Sunday, 12 August 2012

சீன ஜோதிடம் சாதுர்யக் குரங்கு

சாதுர்யக் குரங்கு

நேரம் மாலை 3:00 முதல் 5:00 வரை
உரிய திசை மேற்குஃதென்மேற்கு
உரிய காலங்கள் இலையுதிர் காலம்;ஃஆகஸ்ட்; மாதம்
நிலையான மூலகம் உலோகம்
யின்ஃயாங் யாங்;

http://coolaggregator.files.wordpress.com/2008/07/cloned_monkey.jpgகடவுளர்கள் வைத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு முதலியன முதல் எட்டு இடங்களில் வந்தன. ஆடு மற்றும் சேவலின் உதவியுடன் குரங்கும் கரையை வந்தடைந்தது. கடவுளர்கள் அவற்றை வாழ்த்தி வருடச் சக்கரத்தின் ஒன்பதாவதுச் சின்னமாக குரங்கைத் தெரிவு செய்து அறிவித்தார்கள் என்பது கதை.

இந்தக் கதை குரங்கு ஏன் ஒன்பதாவதாக வந்தது என்பதைக் குறித்துக் கூறப்படும் கதை.

1908, 1920, 1932, 1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016, 2028, 2040, 2052 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் குரங்கு வருடத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொடரைப் படிப்போர் தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர் என்பதை முந்தையத் தொடர்கள்; மூலம் அறிந்திருப்பீர்கள். இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ் கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் குரங்கு வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பிப்ரவரி 02,1908 - ஜனவரி 21,1909
பிப்ரவரி 20,1920 - பிப்ரவரி 07,1921
பிப்ரவரி 06,1932 - ஜனவரி 25,1933
ஜனவரி 25,1944 - பிப்ரவரி 12,1945
பிப்ரவரி 12,1956 - ஜனவரி 30,1957
ஜனவரி 30,1968 - பிப்ரவரி 16,1969
பிப்ரவரி 16,1980 - பிப்ரவரி 04,1981
பிப்ரவரி 04,1992 - ஜனவரி 22,1993
ஜனவரி 22,2004 - பிப்ரவரி 08, 2005

இனி இந்தத் தொடரில் குரங்கு வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்ப்போம்.

அழகானவர்கள். வசீகரமானவர்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். சுட்டித்தனம், புத்திசாலித்தனம், அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உடையவர்கள். விளையாட்டுத் தனத்துடன் எப்போதும் இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். சுறுசுறுப்பானவர்கள். அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் பேர் போனவர்கள். சவாலைச் சந்திப்பதில் சமர்த்தர்கள். தேர்ந்த ராஜீயவாதி. அறிஞர்கள். நினைவாற்றல் மிகக் கொண்டவர்கள்.

அறிவுத் தாகமும், புதியனவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகம் கொண்டவர்களாதலால், விசயங்களை தெரிந்து கொள்ளும் போதும் கிரகித்துக் கொள்ளும் போதும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். கற்றதனைத்தையும் படங்களாக தங்களது மனதில் பதித்துக் கொள்ளும் திறம் பெற்றவர்கள். அவர்கள் கண்ட, கேட்ட, படித்தறிந்த உண்மைகளை மிகத் துல்லியமான விசயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறம் படைத்தவர்கள். அவர்கள் முழுக்க முழுக்க இந்த நினைவாற்றலைச் சார்ந்தே இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் மனம் ஊசலாட வல்லது.

பிரச்சினைகளுக்குள் புகுந்து எளிதில் வெளியே வரத் தெரிந்தவர்கள். சுய பிரச்சினைகளையும் பிறருக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் எத்தனை பெரிதாக இருந்த போதும் சரியான வகையில் தீர்வு காண வல்லவர்கள். மிகவும் கடினமான பிரச்சினைகளை மிக எளிய வகையில் புது முறையில் தீர்க்கும் சக்தியைப் பெற்றவர்கள். அதனால் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் பாராட்டும் மதிப்பும் பெற வல்லவர்கள்.

