிறை என்பதற்கு இன்றைக்கும் மக்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

திருமணம், கிரகப் பிரவேசம் இதற்கெல்லாம் வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வளர்பிறை போல வளர்ந்து, கணவன்-மனைவி இருவரும் பிரகாசமாக இருந்து 16 செல்வங்களுடன் வாழ வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள். அதேபோல கிரகப் பிரவேசம் செய்யும் போதும் வளர்பிறையைப் பார்க்கிறார்கள். ஏனென்றால், குடிபுகும் வீட்டில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டும். அதற்கு வளர்பிறையாக இருந்தால் விசேஷம் என்றும் சொல்கிறார்கள். இதேபோல, குழந்தைகளை முதன் முதலில் கல்விக் கூடத்தில் சேர்ப்பது, வேலையில் சென்று சேருவது, வியாபாரம் தொடங்குவது, வீடுகட்டத் தொடங்குவது போன்ற முக்கியமான விஷயங்களுக்கு வளர்பிறைதான் முக்கியம் என்று சொல்கிறார்கள்.
தேய்பிறை என்பது என்னவென்றால், நோய்க்கு மருந்தின்மை, அதாவது தேயவேண்டும். அதாவது நோய் விலக வேண்டும், தீர வேண்டும்.

அதற்காகத்தான் தேய்பிறை. அதற்கடுத்ததாக, கடன் அடைப்பதற்கு, கடன் வாங்குவதற்கு தேய்பிறை நல்லது. அறுவை கிசிச்சை செய்வதற்கும் தேய்பிறை நல்லது. தவிர, வழக்கு தொடரவும், விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறவும் தேய்பிறை நல்லது.

1 comment: