Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 171


வாரே நீ யின்னமொன்று வழுந்தக்கேளு
வளர்மதியும் நல்லவனா யமர்ந்திட்டாலும்
சீரே நீ சனியவனைப் பார்த்திட்டாலும்
செழுமையுள்ள சந்திரனார் திசையைக்கேளு
கூறே நீ குமரனுக்குப் பசும்பொன்கிட்டும்
குவலயத்தில் கடன் கொடுப்போன் வேந்தனுக்கு
பாரே நீ யாய்மதியும் பூசம்மூணில்
பகருவாய் புலிப்பாணி குறித்திட்டேனே.


மேலும் ஒரு கருத்தினைச் சொல்கிறேன். அதனையும் நீ மிகவும் கவனமுடன் கேட்பாயாக! வளர்பிறைச் சந்திரனும் நல்லவனாய் அமைந்து அவனைச் சனி பார்த்திட்டாலும் சிறப்பருளும் சனியினால் செழுமையுள்ள சாதகனுக்கு சிறப்புமிக்க பசும்பொன் கிட்டுதலோடு இவன் லேவாதேவி செய்வான். இத்தகைய செல்வன் மந்தனாகிய சனிபகவானின் திருநட்சத்திரமான பூசத்தின் மூணாம் காலில் நின்றால் முழுப்பலன் என்று முறையோடு கிரகநிலவரமும் பிறவும் சேர்ந்து கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி நவின்றேன்.

No comments:

Post a Comment