அவர்களது சிறந்த கவர்ச்சிகரமான தோற்றத்தாலும்; நடந்து கொள்ளும் விதத்தாலும் சாதுர்யத்தாலும் அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்க்க வல்லவர்கள். அவர்களிடம் மிகச் சிறப்பான வசீகரிக்கக்கூடிய தன்மைகள் இருப்பதால், மற்றவர்களை ஈர்க்க வல்லவர்கள். குரங்குவாசிகளை மக்கள் மொய்ப்பர்;.

தாங்கள் எண்ணியது நடக்கவில்லையென்றால் பொறுமையின்றித் தவிப்பார்கள். கோபப்படுவார்கள். ஆனால் வந்த கோபம், வேகமாகவே தணிந்துவிடும். எந்தக் காரியமும் அவர்களுக்கு அசாதாரணமாக இருக்காது. அவர்கள் எதிலும் சிறப்பானவர்கள். தங்கள் மேல் வலிவான முழு நம்பிக்கை கொண்டவர்கள். தங்கள் சாதனைகளை எண்ணி மகிழ்வதில் குரங்குவாசிகளை மிஞ்ச யாராலும் முடியாது.

குரங்குவாசிகள் பண விசயங்களில் மந்திரவாதிகள் என்று கூட சொல்லலாம். அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றக் கூடியவர்கள். ஏமாற்றத்தை ஏமாற்றக் கூடியவர்கள். குரங்குவாசிகளை ஏமாற்ற நினைத்தால் மாட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்காது. குரங்குவாசிகளுக்கு பணம் அத்தியவசியமான ஒன்று. அதைப் பெரும்பாலும் அவர்கள் தட்டுப்பாடில்லாமல் வைத்திருப்பார்கள். இல்லையென்றால் அதைப் பெறும் காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் தாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதை அறிந்தவர்கள்.

தேவைப்படும் போது எதையும் மாற்றும் திறம் தங்களிடம் இருப்பதை அறிந்தவர்கள்;. குரங்குவாசிகள் எந்த காரியத்திலும் தங்களை முழ்கடித்துக் கொண்டு திண்டாட மாட்டார்கள். எதிர்ப்புகளும் கஷ்டங்களும் வந்த போது, அந்தக் காரியத்திலிருந்து வெளியே வரச் சமயம் பார்த்து, சாதுர்யமாக வெளியே வந்து விடுவார்கள். நேரம் காலம் பார்த்து காரியங்களைச் செய்வதில் வல்லவர்கள். எந்த விதத்திலும் நல்ல சந்தர்ப்பத்தைக் கண்டு கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க விரும்ப மாட்டார்கள். திட்டமின்றி எதையும் செய்யத் துணிய மாட்டார்கள். திட்டமிடுதலில் வல்லவர்கள்.

இயற்கையிலேயே மகிழ்வுடன் இருப்பார்கள். பயணம் செல்வதைப் பெரிதும் விரும்புவார்கள். அதையும் வசதியுடன் முதல் வகுப்பில் சிறந்த முறையில் செய்ய எண்ணுவார்கள். தங்கள் வாழ்க்கையில் சுவாரசியத்தை எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.

குரங்குவாசிகள் தாங்கள் விரும்பியதை கஷ்டமில்லாமல் பெறத்தக்கவர்கள் என்பதால் தாங்கள் சாதித்தவற்றை பற்றி அத்தனைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் வெகு விரைவில் ஆர்வத்தை இழக்கக் கூடியவர்கள். அதனால் செய்யத் தொடங்கிய காரியங்களை விரைவில் முடிக்க வேண்டும். இல்லையென்றால் பாதியிலேயே ஆர்வமற்று விட்டுவிடக் கூடியவர்கள்.

எதுமே ஸ்திரமானதல்ல என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து செம்மைப்படுத்திக் காட்டுபவர்கள். சில சமயம் தங்கள் செயலைக் கண்டு அசந்து போகக் கூடியவர்கள். குரங்குவாசிகளுக்கு செய்திகளைத் தெரிந்து கொள்வது விருப்பமான பொழுதுபோக்கு.

