Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 231 - இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்


காலியென்ற ராகுதிசை சந்திரபுத்தி
கனமில்லா மாதமது ஈரொன்பதாகும்
விதமில்லா மனைவி தன்னால் பொருளுஞ்சேதம்
வாலியென்ற குரங்கது போல் மாண்டுபோவான்
வகையான தேசம்விட்டு அலைவது பாரு
மாலையென்ற மனைவியால் சுகபோகமில்லை
மிகையான செல்வமதும் விரையமாகும்
மக்கள் முதல் மாடுடன் கோடாங்கேளே


இராகு பகவானின் திசையில் சிறப்புத்தராத சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 6 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: இன்னவிதம் என்று சொல்ல இயலாத வகையில் இதம் அறிந்து நடந்திடாத மனைவியால் பெரும் பொருட் சேதமும் இராமகாதையில் வரும் வாலியினைப் போல இச் சாதகன் மாண்டு போதலும் உண்டு. சுய தேசத்தைவிட்டு பரதேசத்தில் அலைந்து திரிதலும் மனைவியால் நற்சுகம் அடைதலும் இல்லாது போகும். மேலும் மக்களால் தான் அடைந்த பிற செல்வங்களாலும் கன்று காலிகளாலும் கேடே விளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் இராகு மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment