Sunday 12 August 2012

கைரேகை சாஸ்திரம்

எதிர்கால பலன் கூறுதல் என்பதற்கு பல்வேறு வழிகளை நம் கலாச்சாரம் கண்டுணர்ந்து இருக்கிறது. மனிதனின் எதிர்காலம் மற்றும் அவ னை பற்றிய தகவல்களை உள்ளங் கையின் அமைப்பு மற்றும் அதன் வரி களை கொண்டு கணிக்க முடியும் என் பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூ பணம்.
கைகளில் உள்ள ரேகைகள் மட்டும ல்ல, கால்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் ரேகை அமைப்பையும் கொ ண்டு பலன் சொல்லுவது இந்த சாஸ் திரத்தின் கட்டமைப்பு. அதனால் தான் இதை கைரேகை சாஸ்திரம் என கூறா மல் முன்னோர்கள் ரேகை சாஸ்திரம் என அழைத்தார்கள். ரேகை சாஸ்திரம் என்பது விஞ்ஞானம் அல்ல.
ரேகை சாஸ்திரம் ஒரு கலை வடிவம். இங்கே நாம் கலைக்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது கட்டமைக்கப்பட்ட விதிகளும், அத னை நிரூபணம் செய்யும் சோதனைகளும் கொண்டது. கலை என்பது அடிப்படை அம்ச ங்களை கொண்டது ஆனால் அதை பயன் படுத்துவோர் பொருட்டு மாறுபடும். உதார ணமாக சோடியம் குளோரைடு என்ற உப்பை நீரில் அமிழ்த்தினால் கரையும் என் பது விஞ்ஞானம் கூறும் விதி. இதை உலகின் எந்த மூலையில் யார் செய்து பார்த்தாலும் நடைபெறும். காரணம் விஞ்ஞானம் மாறாதது.
ஓவியம் என்பது கலை அடிப்படையில் இப்படி ஓவியம் வரைய லாம் என்றாலும் உலகில் ஒரே போல ஓவியங்கள் இல்லை. கலாச்சாரம், சூழலுக்கு ஏற்ப அது பெரும் கலைவடிவமாக திகழு கிறது.
ரேகை சாஸ்திரம் என்பதும் ஒரு கலைவடிவம் தான். அடிப்படை விதி களை உணர்ந்துகொண்டு பயன்படு த்த துவங்கினால் ஓவி யம் போல பல வண்ணக் கலவையான மனிதர் களையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் வெளிப்படுத்தும்.
மனித இனத்தின் தனித்துவமான அடையாளம் உடலில் உள்ள ரேகைகள். கைரேகைகள் ஒருவ ருக்கு இருப்பது போல மற்றொரு வருக்கு அச்சு வார்த்தால் போல இருக்காது..! இதனால் தான் மனி த அடையாள குறி யாக ரேகைகள் எடுத்தாளப்படுகி றது. வாகனம் தயா ரிக்கும் நிறுவ னம் எப்படி ஓவ்வொரு வாகனத் திற்கும் தனித்துவமான என்ஜின் எண் தருகிறார்களோ அதுபோல இயற்க்கை ஒவ்வொரு உயிரு க்கும் தனித்துவமான அடையாளம் தருகிறது. அவ்வகையில் மனிதனின் தனித்துவமான அடையாளம் ரேகைகள்.
ஒவ்வொரு மனிதனின் மனோநிலை, செயல் நிலை க்கு ஏற்ப ரேகைகள் மாறுபடுகிறது. இதை உணர்ந்து ரேகை சாஸ்திரம் உருவாகியது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ரேகை சாஸ்திரத்தை உண்டாக்கியவர்களும் அதன் மூல வேராக இருந்த வர்களும் தமிழர்கள்.
குறிஞ்சி நில மக்களின் ஆதார தொழிலாக ரேகை சாஸ்திரம் இருந் ததாக இலக்கியங்கள் கூறுகிறது. முருகப்பெருமானிடம் வள்ளியும், வள்ளியிடம் இருந்து பிற மனிதர்களும் கற்றார்கள் என்கிறது தமிழ் செவிவழி கதைகள்.

No comments:

Post a Comment