அசலானவர்கள். சாதுரியமானவர்கள். குரங்குவாசிகள் எப்போதும் முன் நிற்பவர்கள். அவர்கள் எண்ணம் நல்லதாக இருந்த போதும், சில நேரங்களில் அவர்கள் செய்யும் செயல்களும் பேச்சுக்களும் மற்றவர் மனதைப் புண்படுத்துவதாக அமையக் கூடும்.

அறிவும், ஆற்றலும், ஆக்கபூர்வமும் பிறவியிவேயே உள்ள போதும், பல சமயங்களில் அந்தத் தன்மைகளை வெளியே காட்ட மாட்டார்கள். அது வெளியே தெரியும் போது, மற்றவர்கள் குழம்பி விடுவார்கள். அவர்கள் தான் என்ற அகந்தை மிகக் கொண்டவர்கள். அது அவர்களுக்கு பல சமயங்களில் நல்லதைச் செய்யக் கூடியதும் உண்டு.

குரங்குவாசிகள் கிராம வாழ்க்கையை விட நகர வாழ்க்கையையே அதிகம் விரும்புவார்கள். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களைக் கூர்ந்து கவனிப்பதில் நேரம் கழிப்பதை பொழுதுபோக்காகக் கொள்ள விரும்புவார்கள்.

தொழில்
காரியம் செய்யத்துணிந்து விட்டால், கடின உழைப்பாளியாக இருப்பார்கள். பெரிய காரியங்களைச் சிறப்பாகச் செய்யும் திறம் படைத்தவர்கள். அவர்களிடம் இருக்கும் திறமையும் சுயமான அசலான காரியங்கள் செய்யும் தன்மையும் குரங்குவாசிகளை அதிர்ஷ்டசாலிகளாக்கும். அவர்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அதில் பிரகாசிப்பார்கள்.

மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு முறையேனும் முயன்று பார்த்து விட வேண்டும் என்று அனைத்துக் காரியத்தையும் செய்துப் பார்க்கத் துடிப்பார்கள்.அவர்களுக்கு நூற்றுக்கணக்கான யோசனைகள் தோன்றிய வண்ணம் இருக்கும். அவற்றில் பலவற்றை செய்து காட்டும் திறமும் பெற்றவர்கள்.

எந்த வேலையை எடுத்துச் செய்தாலும் அதைத் திறம்பட செய்ய முடியும். மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள். வேகமாக வேலையைச் செய்வார்கள். ஆனால் செய்யும் வேலைக்கு இரண்டு மடங்கு கூலியை எதிர்ப்பார்ப்பார்கள். அவர்கள் வங்கி மற்றும் கணக்கிடல் துறையில் சிறப்பார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவராக, விஞ்ஞானியாக, ஆய்வாளராக, கண்டுபிடிப்பாளராக அவர்கள் பிரபலமாவது மிகவும் எளிது. மேலும், பொறியாளர், பங்குச் சந்தை வியாபாரி, திரை இயக்குநர், நகை வியாபாரி, விற்பனையாளர், வியாபாரி ஆகிய தொழில்களில் சிறக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு.

உறவு
அவர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தங்கள் கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் மட்டுமே பழக விரும்புவார்கள்.

நண்பர்களிடம் விசுவாசமும் பக்தியும் உடைய குரங்குவாசிகள் எளிதில் காதல் வயப்படத் தக்கவர்கள். ஆனால் மிக விரைவிலேயே தாங்கள் விரும்பியதின் மேலுள்ள பற்றை ஆர்வமின்மையால் விட்டுவிட்டு மற்றொன்றை நாட வல்லவர்கள். அதேப் போன்று தங்கள் வேலையை நாட்டத்துடன் ஆரம்பித்த போதும், சில காலத்திற்குப் பிறகு விரும்பாமல் விட்டுச் செல்லக் கூடியவர்கள். அவர்கள் அடுத்தவர்களின் கருத்துக்களை செவி மடுத்துக் கேட்க விரும்ப மாட்டார்கள். இருந்தபோதும் அவர்களுடன் இருந்தால் அவர்களை கோபித்துக் கொள்ளவே முடியாது.

