Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 184


பாடினே னின்னமொன்று ஆறோனோடே
பகர்லெக்கினசாமியவன் சேர்ந்துவாழ
கூடினேன் கரும்பாம்பும் குலவிநிற்க
கொடுமருந்தால் சாவுவரும் கொடுத்திடாதே
தேடினேன் சனியொருகோள் சேர்ந்தானாகில்
தேடிவரும் ஜலகண்ட நிராயணந்தான்
நாடினேன் நவக்கிரக சாரங்கண்டு
நன்மையுடன் புலிபாணி நூலைப்பாரே.


இன்னுமொரு கருத்தினையும் நான் விளக்கமாகக் கூறுகிறேன். அதனையும் நீ கேட்பாயாக! இலக்கினாதிபதிக்கு ஆறுக்குடையோனுடன் இலக்கினத்திலுறைய அவ்விடத்தே கரும்பாம்பு எனும் இராகுவும் சேர தீய மருந்தீட்டால் அச்சாதகனுக்கு மரணம் நேரும். அவரோடு சனியும் சேர்ந்தானேயாகில் ஜல கண்டத்தால் நிராயணம். இதனை நன்கு நவக்கிரகங்களின் சார பலம் கண்டு தெளிவாக அறிவுறுத்துவாயாக என்று போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment