Sunday 12 August 2012

சீன ஜோதிடம் தோழமை நாய்

தோழமை நாய்
நேரம் இரவு 7:00 முதல் 9:00 வரை

உரிய திசை மேற்குஃவடமேற்கு
உரிய காலங்கள் இலையுதிர் காலம்ஃஅக்டோபர்; மாதம்
நிலையான மூலகம் உலோகம்
யின்ஃயாங் யாங்

கடவுளர்கள் வைத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல் முதலியன முதல் பத்து இடங்களில் வந்தன. நாய் நீச்சல் அடிப்பதில் சிறந்தது என்றாலும், பதினொன்றாவதாக வந்தது. ஏன் தாமதம் என்று கடவுளர்கள் கேட்டதற்கு, நீண்ட நேரம் நீச்சல் அடித்த பின்னர் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு, குளிர்ந்த நீரில் சுகமாக ஒரு குளியல் போட்டு விட்டு வர நேரம் ஆகிவிட்டது என்றாம் நாய். கடவுளர்கள் வாழ்த்தி வருடச் சக்கரத்தின் பதினொன்றாவதுச் சின்னமாக நாயைத் தெரிவு செய்து அறிவித்தார்கள்.

இந்தக் கதை நாய் ஏன் பதினொன்றாவதாக வந்தது என்பதைக் குறித்துக் கூறப்படும் கதை.

1910, 1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018, 2030, 2042, 2054 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் நாய் வருடத்தைச் சேர்ந்தவர்கள். கீழ் கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் நாய் வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பிப்ரவரி 10, 1910 - ஜனவரி 29, 1911
ஜனவரி 28, 1922 - பிப்ரவரி 15, 1923
பிப்ரவரி 14, 1934 - பிப்ரவரி 03, 1935
பிப்ரவரி 02, 1946 - ஜனவரி 21, 1947
பிப்ரவரி 18, 1958 - பிப்ரவரி 07, 1959
பிப்ரவரி 06, 1970 - ஜனவரி 26, 1971
ஜனவரி 25, 1982 - பிப்ரவரி 12, 1983
பிப்ரவரி 10, 1994 - ஜனவரி 30, 1995
ஜனவரி 29, 2006 - பிப்ரவரி 17, 2007

இனி இந்தத் தொடரில் நாய் வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்ப்போம். தோழமை மிக்கவர்கள். உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். நேரிடையான போக்குடையவர்கள். விசுவாசம், நம்பகத் தன்மை, உண்மை போன்ற குணங்களை நாய்வாசிகளின் குணங்களாகச் சொல்லலாம். அவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள். உலக மக்களுடன் கஷ்டப்படத் தயாராக இருப்பார்கள்.

அவர்கள் விளையாட்டு தன்மை கொண்டவர்கள். நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். அவர்கள் விரைவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். புத்திசாலிகள். சமன்பாடுடையவர்கள். கபடமற்றவர்கள். தந்திரசாலிகளாக இருக்க மாட்டார்கள். பொய் சொல்வதைத் தவறாக எண்ணுபவர்கள். உணர்வுகளில் அல்லாட்டம் கொண்டவர்கள். நாய்வாசிகள் தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பலர் கூடும் இடங்கிளில் பல சமயங்களில் நாணத்துடன் நடந்து கொள்வர். அவர்கள் நல்ல கவனத்துடன் சொல்வதைக் கேட்பவராக இருப்பார்கள்.

பிறவியிலேயே வீரர்களாக இருக்கும் நாய்வாசிகள் அருகில் இருப்பவர்களிடம் குலைப்பதோடு வார்த்தையால் கடிக்கவும் செய்வார்கள். தங்களது கடமைகளை அவர்களவிற்கு செய்யாதவர்களை விமர்சிப்பார்கள். எதிர்மறையாக சில நாய்வாசிகள் மிகவும் அமைதியாகவும் இருக்கக்கூடியவர்கள்.