குரங்குவாசிகள் காதலில் சற்றே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எவ்வளவுதான் வெளிப்படையான மனம் உடையவர்களான போதும், சமயத்தில் தங்களது நல்ல உறவாக எண்ண முடியாத போது, அவர்கள் மேல் ஆர்வமற்று, பிரிய சற்றும் தயங்க மாட்டார்கள்.

குரங்குவாசிகள் உறவு விசயங்களில் விரைவில் பணியக் கூடியவர்கள் கிடையாது. எதிலும் விரைவில் ஆர்வம் இழக்கக் கூடியவர்கள் என்ற காரணத்தால், உறவுகள் பலமானதாக இருக்காது. எல்லாவற்றையும் மீறி யாரேனும் அதிகமாக நம்பி தன் துணையாக ஏற்றுக் கொண்டால், அந்த உறவை தங்கள் வாழ்நாள் முழுக்க தொடர முழுமையாகச் செயல்படுவார்கள்.

சுகாதாரம்
உணவு விவகாரத்தில் அவசர கதியில் உண்பதையே விரும்புவர். அவர்களிடத்தில் நேரம் எடுத்து முழு உணவை உண்ண அத்தனை ஆர்வம் இருக்காது. உண்பதில் நேரத்தை விரயமாக்குவது அவர்களுக்குப் பிடிக்காது.

நோயுற்ற போது ஓய்வு எடுப்பது நேர விரயம் என்று உணர்ந்த காரணத்தால், அவர்கள் நோய்வாய்ப் படுவது மிகவும் அபூர்வம். சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளும், செயல்பாடுகளும் அவர்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அவர்கள் நோய்வாய்படுவது பெரும்பாலும் பதற்றம் காரணமாக இருக்குமேயொழிய வேறு பெரிய காரணங்கள் இருக்காது.

குரங்கு வருடத்தைய பிரபலங்கள் இந்தியக் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத், கே. ஆர். நாராயணன், நகைச்சுவை நடிகர் கலைவாணர், இந்தியப் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, டாக்டர் மன்மோகன் சிங், இசை வல்லுநர் செம்மாங்குடி சீனிவாச ஐயர், விடுதலைப் போராட்ட வீரர் வ.ஊ.சி, பறவை நிபுணர் சலீம் அலி, கிரேக்க மன்னன் ஜூலியஸ் சீசர், நடிகை எலிசபெத் டைலர், பல்கலை அறிஞர் லியானார்டோ டா வின்சி

அதிர்ஷ்ட எண்கள் 3, 4, 5, 7, 16, 23, 34, 45, 54.

ஒத்துப் போகும் விலங்குகள் : டிராகன், எலி

ஒத்துப் போகாத விலங்குகள் : புலி, பாம்பு, பன்றி

முயல்வாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும் போது வௌ;வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருப்பு குரங்கு

(பிப்ரவரி 12,1956 - ஜனவரி 30,1957)

குணங்கள் ஆளுமை, உயிர்ப்பு, ஆக்கப்பூர்வம், எதிர்ப்புகளால் ஊக்கம் கொண்டு செயல்படுதல் ஆகிய குணங்களைக் கொண்டவர்கள். ஆற்றலும்;, நம்பிக்கையும் கொண்டவர்கள். குறிக்கோளை முடிவு செய்வதில் உள்ள சாமர்த்தியம் அதை அடைவதிலும் இருக்கும். எந்தச் சூழலிலும் தானே உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும் அவருடன் பழகுவதை மற்றவர்கள் விரும்புவர்.

