Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 197 - சூரிய மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


கூறப்பா கதிருக்கு வருஷம் ஆறு
குணமுள்ள புத்திநாள் நூத்தெட்டாகும்
பாரப்பா அக்னியால் பீடையுண்டு
பாங்கான அபமிருத்துப் பொருளுஞ்சேதம்
ஆரப்பா அறிவாளர்கள் பிதாமிருத்தியு
அரிதான வாணிபஞ்செல்யாகாது நஷ்டம்
கோளப்பா கண்ணோவாங் கனலே மீறும்
கொடுமையுள்ள நாளென்று கூறினோமே.


கதிரோன் என்றழைக்கப்படும் சூரிய மகாதிசை வருடம் 6 ஆகும். இதில் சூரிய பகவானின் பொசிப்பு நாள் 108 ஆகும். இக்கால கட்டத்தில் இவரது திசை நடக்கும் ஜாதகனுக்கு நெருப்பினால் பீடை ஏற்படும். உறவினர் பகையாகும். அபமிருந்து தோடம் ஏற்படும். வெகுவான பொருட்சேதம் நிகழும். தந்தையாருக்கு அரிஷ்டம் ஏற்படுவதுடன் கண்ணோய் ஏற்படுதலும் ஜுர உபாதை நேருதலும் ஏற்படும். கொடுமையான நாள்களாக இருக்கும் என்று போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்

No comments:

Post a Comment