இளைய நாய்வாசிகள் தவறுகளையும் நீதியற்றச் செயல்களைக் கண்டு கொதித்தாலும், முதிர்ந்த நாய்வாசிகள் வயது ஆக ஆக பெரும்பாலும் அவற்றைப் பெரிது படுத்தாமல் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து விடுவார்கள். இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் தவறான விசயங்களைச் சாடி, எதிர்த்து, பாதுகாப்பு அளிக்கும் அடிப்படை குணம் மட்டும் அவர்களிடம் எப்போதும் இருக்கும். அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும், நீதி கேட்டு போராடுபவர்களுக்கும் துணையாகப் பேச நாய்வாசிகள் என்றும் தயங்க மாட்டார்கள். முன்னின்று பணியாற்றுவார்கள்.

அவர்கள் தங்களையும், தங்கள் அன்பிற்குப் பாத்திரமானவர்களையும் மிகவும் பாதுக்காப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் தீவிர முக்கியத்துவம் அளிக்கும் குணம் கொண்டதால், அவர்கள் துயரத்தில் உள்ளவர்களை ஒவ்வொரு முறையும் காப்பாற்றத் தயங்க மாட்டார்கள். அவர்கள் தத்து பித்தென்று சில சமயங்களில் உளறினாலும், தவறை நேர் செய்யும் வரை ஓய மாட்டார்கள்.

அவர்கள் மேல் மற்றவர்கள் காட்டும் அக்கறை, சமுதாயத்தில் நடத்தப்படும் விழாக்கள் அவர்களைக் கவராது. கூர்மையான கண்களால், மனிதர்களைச் சரியாக எடை போட்டு அவர்களது உத்தேசங்களை அறிந்து கொள்ளும் திறமைப் படைத்தவர்கள்.

மனித இயற்கையைப் பற்றி தௌ;ளத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். நாய்வாசிகள் ஒருவரைப் பகுத்து அறிந்து கொண்டு விட்டால், பிறகு அவர்களது மனதை மாற்றவே முடியாது. அவர்கள் எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையில் பார்த்து உணர்வார்கள். நீங்கள் ஒரு நண்பர், இல்லாவிட்டால் எதிரி. அவர்கள் குணங்களை எடை போடுவதில் சமர்த்தர்கள்.

சரியான நேரத்தில், நாய்வாசிகள் நீண்ட நேரம் கடின உழைப்பைச் செய்யத் தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு ஓய்வெடுக்கவும் உற்றார் உறவினரோடு அன்பு கொண்டவர்களோடு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் நன்றாகவேத் தெரியும். அவர்களை வருத்தினால் பதிலுக்கு வஞ்சம் தீர்க்க, திறமையுடன் அவமானப்படுத்தாமல் விட மாட்டார்கள். சில சமயங்களில் செய்ததை, மறந்து, அதே வேகத்தில் மன்னிக்கவும் செய்வார்கள்.

பெரும்பாலான நாய்வாசிகளுக்கு நல்ல வசதியான வாழ்க்கை தானாகவே அமைந்துவிடும். எல்லா வசதிகளும் வீடும் அமையும். அவர்கள் எப்போதும் தங்கள் பொருட்களைத் தற்காத்துக் கொள்வார்கள். அதற்கு பெரு மதிப்பும் கொடுப்பர். வீடும் குடும்பமும் முதலிடம் பெறும். நாய்வாசிகள் அதில் சிறந்தவற்றைப் பெறும் வரை ஓய மாட்டார்கள்.

ஒத்துப் போகும் தன்மை, இரக்கம், விசுவாசம் ஆகிய குணங்களின் உருவமாக இருப்பார்கள். நாய்வாசிகள் அடிக்கடி அன்பான வார்த்தைகளைக் கூறி, தேவையான உதவிகரமான அறிவுரைகளைக் கூறி, பேசுவதைக் செவிமடுத்து, அவசியம் ஏற்படும் போது, தோள் கொடுத்துதவுவார்கள். சில சமயம் அடுத்தவர் வாழ்க்கையில் அதிகமாக பங்கேற்று, மூக்கை நுழைத்துக் கொள்வதும் உண்டு. அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல்படுவார்கள்;. அவர்களுக்கு பணம், சொத்து, வெற்றி ஆகியவை இரண்டாம் பட்சமே. விசுவாசம், நேர்மை, நம்பிக்கை கொண்ட இவர்கள் நல்ல திடமான கொள்கையுடன் இருப்பர்.