மர குரங்கு
(ஜனவரி 25,1944 - பிப்ரவரி 13,1945)

குணங்கள் மற்றவர்களிடம் பேசப் பழகித் தொடர்பு கொள்வதில் கை தேர்ந்தவர்கள். அதனால் பலருடன் கலந்து பேசிக் கொள்ளும் தன்மை உடையவர்கள். கடின உழைப்பாளிகள். காரியங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் புரிந்துக் கொள்வதில் வல்லவர்கள். எச்சரிக்கையுடையவர்கள். வாய் பேச்சு அதிகம் இருக்கும். புரிந்து கொள்வதில் சாதுர்யம் இருக்கும். அமைதியற்றவர்கள்.

பூமி குரங்கு

(பிப்ரவரி 02,1908 - ஜனவரி 21,1909
ஜனவரி 30, 1968 - பிப்ரவரி 16, 1969)

குணங்கள் நற்குணமும், முறையோடு செயல்களைச் செய்யும் தன்மையும் கொண்டவர்கள். சமூக ஆர்வலர்களாக இருப்பார்கள். வாழ்க்கையை சரியான வகையில் வாழ விருப்பம் கொண்டவர்கள். வேலைக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நம்பத் தகுந்தவர்கள். எல்லா வேலையிலும் தங்கள் நூறு சதவீத முயற்சியை காட்டுவார்கள். பிறர் தங்களிடம் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சற்றே கடுகடுக்கும் தன்மை கொண்டவர்கள்.

உலோக குரங்கு
(பிப்ரவரி 20,1920 - பிப்ரவரி 07,1921
பிப்ரவரி 16,1980 - பிப்ரவரி 04, 1981)

குணங்கள் தன்னம்பிக்கை மிகக் கொண்ட குறிக்கோளுடையவர்கள். அதனால் எப்போதும் வெற்றி பெறும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் விரும்பத்தக்கவர்களாகவும், அன்பானவர்களாகவும் எண்ணப்பட்டாலும் அவர்கள் தனிமையை விரும்புவார்கள். அவர்கள் தங்கள் தொழில் முறை நண்பர்களிடமும், எஜமானர்களிடமும் விசுவாசம் உடையவர்கள். அன்பு, நேர்த்தி, உறுதி போன்ற குணங்களுக்கு சான்றாக விளங்குவார்கள்.

நீர் குரங்கு
(பிப்ரவரி 06,1932 - ஜனவரி 25,1933
பிப்ரவரி 04,1992 - ஜனவரி 22,1993)

குணங்கள் புத்திசாலித்தனம், கூடி வேலை செய்வதில் விருப்பம், பட்டும் படாமலும் நடந்து கொள்வது அத்தகையவர்களின் குணங்கள். அதிக உணர்வுப்பூர்வமானவர்கள். மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு அடிக்கடி மனச் சங்கடம் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். தங்கள் உணர்வுகளை வெளிக் காட்ட மாட்டார்கள். அதனால் அதை மறைக்க நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். அவர்களிடம்; பெரும்பாலும் குறிக்கோளிலிருந்து மிக எளிதில் நழுவும் தன்மை இருப்பதால், அவர்கள் ஒரே வேலையில் கவனம் செலுத்தினால், நிச்சயம் வெற்றி கிட்டும்.

நீங்கள் குரங்கு வருடத்தில் பிறந்திருந்தால், மேற் சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர். குரங்கு வருடப் பலன்கள்: எதுவானாலும் எல்லாமும் நிச்சயம் நடக்கக்கூடிய வருடம். பல அதிசயமான காரியங்கள் நடக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் உடைய வருடம். சாத்தியமில்லாத விசயங்களும் நடந்து வெற்றி தரக்கூடிய வருடம். எட்டுத் திக்கிலும் வெற்றி வெற்றி என்ற பேச்சே இருக்கும் என்ற காரணத்தால், யார் என்ன செய்தார்கள் என்பதே தெரியாமல் போகும். அதிர்ஷ்ட வருடம். இந்த வருடத்தில் யாரும் இல்லை என்ற பதிலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

No comments:

Post a Comment