வீட்டை நன்கு நிர்வகிப்பார்கள். ஒழுக்கான வீடு அவர்களுக்கு முக்கியமானது. சுத்தமான வீடு, வேலையில் உதவி ஆகியவை அவர்களைச் சுறுசுறுப்பாகவும், பொறுப்பாகவும் செயல்படச் செய்யும். பணத்தைச் சாமர்த்தியமாகச் செலவு செய்வார்கள். வருங்காலத் தேவைக்குச் சேமிக்கவும் செய்வார்கள். நாய்வாசிகள் சில சமயம் கோபக்காரர்களாகவும், குறுகிய மனம் கொண்டவர்களாகவும் பிடிவாதக்காரர்களாகவும் இருப்பார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் பிரச்சினைகளைச் சரி செய்ய தனித்துச் செயல்பட முயல்வர்.

தொழில்
விலங்குகளில் மிகவும் பிரபலமான நாய் வருடத்தில் பிறந்தவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். கடமையிலிருந்து விலக எண்ண மாட்டார்கள். வேலைகளில் தங்கள் பங்கைச் சரிவரச் செய்வர். காரணங்களைச் செவிமடுப்பர். உதவிக்கு அழைப்பவர்களைத் தட்டிக் கழிக்க மாட்டார்கள். தங்களது பிரச்சினைகளை தள்ளி விட்டு, பிறருக்கு உதவ என்றும் தயங்க மாட்டார்கள். பொறாமை குணம் அற்றவர்கள். யாரையும் நேரடியாக எதிர் கொள்வார்கள். அவர்கள் விவகாரத்தில் தலையிடுதலை விரும்ப மாட்டார்கள். உடனடி பதில்கள் அவர்களிடத்தில் எப்போதும் இருக்கும்.

நாய்வாசிகள் செல்வந்தராக வேண்டும் என்ற ஆசை அற்றவர்கள். வாழ்க்கை வசதிகளைப் பெற வேண்டும் என்றும் எண்ண மாட்டார்கள். அவர்களது திறமையும் உடன் பிறந்த குணங்களும் அவர்களைச் சமுதாயப் பணியில் சிறப்பானவர்களாக்கும். அவர்கள் ஆசிரியர், மருத்துவர், செவிலியாக இருக்கும் பட்சத்தில் சிறப்பாகச் செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பவர்கள்.

நாய்வாசிகள் திடமான மனிதர்கள். எப்போதும் புதிய விசயங்களில் தேர்ந்த ஞானம் பெற விரும்புவர். ஆரம்பித்த வேலையை முடித்துக் காட்டுவர். அதனால் ஆரம்பிக்கும் முன்னரே, அந்த வேலையைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே ஆரம்பிப்பர்.

அவர்களது திடமான மனம், அவர்களை அறிவுரையாளர்களாகவும், மனோதத்துவ மருத்துவர்களாகவும் சிறப்பாகச் செயல்பட உதவும்;. அவர்கள் எந்தக் கடினமான சூழலையும் எதிர் கொள்ள வல்லவர்கள். நம்கபமானவர்கள். இரகசியங்களை காப்பாற்றத் தெரிந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் குணங்கள் கொண்டதால், தங்கள் விருப்பு வெறுப்புகளை மறைக்கத் தெரிந்தவர்கள்.

உடன் பணி புரிபவர்கள் நாய்வாசிகளை உதவிக்கு எப்போதும் அழைக்கலாம். புதிதாக கற்பதற்கும், வேலை பளுவைக் குறைப்பதற்கும் அவர்களை முழுவதுமாக நம்பலாம். மதிப்பு மிக்க வேலைகாரர்கள். காவலாளி, விஞ்ஞானி, அறிவுரையாளர், வீட்டை அலங்கரிப்பவர், விரிவுரையாளர், அரசியல்வாதி, மடாதிபதி, செவிலி, உதவியாளர், நீதிபதி, குரோகிதர் ஆகிய தொழில்களில் ஈடுபடத் தகுந்தவர்கள்.

உறவு
நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளத் தக்கவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் அடிக்கடி ஊக்கமும், நம்பிக்கையும் தரும் வார்த்தைகளைக் கூறி எப்போதும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யக் காத்திருப்பார்கள். அவர்கள் புகழ் பெற்ற மனிதர்களுக்கு நல்ல நண்பர்களாக தோழடையுடையவர்களாக இருப்பார்கள். தன் அன்பிற்குப் பாத்திரமானவர்களிடம் கோபப்படும் படி நடந்து கொள்ள வேண்டிய சந்தர்பத்திலும் அன்பின் காரணமாக ஞாயம் கற்பித்து இனிதாகவே நடப்பார்கள். நண்பர்களை பெற பாடுபடுவார்கள். நட்பிற்கு மதிப்புக் கொடுப்பர்.

நாய்வாசிகள் நண்பர்கள் விசயத்தில் மிகவும் மிதவாதிகள். உங்களை நண்பராக ஏற்றுக் கொள்ளும் முன்பு பல வித சந்திப்புகளும் பேச்சு வார்த்தைகளும் செய்த பின்னரே மெல்ல நட்பை வளர்த்துக் கொள்வர். உங்களை அறிந்து கொண்டு நண்பராக ஏற்றுக் கொண்டுவிட்டால், நீங்கள் அவர்களது உள்ளத்தில் நீங்கா இடத்தைப் பெற்று விடுவீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது நிச்சயம் வந்து நிற்பார்கள். உதவி செய்வார்கள்.

தங்களது வாழ்க்கையை பிரத்தியேகமானதாக ஆக்கிக் கொள்ள விரும்புவர். அவர்களது குடும்ப விசயங்களில் மூக்கை நுழைத்தால், இரகசியதாகச் செயல் பட ஆரம்பித்து விடுவார்கள். அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக ஆகிவிட்டால், மனம் திறந்து காட்டத் தயங்க மாட்டார்கள்.

நாய்வாசிகள் நம்பகமானவர்களாக இருந்த போதும், அவர்கள் மற்றவர்களை நம்புவது மிகக் கடினம். ஒருவரை தன் நண்பராக ஏற்க, பல காலம் பிடிக்கும். நம்பிக்கை கொள்ளாத வரை அவர்கள் பழகும் போது சற்றே கடினமானவர்களாகத் தோன்றும்.

காதல் என்று வந்தாலும், கடினமான நேரம் தான். கவலை, பத்திரமற்ற தன்மை, வியாகூலம் அவர்களைக் கண்டு பயந்தோடச் செய்யும். நாய்வாசிகள் உணர்வுப் பூர்வமானவர்கள். குறை காண்பவர்கள்.

சுகாதாரம்
நாய்வாசிகள் ஓய்வு எடுக்கக் கற்றுக் கொள்ளவும் விவேகத்துடன் நடக்கவும் கற்பது நல்லது. நாய்வாசிகள் ஆரோக்கியமானவர்கள். உடல் நிலை சரியில்லாததை அவர்கள் சோகத்துடன், வருத்தமுடன் இருப்பதைக் கொண்டே கணித்து விடலாம். நோயை எதிர்த்துப் போராடி மீண்டு வர நாய்வாசிகள் முயல்வர்.

நாய் வருடத்தைய பிரபலங்கள் சமூக சேவகி அன்னை தெரசா, இந்தியக் குடியரசுத் தலைவர்கள் பிரதிபா பாடில், ஆர். வெங்கட்ராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய பௌதிகவியலாளர் சுப்ரமணியம் சந்திரசேகர், சோனியா காந்தி, இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாடகி மெடோனா, விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கத் தொழிலதிபர் டோனால்ட் ஜான் டிரம்ப், இந்தியத் தொழிலதிபர் நாராயணமூர்த்தி, கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், மார்வன் சாம்சன் அத்தபட்டு

அதிர்ஷ்ட எண்கள் 1, 4, 5, 9, 10, 14, 19, 28, 30, 41, 45, 54

ஒத்துப் போகும் விலங்குகள் : குதிரை, புலி, முயல்.

ஒத்துப் போகாத விலங்குகள் : டிராகன், ஆடு, எருது, சேவல்
நாய்வாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும் போது வௌ;வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருப்பு நாய்

(பிப்ரவரி 02,1946 - ஜனவரி 21,1947
ஜனவரி 29, 2006 - பிப்ரவரி 17,2007)

குணங்கள் ஆக்ரோசமானவர்கள். மயக்கக் கூடியவர்கள். மன வலிமையால் ஊக்கம் பெறுபவர்கள். உண்மையானத் தலைவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் இருப்பதில் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். வசீகரமான, தன்னம்பிக்கையின் உருவமாக இருப்பவர்கள். ஓடிக் கொண்டே இருக்க விரும்புவர்.

மர நாய்
(பிப்ரவரி 14,1934 - பிப்ரவரி 03,1935
பிப்ரவரி 10,1994 - ஜனவரி 30,1995)

குணங்கள் தாராள மனம் கொண்டவர்கள். திடமும், பாசமும் மிக்கவர்கள். இவர்கள் தன்னம்பிக்கையை வளர்பதன் காரணமாக, கூட்டத்தில் அங்கம் வகிப்தையே விரும்புவார்கள். ஆரம்பத்தில் அமைதியாகக் காணப்பட்ட போதும், காலப் போக்கில் மிகச்; சிறந்த நண்பர்களாக ஆகும் தன்மை உடையவர்கள். வளைந்து கொடுக்கவும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளவும் அன்பான விசுவாசிகளாகவும் இருப்பார்கள்.

பூமி நாய்
(பிப்ரவரி 18,1958 - பிப்ரவரி 07,1959)

குணங்கள் நடைமுறைவாதிகள். எச்சரிக்கையுடன் செயல் படுவார்கள். புதிரானவர்கள். முன் ஜாக்கிரதைவாசிகள். நம்பகம், சாரும் தன்மை ஆகிய காரணங்களால் தலைசிறந்த தலைவர்களாக இருப்பார்கள். அவர்களது நேர்மை, உண்மையின் பால் கொண்ட கொள்கை அனைவருக்கும் ஆதரவு அளிக்கும் குணத்தை ஏற்படுத்தும். தங்களின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதோடு, பிறரையும் தன்னம்பிக்கையோடு செயல்பட ஊக்குவிப்பார்கள்.

உலோக நாய்
(பிப்ரவரி 10,1910 - ஜனவரி 29,1911
பிப்ரவரி 06,1970 - ஜனவரி 26,1971)

குணங்கள்
தாராள மனப்பான்மை, நீதி, திடம், கருணை உடையவர்கள். பணியிலும், உறவுகளிலும் பூரண பங்கு வகிப்பார்கள். தங்கள் மேலும் பிறர் மேலும் எதிர்பார்ப்புகள் மிகக் கொண்டவர்கள்.

நீர் நாய்

(ஜனவரி 28,1922 - பிப்ரவரி 15,1923
ஜனவரி 25,1982 - பிப்ரவரி 12,1983)

குணங்கள் தத்துவவாதிகள். உள்ளுணர்வு மிகக் கொண்டவர்கள். சுதந்திரமாக இருக்க, செயல்பட எண்ண மாட்டார்கள். இவர்கள் கூட்டத்தாருடன் சேரும் போது அதிகத் தன்னம்பிக்கை கொண்டு செயல்படுவார்கள். கூட்டத்தின் தலைவராக இருப்பதை விடவும் அங்கம் வகிப்பதையே அதிகம் விரும்புவார்கள். அவர்கள் விசுவாசம், பாசம், வளைந்து கொடுக்கும் தன்மை உடையவர்கள். கேளிக்கை பேர்வழியாக இருப்பார்கள். அனுபவிக்க அனுபவிக்க ஊக்கம் மிகக் கொண்டு உழைப்பார்கள். நீங்கள் நாய் வருடத்தில் பிறந்திருந்தால், மேற் சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர்.

நாய் வருடப் பலன்கள் : நாய் வருடம் தங்களைத் தாங்களே மதிப்பிட வைக்கும் வருடமாக அமையும். தொந்தரவுகள், போராட்டங்கள் இருக்கும். நாய் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் குணம் கொண்டதால், இந்த வருடத்தில் நேர்மையே முக்கிய விதியாக அமையும். கற்பனைக்கெட்டாத விசயங்களும் நடைமுறைப் படுத்தப்படும். பல எதிர்பாராத மாற்றங்கள் வரும். கண்ணியம், தாராள மனப்பான்மைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, அனைவராலும் ஆதரிக்கப்படும்.

No comments:

Post a Comment